பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/918

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

894 ஓர் புழைப்பாலூட்டிகள்‌

894 ஓர் புழைப்பாலூட்டிகள் அப்போது m. என்பது மிகச் சிறியதொரு பின்னமாகிவிடும். இப்பின்னத்தால் m என்னும் பொருளின் ஓய்வு நிறையை வகுத்து வரும் எண். மிகப் பெரிய எண்ணாகிவிடும். எனவே, மிக உயர்ந்த வேகத்தில் பொருள் இயங்கும்போது அதன் நிறையும் மிக உயர்ந்து விடுகின்றது. படம் - 1 இல் காட்டப் பட்டுள்ள வரைபடத்திலிருந்து வேகம் உயர நிறை மாறுபடும் வீதத்தைத் தெளிவாக அறிய முடிகின்றது. 0 12 10 4+ 1.0 படம் 1. வேகத்திற்கு ஏற்ப மாறுபடும் நிறை ஒரு பொருள் இயங்கும்போது அதன் நிறை மாறுபடும் என்னும் உண்மையிலிருந்து மற்றோர் உண்மையைப் பெறமுடியும் என்பதை ஐன்ஸ்டைன் திட்டவட்டமாக நிறுவினார்.பொருளின் திசை வேகம் உயரும்போது அதன் நிறையும் மிகுதியாகிறது. இயக்கத்திற்குக் காரணம் இயக்க ஆற்றல் (kinetic energy) என்றால் இதே இயக்க ஆற்றல்தான் நிறை உயர்வுக்கும் இருக்க வேண்டும். எப்போது உயர்கின்றதோ, இயக்க ஆற்றல் அப்போது பொருளின் நிறையும் உயரும் என்பதால், இயக்க ஆற்றலுக்கும், நிறை உயர்வுக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும். இதையே ஐன்ஸ்டைன் காரணமாக இயக்க ஆற்றல் = (m-m) c 2 எனும் சமன்பாட்டால் குறிப்பிட்டார். இதிலிருந்து பொருளின் மொத்த ஆற்றலைப் பெற முடியும். பொருளின் ஓய்வு நிலை நிறை ஆற்றலான m.c ஐக் கூட்டினால் மொத்த ஆற்றல் கிடைக்கும். + மொத்த ஆற்றல் (E) = இயக்க ஆற்றல் + ஓய்வுநிலை நிறை ஆற்றல் = mc உலகப் புகழ்பெற்ற இச்சமன்பாட்டால், ஐன்ஸ்டைன் பொருளும் ஆற்றலும் ஒன்றே என்னும் கருத்தை வெளியிட்டார். நூலோதி. S. Glasstone, மெ. மெய்யப்பன் Source Book on Atomic energy, D. Van Nostrand Co. Inc. London, 1959. ஓர் புழைப்பாலூட்டிகள் இயல்பாகப் பாலூட்டிகள் என்றால் குட்டி போட்டுப் பால் கொடுக்கும் விலங்குகளாகும். ஆனால் முட்டை யிட்டுப் பால் கொடுக்கும் விந்தை விலங்குகள் மானோட்ரிமேட்டா (Monotre.nata) என்னும் பிரிவிலுள்ளன. இவை உலகில் ஆஸ்திரேலியா, நியூ கினியா. டாஸ்மேனியா பகுதிகளில் மட்டுமே காணப் படுகின்றன. ப்ளீஸ்டோசீன் (Pleistocene) காலம் முதல் வாழ்ந்து வரும் இவ்விலங்குகளின் பழங்கால வரலாற்றினை இப்போது உலாவும் ஒரு சில விலங்குகளின் உடலமைப்பு, தகவமைப்பு, முதலிய வற்றின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. இத்தொகுதியில் வாத்தலகுப் பிளாட்டிப்பஸ் (Duck billad platypus) அல்லது ஆர்னித்தோரின்கஸ் (orni thorhyachus), முள்ளுடை எறும்புண்ணிகள் (spiny ant eaters) ஆகியவை உள்ளன. இவற்றின் கருப்பை சிறப்பாக வளர்ச்சியுறாமல் தொடக்க நிலையிலுள்ள தால் இவற்றை 'prototheria 'என்றும் கூறுவர். உடலின் பின் பக்கத்தில் மலப்புழையும் இனப்பெருக் கப் புழையும் தனித்தனியாக இல்லாமல் ஒரே ஒரு புழையாக மட்டுமே உள்ளதால் இவற்றை புழைப் பாலூட்டிகள்' என்றும் கூறுவர். ஒரு புழைப்பாலூட்டிகளில் ஊர்வனவற்றின் சில பண்புகளும். பாலூட்டிகளின் பண்புகளும் சில மூதாதை ஒன்று சேர்ந்து இருப்பதால் இவை ஊர்வனவற்றிற்கும் பாலூட்டிகளுக்கும் இணைப்புப் பாலம் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த ஒரு எண்ணிக்கையில் புழைப்பாலூட்டிகள் குறைந்து அழிவை நோக்கியிருப்பதால் இவற்றை வாழும் புதை படிவங்கள் என்றும் கூறுவர். பெர்மியக் (Permian period) காலத்தின் பிற்பகுதி யில் ஊர்வனவற்றில் நன்கு முன்னேற்றமடைந்த தெராப்சிடா (Therapsida) என்னும் ஒரு பிரிவிலிருந்து ஒரு புழைப்பாலூட்டிகள் தோன்றியிருக்கலாம் என தொல்லுயிரியலார் கருதுகிறார்கள். பிளாட்டிபஸிலும், எக்கிட்னாவிலும், தற்கால' மேம்பட்ட விலங்குகளில் ஒன்றான முயலைப்போல உணவுப் பாதை இருந்தாலும், பொதுப்புழையின்