70 எக்ஸ் கதிர் நிறமாலை
70 எக்ஸ் கதிர் நிறமாலை அதன்வழியே X செ.மீ. தொலைவு பாய்ந்து, T செறி வுள்ள கற்றையாக வெளிவருமானால், = ITL I =l, ex=I, e= (H/p) px என்பது நேர்கோட்டு உட்கவர்தல் குணகம், ஈ/p= பொருண்மை உட்கவர்தல் குணகம் m= இன் மதிப்பு எக்ஸ் கதிரின் அலைநீளம், உட்கவரும் அணுவின் எண் ஆகியவற்றை மட்டுமே பொறுத்திருக்கும். மாதிரியின் இயற்பியல் வேதியியல் நிலையைப் பொறுத்ததன்று. கொடுக்கப்பட்டுள்ள சேர்மம் அல்லது கல்வையில் உள்ள ஆக்கக்கூறு, தனிமங்களின் பொருண்மை உட்கவர்தல் குணகங்கள் கூட்டுச் சார்புடையன. எடுத்துக்காட்டாக, = மாதிரியின் மொத்தப் பொருண்மை உட்கவர்தல் குணகம் என்றும் Pmr W1 என்பனவற்றை முறையே தனிமம் 1- இன் பொருண்மை உட்கவர்தல் குணகம், எடைப் பின்னம் என்றும், Pm W, என்பனவற்றைத் தனிமம் 2-க்கும், Pms, W, தனிமம் 3-க்கும் கொண்டால் Ang = நms Wx + me Ws + FasW + ... ஆகும். Wr Wg த 2 3 இம்முறையில் மாதிரி அணியின் விளைவு இல்லாத தால், சில சமயங்களில் இம்முறை எக்ஸ் கதிர் ஒளிர்வுப் பகுப்பு முறையைவிடப் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக, எக்ஸ் கதிர்க் குழாயிலிருந்து வெளி வரும் எக்ஸ் கதிர்களே உட்கவர்தல் முறைக்குப் பயன்படுகின்றன. அலுமினியம் போன்ற பொருள் களைப் படித்தரமாகப் பயன்படுத்தி, உட்கவர் குணகத்தைக் கணக்கிட்டு எக்ஸ் கதிர்களின் பண்பை அறிவது வழக்கம். ஈ - இன் மதிப்பு குறைவாக இருக்கும் கதிர்கள் கடின எக்ஸ் கதிர்கள் எனப்படு கின்றன. அவற்றின் ஊடுருவுதிறன் மிகுதி. "இன் மதிப்பு மிகுதியாக இருக்கும் கதிர்கள் மிருதுவான எக்ஸ் கதிர்கள் எனப்படுகின்றன. இவை எளிதாக உட்கவரப்படும். மாதிரிகளில் உள்ள தனிமங்களைக் கண்டறிய எக்ஸ் கதிர் உட்கவர் அளலிகள் பயன்படுகின்றன. இக்கருவியின் உறுப்பு அமைப்பு படம் - 6 இல் காட்டப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கலங்களின் வழியே எக்ஸ் கதிர்க் குழாயிலிருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்கள் பாய்ச்சப்படுகின்றன. ஒரு கலத்தில் ஆய்வுப் பொருளும் மற்றொன்றில் மாதிரியும் வைக்கப்பட்டு இருக்கும். அலுமினியத்தின் தடிப்பை மாற்றுவதன் மூலம், இருகலங்களிலும் சம உட்கவர் ர்தலை உண்டாக்க முடியும். உட்கவர்தலைப் பகுப்பான் மூலம் கண்டறியலாம். அலுமினியத்தின் தடிப்பு, மாதிரியில் உள்ள தனிமத்தின் அடர்வைப் பொறுத்தது. இம்முறையில் வளிம நீர்மப்பொருள் களைக் கையாள்வது மிகவும் எளிது. அளவறி பொருள் கொண்ட கலும் மாற்றுத்தடிப்பு கொண்ட அலுமிஸ்யும் (உட்கவர்தலுக்குவேண்டி) St s பகுப்பாவ் மாதிரி கொண்ட நாம் எக்ஸ் கதிர்க் குழாய் படம் 6. எக்ஸ் கதிர் உட்சுவர் அளவி அமைப்பின் விளக்கக் கோட்டுப்படம் எக்ஸ் கதிர் உடனொளிர்வு. ஒரு தனிமத்தின் மீது ஆற்றல் மிகுந்த முதன்மை எக்ஸ் கதிரைப் பாய்ச்சுவதன் மூலம் அத்தனிமத்தில் சிறப்பு எக்ஸ் கதிர்களை உண்டாக்கலாம். இம்முறைக்கு எக்ஸ் கதிர் ஒளிர்வு பகுப்பாய்வு என்று பெயர். இம்முறையைப் பயன்படுத்த வேண்டுமானால் பகுத்தாராய இருக்கும் தனிமத்தின் உட்கவர் விளிம்பின் அலைநீளத்திற்குக் குறைவான அலை நீளம் கொண்ட (அதாவது மிகுதியான ஆற்றல் உடைய) எக்ஸ் கதிர்களை வெளியிடும் இலக்கை எக்ஸ் குழாயில் பொருத்த வேண்டும். பொதுவாகத் தாமிரம் மாலிப்டினம், டங்ஸ்டன் ஆகிய உலோகங்கள் பயன்படுகின்றன. நிறமாலையின் வரிகளின் செறிவை அலைநீள வாரியாகக் கணக்கிடுவதன் மூலம் ஒளிர்வு நிறமாலை யைப் பதிவாக்கலாம். இம்முறைக்கு அலை நீள நிறப்பிரிகைமுறை என்று பெயர். இதற்கு ஒளிர் கதிர்களை ஒரு படிகத்தின் மீது பாய்ச்சினால்,அக் கதிர்கள் ஒளி விலகிப் பல கோணங்களில் சிதறும். அச்சிதறல் கோணங்கள் கதிரின் அலை நீளத்தைப் பொறுத்தன. பின்பு, கதிர்களின் செறிவைப் பல கோணங்களில் கணக்கிடலாம். இம்முறையின் உதவியால் நிறமாலையைப் பகுத் தாராய்வதற்குப் படம் - 7 இல் காட்டியுள்ளது போன்ற அமைப்புகள் பயன்படுகின்றன. எக்ஸ் கதிர்க் குழாயி