ஓரை 907
எலெக்ட்ரான் வோல்ட் உள்ள முதல் கிளர்வு நிலை 1.44 நிமிடத்திற்கு நீடிக்கிறது. அது சமான மாற்றங் களின் மூலம் சிறும ஆற்றல் நிலைக்கு இறங்குகிறது. தற்சுழற்சி 9,ஆற்றல் 155 கிலோ எலெக்ட்ரான் வோல்ட் கொண்ட இரண்டாம் கிளர்வு நிலை ஏறத் தாழ 240 ஆண்டு என்றஅரைவாழ் நேரம் கொண்டது. மிகப்பெரும் வாழ் நேரம் கொண்ட ஒருறுப்பிகளில் இதுவும் ஒன்று. . அணுக்கருவின் கூடு மாதிரி, அணுக்கரு கோள வடிவம் என்ற கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சில ஓருறுப்பிகளின் நிலைமாற்ற அரைவாழ் நேரத்தைப் பற்றிய கருதுகோள் வியப் பூட்டும் வகையில் சரியாயிருக்கும். பன்முனை அணுக் கருக்களில் அதன் ஊகங்கள் பிழையாக உள்ளன. மூடிய கூடுகளுக்கு வெளியே தேவையான அளவில் நூக்ளியான்கள் இருந்து. அவை அணுக்கருவை நீள்கோள வடிவத்துக்கு மாற்றிவிடுவதால் இம்முரண் பாடுகள் தோன்றுவதாகக் கருதப்படுகிறது. அணுக்கருக்களின் கிளர்வுற்ற நிலைகள் அசா தாரணமான நெடிய வாழ் நேரத்தைப் பெற்றிருப் பதை நீடுவாழ் ஒருறுப்பி என்ற சொல் குறிக்கிறது. ஓர் அணுக்கரு ஒரு கிளர்வுற்ற குவாண்டம் நிலையில் நன்கு வரையறுக்கப்பட்ட கிளர்வு ஆற்றல் (Ex), தற்சுழற்சி (J), சமானம் (ஈ) ஆகியவற்றுடன் இருக்க முடியும். இத்தகைய நிலைகள் நிலையற்றவை; அவை வழக்கமாக மின்காந்தக் கதிர்களை (காமாக் கதிர்கள்) உமிழ்ந்து குறை ஆற்றல் கிளர்வு நிலை களுக்கோ.. அணுக்கருவின் சிறும ஆற்றல் நிலைக்கோ இறங்கிவிடும். இந்தச் சிதைவு நிகழும் வீதத்தை அரைவாழ் நேரம் (half life) என்ற அளவு குறிப்பிடு கிறது. ஒரே கிளர்வு நிலையிலுள்ள மிகுதியான அணுக்கருக்களில் பாதி எண்ணிக்கையான அணுக் கருக்கள் சிதைவு அடைய ஆகும் நேரம் அரை வாழ் நேரம் எனப்படும். ஓர் அணுக்கருவில் ஒரு குறிப்பிட்ட கிளர்வு நிலை பிற கிளர்வு நிலைகளைவிட மிகுந்த நேரம் நீடிப்பதாயிருந்தால், அந்த நிலை நீடுவாழ் நிலை எனப்படும். நீடுவாழ் நேரத்தின் கீழ்வரம்பு தன்னிச்சையாக அமைக்கப்படுவதாகும். அதற்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பு இல்லை. நீடு வாழ்ஓருறுப்பித் தற்சுழற்சி கிளர்வுற்ற அணுக்கரு நிலைகள் பெரும்பாலும் காமாக் கதிர் களை உமிழ்ந்தே சிதைகின்றன. இந்தச் செயல்முறை நிகழும் வீதம் பெருமளவுக்குத் தொடக்கக் கிளர்வு நிலை. இறுதிக் கிளர்வு நிலை ஆகியவற்றின் தற்சுழற்சிகள். சமானங்கள் (parity). கிளர்வு ஆற்றல்கள் ஆகியவற்றைப் பொறுத்துள்ளது. குறிப் பாக இந்த வீதம் தொடக்க நிலை, இறுதிநிலை ஆகியவற்றின் தற்சுழற்சிகளுக்கு டை டயில் லான