86 கட்டி மிகு நுண்ணுயிர்கள்
86 கட்டி மிகு நுண்ணுயிர்கள் தாய்ப் பறவையிடமிருந்து கருவிலேயே கோழிக் குஞ்சுக்குப் பிறவிக் குறையாகச் செலுத்தப்படுகிறது. ஆனால் ஃபெலைன் லுகிமியா வைரஸ் என்னும் மிகு நுண்ணுயிர் (feline leukemia-virus) பாதிக்கப்படும். பூனையின் உமிழ் நீரின் மூலம் மற்றோர் உயிரினத்துள் புகுகிறது. MMTU என்னும் மிகு நுண்ணுயிர் தாய் கொடுக்கும் மார்பகப் பாலின் மூலம் குட்டிக்குப் பரவுகிறது. இதை ஆராய்ந்து விளக்கியவர் பிட்னர் (Bittner) ஆவார். புற்றுநோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் தன்மை குறைவாகவுள்ள எலிகளிடம், புற்றுநோய்த் தாக்குதலுக்குப் பெரிதும் ஆளாகக் கூடிய வாய்ப்புடைய எலிகள் பால் குடித்தால், நாளடைவில் இந்த எலிக் குஞ்சுகள் மார்பகப் புற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இவ் வாய்வைப் பிட்னர் செய்து வெற்றி கண்டதால், தாய்ப் பாலில் கலந்துள்ள புற்றுநோயைத் தோற்று விக்கும் பொருளுக்குப் பிட்னரின் பால்பொருள் (Bittner's milk factor) என்னும் பெயர்ஏற்பட்டது. அண்மைக் காலத்தில் HTLV என்னும் ரீட்ரோ நுண்ணுயிர்,மனிதரிடம் நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோயையும், இரத்த வெள்ளணுப் புற்றுநோயையும் ஏற்படுத்துவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு ஜப்பானிலும், மேற்கு இந்தியர் வாழும் இடத்திலும் இந்நோய்கள் மிகுதியாக உள்ளன. இரத்தப் புற்று நோயால் தாக்கமுற்றவரின் உடலிருந்து எடுக்கப்பட்ட புற்று இரத்த வெள்ள ணுக்களை வெளியே ஆய்வுச் சாலையில் வளர்த்தால், இச்செல்களிலிருந்து HTLV என்னும் மிகு நுண்ணு யிர்கள் வெளிவருகின்றன. எய்ட்ஸ் எனப்படும் நோயினால் தாக்கப்பட்டவர்களின் உடலில் ஏற்படும் அனைத்துப் புற்று நோய்க்கும் இந்த HTLV என்னும் மிகு நுண்ணுயிர் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. டி.என்.ஏ. மிகு நுண்ணுயிர்கள் (D.N.A. Viruses). உயிரினங்களில் புற்று நோய்க்கட்டிகளை ஏற்படுத்தக் கூடிய மிகு நுண்ணுயிர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு வகை மனிதனை யும் தாக்குகிறது. மேலும் மனி தனுக்கு இரத்த மஞ்சள் காமாலை (serum jaundice) நோயை ஹெப்பட்டைடிஸ் என்னும் மிகு நுண்ணுயிர் (hepat- itis B.Virus) உண்டாக்குகிறது என்பதையும், இந்த ஈரல் நோய் பின்னாளில் ஈரல் புற்றுநோய்க் கட்டி யாக மாறும் என்பதையும் அனைவரும் அறிவர். பாபோ மிகு நுண்ணுயிர் (paopovirus), பாபில் லோமோ வைரஸ் (papillomo virus), பாலியோமா வைரஸ் (polyoma virus ) வாகுயோலேடிங்வைரஸ் (vacuolating virus) (பழைய பெயர் SV 40) என மூன்றுவகைப்படும். இந்நுண்ணுயிர்கள் புற்றுநோயல் பாபில்லோமா ஸவரஸ். லாத கட்டி, புற்றுநோய்க் கட்டி என்னும் இரண்டு வகைகளையும் ஏற்படுத்துகின்றன. முதலில் புற்று நோயல்லாத கட்டி ஏற்படுகிறது. சில ஆண்டுகளில் இது புற்றுநோய்க் கட்டியாக மாறி விடுகிறது. மேற்கூறியவாறு முதலில் புற்றல்லாத கட்டியை ஏற்படுத்துகிறது. பாபில்லோமா என்பது இதன் பெயர். நாளடைவில் இது புற்றுநோய்க் கட்டியாக மாறி விடுகிறது. சான்றாக முயல்களில் இது காணப்படுகிறது. இதே மிகு நுண்ணுயிர் மனித இனத்தில் மனித இனத்தில் பிறப்புறுப்புக் கட்டி, குரல்வளைக் சுட்டி, வார்ட் (wart) கட்டி போன்றவற்றை ஏற்படுத்தும், மேற்கூறியவை புற்று நோய் அல்லாத கட்டிகள் ஆகும். இவை நாளடை வில் கார்சினோமா ஸ்குவேமஸ்செல் என்னும் (squamous cell carcinoma) புற்றுநோய்க் கட்டிகளாக மாறக்கூடும். தாக்கப்பட்ட விலங்குகளாலும், சுற்றுப் புறத்தாலும் இந்நுண்ணுயிர்கள் பரப்பப்படுகின்றன. இதனால் மற்றோர் உயிரினம் தாக்கமடையக்கூடும். ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு உடல் உறவு மூலமும் இவை பரவுகின்றன. பாலியோமா வைரஸ் என்னும் வகை மிகு நுண்ணுயிர் பல உயிரினங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவ தாலேயே அப்பெயரைப் பெற்றது. (poly = பல). = ஆனால் இது மனிதனை மிகுதியாகத் தாக்குவதில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யான வகை SV 40 என்னும் மிகு நுண்ணுயிர் யற்கை யிலேயே குரங்குகளின் உடல் திசுக்களில் இருக்கும். இந்த வகைக் குரங்குகளிலிருந்துதான் இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது. குழந்தை களுக்கு இந்தத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டால், பிற்காலத்தில் இந்த மிகு நுண்ணுயிரியால் குழந்தை கள் தாக்கமுறுவதே இல்லை. ஆய்வுக்கூடத் திசு வளர்ச்சி ஆய்வில் குரங்கினுள் உள்ள மிகு நுண்ணு யிர் மனிதத் திசுக்களைப் பலவாகப் பெருக்கச் செய் தாலும், மனித உடலில் இவை எந்தப் பாதிப்பையும் உண்டாக்குவதில்லை. அண்மையில், SV 40 நுண்ணுயிருடன் தொடர்புடைய BK என்னும் நுண்ணுயிரும், JC என்னும் மிகு நுண்ணுயிரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையும் விலங்கினங் களை மட்டுமே தாக்குகின்றன. மிகு வகை-31. அடினோவைரஸ் வகை-12, வகை-18, இம்மூன்று மிகு நுண்ணுயிரிகளும் புதிதாகப் பிறந்த எலிகளிடம் புற்றுக் கட்டிகளை முனைப்புடன் ஏற் படுத்துகின்றன, ஆனால் மனித இனத்தில் இவை இப் பண்பைக் காட்டுவதே இல்லை, ஹெர்பீஸ் வைரஸ் எனப்படும் (herpes virus) மிகு நுண்ணுயிர்கள் பல வகைப் புற்றுநோய்க் கட்டிகளை முதுகெலும்புள்ள வற்றிடம் ஏற்படுத்துகின்றன. இவை மனித இனத்தி லும் அத்தகைய சுட்டிகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு மறைமுகமான சான்றுகளே மிகுதியாகும்.