பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/924

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

900ஓரியன்‌ ஒண்முகிற்‌ படலம்‌

900 ஓரியன் ஒண்முகிற் படலம் அல்லி நீண்டு நுனி அரை வட்டமாகவும், அடி குறுக லாக நகம் போலவும் இருக்கும். இந்த இதழின் அடி யில் கூர் குழல் (spur) போன்ற அமைப்புக் காணப் படும். பக்க இதழ்கள் இரண்டும் அரிவாள் வடிவில் காணப்படும். மேற்புற இதழ்கள் இரண்டும் சிறியவை. அனைத்து இதழ்களும் சிவப்பு வண்ணத்துடனும் விளிம்புகள் அடர் வண்ணத்துடனும் காணப்படும் மகரந்தத்தாள்கள் 5, ஒன்றாக இணைந்தவை. கீழ்ப் புறம் உள்ள 2 அல்லது 4 மகரந்தப் பைகள் ஒரு புறம் வீங்கியோ குழல் போன்ற நீட்சியுடனோ இருக்கும். சூலகம். முட்டை வடிவமும், 3 சூலிலைகளும் கொண்டது; சூலுறை ஒன்று, சூல்கள் பல; உட்சுவர் ஒட்டு முறையில் 3 இடங்களில் இணைந்து காணப் படும். சூல்தண்டு வளைந்திருக்கும். நுனி தலைவடி வம் கொண்டது. கோணலானது. கனி. வெடிகனி, 3 வரிகள் கொண்டது. விதை. குறைவு: உருண்டையானது. புறத் தோல் நொறுங்கத்தக்கது; வரிகள் கொண்டது. செடி களில் பூக்களையும், காய்களையும் ஆண்டு முழுதும் காணலாம். மகரந்தச்சேர்க்கை. பூச்சி மூலம் நடைபெறுகிறது. பூக்களின் வண்ணம், இதழிலுள்ள குழல் போன்ற பகுதி, மகரந்தப் பைகளிலுள்ள சுரப்பிகள் ஆகியவை பூச்சிகளை ஈர்க்கப் பயன்படுகின்றன. பயன், ஓரிதழ்த்தாமரையைப் என்று குறிப்பிடுவதுண்டு. நாட்டு புருஷரத்தினம் மருத்துவத்தில் ச்செடி பெரும்பங்கு கொள்கிறது. இது ஆற்றல் தரும் ஊட்ட நீர்மம் ஆகும். இது சிறுநீர்ப் போக்கைப் பெருக்க வல்லது. தோளிலும் சவ்வுப் பகுதிகளிலும் அரிப்பு ஏற்பட்டால் அதை மாற்றும் குணமுடையது. மலை இனத்தவர்களான சாந்தவர்கள். இச்செடியின் வேரைக் குழந்தைகளின் குடல் தொடர்பான நோய் களுக்குப் பயன்படுத்துகின்றனர். இலைகளையும், இளந்தண்டுகளையும் பொடி செய்து தேன் அல்லது பாகுடன் சேர்த்து உட்கொள்ளலாம். சிலர் இவற் றைக் கொண்டு சாறு தயாரிக்கின்றனர். வேரைக் காண்டு பாலின நோயான கோனேரியா மற்றும் சிறுநீர் நோய்கள் போன்றவை கட்டுப்படுத்தப் படும். இலைகளை எண்ணெயுடன் சேர்த்து மேற் பூச்சு மருந்து தயாரிக்கப்படுகிறது. இப்பூச்சிமருந் தால் தலையில் பற்றுப்போட்டால் குளிர்ச்சி ஏற்படு கிறது. ஆப்ரிக்காவில் இச்செடி சூல்கொண்ட அல்லது பிள்ளை பெறும் நிலையிலுள்ள பெண்மணி களுக்கு, நல்மகப்பேற்றுக்காக உணவுடன் கொடுக் கப்படுகிறது. செடியைக் கொண்டு தயாரிக்கும் சாறு நினைவாற்றலையும் வலிமையையும் கொடுக்க வல்லது. தி. ஸ்ரீகணேசன் ஓரியன் ஒண்முகிற்படலம் மிகவும் ஒளியுடைய ஒண்முகிற்படலங்களில் ஒன்றான ஓரியன் ஒண்முகிற்படலம் புவியிலிருந்து ஏறக்குறைய 500 பார்செக் (30.857 × 10"கி. மீ) தொலைவில் உள்ளது. 