பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கட்டர்மன்‌ வினை

80 கட்டர்மன் வினை காற்றோட்ட ஜன்னல் படுகிறது. வரிசையில் அமைக்கப் பல்வகைக் கட்டமைப்புக்கள். வேளாண்மைத் தொழிலின் தேவைகளை அறுதியிட முடியாதவாறு புதிய வழிமுறைகளுக்கு ஏற்பப் புதுப்புது தேவை களும் உருவாவது இயல்பு. எவ்வகையிலும் குறிப் பிட்டுப் பிரிக்க இயலாத சில கட்டமைப்புகள் இவ் வகையில் சாரும். எ.கா.நீர் இறைக்கும் எக்கிக் கட்டடம், பண்ணைக் கருவிகளுக்கான கட்டடம், கதிரடிக்கும் உலர்த்தும் களம். பெரிய அளவில் உறுதியான கட்டமைப்புகள் இவற்றிற்குத் தேவையில்லை. கூரை வேய்ந்த சிறு போதும். குடிசையே செப்பனிடப்பட்டு நன்கு உறுதி செய்யப்பட்ட சமமான தரையையே கதிரடிக் கும் களமாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு அவ்வப் போதைய தேவைக்கும். பொருத்தத்திற்கும் ஏற்ற வாறு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும். ஆர்.எம். பத்மநாபன் கட்டர்மன் வினை அரோமாட்டிக் சேர்மங்களில் ஃபார்மைல் ஏற்றம், ஹாலோஜன் ஏற்றம் செய்யக் கட்டர்மன் வினை Gatlerman reaction) பயன்படுகிறது. கட்டர்மன் ஃபார்மைல் ஏற்றம் வினை கட்டர்மன்-காச் வினையில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட வினையே ஆகும். கட்டர்மன் - காச் வினையில் கார்பன் மோனாக்சைடு. ஹைட்ரஜன் குளோரைடு சேர்ந்த கலவை கரைந்த அரோமாட்டிக் சேர்மத்தின் ஊடே செலுத் தப்படுகிறது. இவ்வினையில் அலுமினியம் குளோரைடு வினையூக்கியாகப் பயன்படுகிறது. AICI, ஈதரில் C, H + Co + HCI CH .CHO + HC கட்டர்மன் ஃபார்மைல் ஏற்றம் வினையில் அரோமாட்டிக் சேர்மங்கள், சிங்க் சயனைடுடனும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடனும் சேர்த்து அரோமாட்டிக் ஆல்டிஹைடாக மாற்றப்படுகின்றன. கட்டர்மன் - காச் வினை அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பனுக்கு மட்டுமே உரியதாகும். ஆனால் கட்டர் மன் வினை பதிலீடு செய்யப்பட்ட அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்களான ஃபினால், அதன் ஈதர் ஆகியவற்றிலும் நடைபெறும். கட்டர்மன் ஹாலோஜன் ஏற்றம் வினை சாண்ட் மேயர் வினையில் சிறிது மாற்றம் செய்யப்பட்ட வினையாகும். சாண்ட்மேயர் வினையில் அரோ மாட்டிக் டைஅசோனியம் உப்புகள் குளோரின், புரோமின் ஆகியவற்றால் இடப்பெயர்ச்சி வினைக்கு உள்ளாகின் றன. காப்பர் குளோரைடு, காப்பர் புரோமைடு ஆகியன பொதுவாக ஹாலோஜனேற் றத்தில் பயன்படுகின்றன. கட்டர்மன் ஹாலோஜன் ஏற்றம் வினையில் காப்பர் குளோரைடு, காப்பர் புரோமைடு ஆகியவற் றிற்குப் பதிலாகக் காப்பரும், ஹைட்ரோ குளோரிக் அமிலமும் அல்லது காப்பர், ஹைட்ரோபுரோமிக் அமிலமும் சேர்க்கப்படுகின்றன. இம்மாற்றத்தால் வினைபொருளின் அளவு மிகுதியாகிறது. அ. சண்முகசுந்தரம் நூலோதி. Jerry March, Advanced Organic Chemistry, Wiley Eastern Limited, New York, 1986; 1.L. Finar, Organic Chemistry, Vol. I, ELBS, London. 1973. கட்ட விதி (நிலைமை விதி) ஒரு பொருள் திண்மம், நீர்மம், வளிமம் போன்ற பல நிலைகளில் இருக்க இயலும். எடுத்துக்காட்டாகத் திண்ம, நீர்ம, வளிம நிலைகளில் நீர் முறையே பனிக்கட்டியாகவும், நீராகவும், நீராவியாகவும் உள் ளது. அவ்வாறே கந்தகம் வளிம், நீர்ம், திண்ம நிலைகளில் உள்ளது. மேலும் இது திண்ம நிலையில் பல்வேறு புறவேற்றுமை உருக்களாக, ஊசிக் கந்தகம், சாய்சதுரக் கந்தகம். களிக் கந்தகம் என அமைந் துள்ளது. பாரா-அசாக்சி அனிசோல் (para-azoxyani- sole) என்னும் கரிமச் சேர்மம் திண்ம, வளிம நிலை களிலும், நீர்மப் படிகங்களாகவும் உள்ளது. இவ் வாறு ஒரு பொருள் பல நிலைமைகளில் (phases) இருக்கலாம்.ஆனால் அந்த நிலைமைகள் அனைத் தும் ஒன்றிணைந்து ஒரு நிலையான சமநிலையில் எந்தச் சூழ்நிலைகளில் இருக்க இயலும் என்பது பற்றி யும், எந்ததெந்தச் சூழ்நிலைகளில் ஒரு நிலைமையி லிருந்து அப்பொருளை, மற்றொரு நிலைமைக்கு மாற்ற இயலும் என்பது பற்றியும் விளக்கமாக அறிய வில்லார்டு கிப்ஸ் என்பார் கட்ட அல்லது நிலைமை விதியை (phase rule) உருவாக்கினார். இவ்விதி, வெவ்வேறு நிலைகளில் பல படித்தான அமைப்புகளின் தன்மைகளை அறிய உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நீர் ஒரு வளிமண்டல அழுத்தத் தில் (நீர்ம) நீர், (திண்ம) பனிக்கட்டியுடன் 0° C வெப்பநிலையில் சமநிலையிலுள்ளது. ஆனால் வெப்பநிலை 100°C ஆக இருக்கும்போது அதே ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீர்ம நீர், நீராவியுடன் சமநிலையிலுள்ளது. புறச்சூழ்நிலைகளான அழுத் தம், வெப்பநிலை ஆகியன மாறுதலடையும்போது