90 கட்டுப்பாட்டு அட்டவணை (புள்ளியியல்)
90 கட்டுப்பாட்டு அட்டவணை (புள்ளியியல்) Rc ww.c AC உள்ளீடு SCR D₁ Dz படம் 1. கோணக்கட்டுப்பாட்டுத் தொடக்கிச் சுற்றுக் கொண்ட சிலிகான் கட்டுப்பாட்டுத் திருத்தியின் சுற்றமைப்பு. மாறுதிசை மின்உள்ளளிப்பின் கீழ் முனை நேர் முனையாக இருக்கும் போது தேக்கி C இருமுனை யம் D வின் மூலம் எதிர்த்திசையில் மின்ஏற்புச்செய் கிறது. கடத்தும் சுற்று மீண்டும் நிகழ்கிறது. D, எனும் இரு முனையம் பகுதிக்கடத்தித் திருத்து மின் முனையில் மாறு உயர் அழுத்தம் தோன்றுவதைத் தடுக்கிறது. தடையம் R ஐ மாற்றுவதன் மூலம் தொடக்கிப் புள்ளி கடத்தி மிகுதியும் கடத்தும் 0 இலிருந்து மின்னோட்டம் கடத்தாத 180° வரை மாறுபடக்கூடும். இவ்வாறாக உயர்ந்த அளவு வெளி யீடுவரை தொடர் கட்டுப்பாடு கிடைக்கும். எஸ்.சுந்தரசீனிவாசன் கட்டுப்பாட்டு அட்டவணை (புள்ளியியல்) பொருள்களின் தரத்தைக் குறிக்கும் ஒரு மையக் கோடு, வரையறுக்கப்பட்ட பொருள்கள் தரத்தி னின்று எந்த அளவு மாறுபட்டுள்ளன என்பதைக் காட்டக் கூடிய இரு தர எல்லைக் கோடுகளை இரு புறமும் கொண்ட ஒரு வரைபடமே கட்டுப்பாட்டு அட்டவணை (control chart) ஆகும். மையக் கோட்டின் மேல் புறமுள்ள எல்லைக் கோட்டிற்கு மேல் கட்டுப்பாட்டு எல்லை (upper control limit) என்றும், கீழேயுள்ள கோட்டிற்குக் கீழ்க் கட்டுப் பாட்டு எல்லை (lower control limit) என்றும் பெயர். சாதாரணமாக மையக் கோடு தடித்தும், மற்ற கோடுகள் புள்ளி பெற்றும் போடப்பட்டிருக்கும். இது ஒரு கிடை அச்சையும் (horizontal axis), ஒரு குத்து அச்சையும் (vertical axis) கொண்டதாயி ருக்கும். தெரிவு செய்யப்பட்ட கூறுகளின் தரங் களை ஏற்றுக் கொள்ளவும், ஒதுக்கித்தள்ளவும் இவ்வட்டவணை பயன்படுகின்றது. இரு பொறுத்துக் கொள்ளக்கூடிய எல்லைகளாக அமைந்திருக்கும் இக்கோடுகளைத் தாங்கும் எல் என்றும் கூறுவதுண்டு. ஏற்றுக் கொள்ளத்தக்க தரமுடைய கூறு ஏற்புடைக் கூறு (acceptance sample) எனப்படுகிறது. எல்லைக் கோடுகளுக்கு வெளியே உள்ள புள்ளிகளுக்குரிய கூறுகளின் தரங்கள், வரையறுக்கப்பட்ட தரங்களி னின்று மாறுபட்டவையாகக் கருதப்பட்டு, அக் கூறுகள் ஏற்றுக்கொள்ளத் தகாதவையாகின்றன. கட்டுப்பாட்டு அட்டவணையைக் கண்டவுடன் பத்தி கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா, இல்லையா என்பதை ஒரு தொழிற்சாலையின் மேலாண்மை கணிக்க இயலும். பொதுவாக 3ர பயன்படுத்தப்படுகின்றன. லைகள் (tolerence limits) தர அளவு மே. க.எ. சராசரி தீ.க.எ. உற் எல்லைகள் எல்லைக்குட்படவில்லை 30 எல்லைக்குட்படவில்லை 8 10 கூறு எண் கட்டுப்பாட்டு அட்டவணை வகை