பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டற்ற வீழ்ச்சி 83

Physical Chemistry', Macmillan & Co. Newyork, 1965. கட்டற்ற வீழ்ச்சி 83 கட்டற்ற விழ்ச்சி அமைதி நிலையில் இருந்து புலியீர்ப்பு விசையால், மாறா முடுக்கத்துடன் (g) புவிமையத்தை நோக்கி விழும் ஒரு பொருளின் இயக்கம் கட்டற்ற வீழ்ச்சி (free fall) எனப்படும். இவ்வியக்கத்தில் காற்றால் ஏற்படும் தடை, உயரத்தைப் பொறுத்துப் புவியீர்ப்பு முடுக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு ஏறத்தாழ 9.8 மீ/நொடி-புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி எறியப்படும் ஒரு பொருளின் இயக்கமும் கட்டற்ற வீழ்ச்சி என்றே குறிப்பிடப்படும். அமைதி நிலையில் இருந்து ஒரு பொருள் விழு மாயின் 1 - நொடிகளுக்குப்பின் அதன் திசைவேகம், என இருக்கும். vt = g.t (1) தொடக்க நிலையில் பொருளின் திசைவேகம் கீழ்நோக்கி என இருந்தால், t - நொடிகளுக்குப் பின் அதன் கீழ்நோக்கிய திசைவேகம் என இருக்கும். V (கீழ்) v. + gt (2) தொடக்கத் திசைவேகம் . மேல்நோக்கி இருந் தால் t- நொடிகளுக்குப் பின் அதன் மேல்நோக்கிய திசைவேகம், " (மேல்) - v-gt (3) 10 20 30 என இருக்கும். இவ்வியக்கத்தில் மேல்நோக்கிய திசை வேகம் சீராகக் குறைந்து, பூஜ்யமாகும்போது பொருள் பெரும் உயரத்தை அடைந்திருக்கும். பின்னர் அது சீராகக் கீழே விழும். பல் கட்டற்ற வீழ்ச்சியில் இருக்கும் ஒரு பந்தின் நேரத்தைப் பொறுத்த, L நிலைகள் படம் 1-இல் காட்டப்பட்டுள்ளன. இப்புகைப்படம் ஒரே நிழற்படப் படலத்தில், குறிப்பிட்ட கால இடைவெளி யில் எடுக்கப்பட்டது. புவிக்கு மேல், மிக உயரத்தில் இருந்து விழும் பொருளின் முடுக்கம் மாறாதிருக்கும் எனக் கருத முடியாது. நியூட்டனின் விதிப்படி, பொருளுக்கும் புவிக்கும் இடையில் உள்ள ஈர்ப்பு விசை அவற்றுக் அ. க. 7- 6அ படம் 1. கட்டற்று வீழும் ஒரு பந்தின் பல நிலைகள் கிடையே உள்ள தொலைளின் இருமடிக்கு எதிர் விகிதத்தில் இருக்கும். இதனால் தொலைவு அதி கரிக்க அதிகரிக்க விசை வேகமாகக் குறைகிறது. மிக உயரத்தில் இருந்து (h) விழும் ஒரு பொருள் புவியை அடையும்போது அதன் திசைவேகத்திற் கான சமன்பாட்டைப் பெறத் தொலைவைச் சார்ந்த விசைச் சமன்பாட்டைத் தொகையிடல் தேவைப் படும். இவ்வாறு கணக்கிட்டால் இத்திசை வேகம் 2gh R R' + Rh V₁ = (4) எனக் கிடைக்கும். இங்கு R - என்பது புவி ஆரம்.