பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கட்டுப்பாட்டிதழ்‌ இயக்கத்தொடர்‌

98 கட்டுப்பாட்டிதழ் இயக்கத்தொடர் நெம்புருள் இயங்கமைப்பு (cam mechanism). பொறியின் கட்டுப்பாட்டிதழ்கள் பொதுவாக நெம் புருள்களால் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு நெய் புருளின் பின்பற்றியிலும் ஒரு கட்டுப்பாட்டி தழ்த் தள்ளமைப்பு இருக்கும். இக் கட்டுப் பாட்டிதழ்த் தள்ளமைவு, அதன் தண்டுடன் (valve stem) நேரடியாகவோ, பிற தண்டுகளுடனோ தொடர்பில் இருக்கும். வடிவக் கட்டுப்பாட்டி தழ்களின் சில பொறிகளில் இந்த நெம்புருள் தண்டு, உருளைப் பாளத்திற்கு மேற்புறத்தில் இருக்கும். பெரும்பாலானவற்றில் நெம்புருள் தண்டு உருளைப் பாளத்தின் கீழ்ப் பகுதியில் உள்ளேயே இருக்கும். அவ்வாறு உள்ளே இருக்கும் நெம்புருள் தண்டுகளில் கட்டுப்பாட்டிதழ்த் தள்ளமைவு, தள்ளுந்தண்டுடன் பொருத்தப்பட்டிருக்கும். தள்ளுத்தண்டின் இருக்கை கருள்வில் ஊசலாடும் புயம் தாங்கி சரியீடு திருகு அச்சுத்தண்டு நெம்புருள் உருளி மேற் பகுதியில் அமுக்கும் தண்டு (push rod) அகலமாக இருக்கும். நெம்புருளின் கூம்புப் பகுதி கட்டுப்பாட்டி தழின் தள்ளமைவினைத் தள்ளுவதால் அதில் உள்ள தள்ளுத் தண்டு மேல் நோக்கி எழும். அவ்வாறு எழுகையில் அதனுள் இணைக்கப்பட்டிருக்கும் அழுத் தக் கட்டுப்பாட்டிதழின் தண்டு, கீழ்நோக்கிச் சுருள் வில்லின் விசையை மீறி அழுத்தும்போது கட்டுப் பாட்டிதழ் திறக்கும். இந்த நெம்புருள் தண்டு எந்திரப் பொறியின் வணரித்தண்டால் (crank shaft) இயக்கப்பட்டு அதன் வேகத்தில் பாதி குறைக்கப் பட்டுச் சுழன்று கொண்டிருக்கும். அவை இரண்டும் பற்சக்கரங்களால் பிணைக்கப்பட்டிருக்கும். பொறிகளில் ருக்கும். சிஎ சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டி நேரங்கணித்தல் (valve timing). கோட்பாட்டின் படி (theoretically), ஒவ்வொரு வீச்சின் தொடக்கத் திலோ இறுதியிலோ கட்டுப்பாட்டிதழ்கள் திறந்து மூடினாலும் செயல்முறையில் வரும்போது, பொறி யின் திறனை முழு அளவு பெறவும், எரிபொருள் வீணாகாமல் இருக்கவும், எரிந்த வளிமத்தை விரை வாக வெளியேற்றவும், கட்டுப்பாட்டிதழ்கள் முன் பின்னாகத் திறக்கவும் மூடவும் நேரமுறைப்படிச் செயல்படுகின்றன. நெம்புருள் தண்டில் உள்ள நெம்புருள்கள் அந்தந்த நேரத்தில் திறப்பதற்கேற்ற வாறு பொருத்தப்பட்டிருக்கும். சரியான நேரத்தில் இயங்குவதைக் கண்காணிப்பதற்கேற்ப வளை உருனள் யின் பற்சக்கரத்திலும் நெம்புருள் பற்சக்கரத்திலும் அடையாளக் குறிகள் இடப்பட்டிருக்கும். பொருத்தும் போது, சரியாகப் பொருத்தப்பட்டால் நேரங்கணித் தல் பணி இயல்பாகவே சரிவர நடைபெறும். 10° 25° வளை உருளைப் பற்சக்கரம் நெம்புருள் பற்சக்கரம் 1. படம் 3. நெம்புருள் இயங்கமைப்பு உள்ளழிமூடல் வழிமூடல் 60% படம் 4. நேரங்கணித்தல் வரைபடம் 2.உள்வழித் திறப்பு 3. வெளி 4. வெளிவழித் திறப்பு