வேறுபாட்டையும், கிளர்வு ஆற்றல்களுக்கு இடையி லான வேறுபாட்டையும் மிகவும் நுட்பமாகச் சார்ந் இரை 907 துள்ளது. தற்சுழற்சிகளுக்கிடையில் மிகப் பெரும் வேறுபாடு இருந்தாலும், கிளர்வு ஆற்றல்களுக்கு இடையில் மிகச் சிறிய வேறுபாடு இருந்தாலும். காமாக் கதிர் உமிழ்வு பல மடங்கு குறைந்து விடும். தனால் சில கிளர்வுற்ற நிலைகள் அசாதாரணமான அளவுக்கு நெடு நேரம் நீடிக்கின்றன. அவை நீடுவாழ் ஓருறுப்பிகள் எனப்படும். தெரிந்த அனைத்து அணுக்கருக்களிலும் நீடுவாழ் நிலைகள் தோன்றுகின்றன. இருந்தாலும் மாய எண் களுக்கு (magic numbers) நெருக்கமான எண்ணிக்கை யில் நியூட்ரான்களும், புரோட்டான்களும் கொண்ட அணு க்கருக்களில் அவை பெருமளவில் காணப்படுகின்றன. மாய எண்கள் என்பவை அணுக் கருக்கூடுகளை நிறைவு செய்வதற்கான நியூட்ரான் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும். இவ்வாறு இருப்பது அணுக்கருவின் கூடு மாதிரி (shell model) கருத்துக்குச் சார்பான சான்றாகக் கொள்ளப் படுகிறது. எனவே இத்தகைய அணுக்கருக்களில், மிகக் குறைந்த கிளர்வு ஆற்றல்களில் உயர் தற்சுழற்சி யுள்ள நீடுவாழ் நிலைகள் இருக்கவேண்டும் என முன்னறிவிப்புச் செய்கிறது. அனைத்து நீடு வாழ் நிலைகளும் தற்சுழற்சி காரணமாக ஏற்படுபவையல்ல. சில அணுக்கருக்கள் சிறும ஆற்றல் நிலையிலிருந்து உயர் ஆற்றல் கிளர் வுற்ற நிலைக்குச் செல்லும்போது வடிவத்தில் பெரி தும் மாறி விடுகின்றன. இவ்வாறு உருக்குலைந்த வடிவம் அசாதாரணமான நிலைத் தன்மையைக் கொடுக்கிறது. இத்தகைய உருக்குலைந்த வடிவமுள்ள நிலைகள் நீடுவாழ் தன்மையைப் பெறுகின்றன. சில நிலைப்பாடு மிக்க அணுக்கருக்கள் பிளவின் மூலம் சிதைவடையும்போது இத்தகைய வடிவ நீடுவாழ் ஓருறுப்பி நிலைகள் (shape isomers) தோன்றுகின்றன. உயர்வேகத்தில் தற்சுழற்சி செய்யும்போது அணுக் கருக்களின் வடிவம் எதிர்பாராமல் மாறி விடும் வாய்ப்பு உள்ளது. இவற்றால் தோன்றும் நீடுவாழ் நிலைகளையும் வடிவ நீடுவாழ்நிலைகள் என வகைப்படுத்தலாம். அணுக்கருவிலுள்ள ஆக்கக்கூறு அணுக்கருத்துகள் களின் நுண்ணிய இயக்கங்களில் உள்ள வேறுபாடு களின் காரணமாகவும் நீடு வாழ் நிலைகள் தோன்றுவ துண்டு. இவற்றுக்கு இணைசேர் நீடுவாழ் ஒருறுப்பி நிலைகள் (pairing isomers) என்று பெயர். இத்தகைய ஒரு நிலையின் பண்பு அணுக்கருவின் சிறும நிலைப் பண்பிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கும். எனவே அதையும் நீடுவாழ் நிலை என்றே வகைப்படுத்தலாம். கே. என். ராமச்சந்திரன். ஓரை காண்க: இராசிச்சக்கரம்.