35 நொடிக் கோணமுடைய வில் நீளத் திற்குப் பரந்துள்ள இது வெற்றுக்கண்ணாலேயே பார்க்கக் கூடிய அளவிற்கு ஒளியுடையதாகும். அயனி யாக்கப்பட்ட ஹைட்ரஜனையும், பலவகைப்பட்ட மேகம் குழுக்கள் தூசு கலந்த பகுதியையுமுடைய ஓரியன் ஒண்முகிற்படலம் சாய்வு சதுர அமைப்பில் வெப்பம் மிகுந்த நான்கு விண்மீன்களை மையமாகக் கொண்டுள்ளது. இவற்றின் ஒளிர்மை சூரிய ஒளியை விட 3×1019 மடங்கு மிகுதியாக உள்ளது. ஓரியன் ஒண்முகிற்படலம் எக்ஸ் கதிர்களை வெளியிடுகின்றது. இதன் மெசையர் எண்ணிக்கை M 42 உம் பொதுப் பட்டியல் எண்ணிக்கை NGC 1976 உம் ஆகும். -பங்கஜம்கணேசன் ஓரியன்விண்மீன்குழு வான நடுவரையின் மீது அமைந்துள்ள ஓரியன்(orion) விண்மீன் குழுவின் முழுப்பகுதியையும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வாழும் மக்களால் காண முடியும். வானநடுவரை இக்குழுவை ஏறக்குறைய இரு சம பகுதிகளாகப் பிரிக்கிறது. அமைப்பில் இது வேடுவன் போலிருப்பதால் இதை வேடுவன் விண்மீன் குழு என்றும் கூறுவதுண்டு. இதன் வல ஏற்றம் (right ascension) 5 மணி 30 நிமிடம். நடுவரை விலக்கம் (declination) 0 ஆகும். ஓரியன் விண்மீன் குழுவில் பல ஒளிமிக்க விண் மீன்கள் உள்ளன. இக்குழுவில் உள்ள ஏறத்தாழ 73 விண்மீன்களின் பொலிவுப்பரிமாணம் பூஜ்யத்துக்கும் 5-க்கும் இடைப்பட்டதாகும். வேடுவனின் வலத் தோளில் திருவாதிரை (Betelgeuse ) எனப்படும் விண்மீனும், இடத்தோளில் பெல்லாடிரிக்ஸ் (Bella trix) எனப்படும் ?-விண்மீனும், இடக்கால் பகுதியில் ரீகல் (Kigel) என்னும் தீ-விண்மீனும் அமைந்துள்ளன. உடலின் மையப்பகுதியில் அல்னிலம் (Alnilam) எ என்னும் விண்மீன் அமைந்துள்ளது. திருவாதிரை. பெல்லாடிரிக்ஸ், ரீகல் என்னும் மூன்று விண்மீன்களும் ஏறக்குறைய நடுவரைக்கு அருகில் அமைந் துள்ளன.,நீ, விண்மீன்கள் இணைந்து உருவாகும் நாற்கர அமைப்பின் உள்பகுதியில் ஓரியன் பட்டை (orion belt) அமைந்துள்ளது. இப்பட்டை மூன்று இரண்டாம் தர விண்மீன்களாலானது. இவை முறையே அல்னிலாம். (e), அல்னிடாக் (Alnitak'(). மின்டாகா (Mintak, 8) ஆகும். இதன் தென் பகுதியில் வான