100 கட்டுமானக் கருவிகள்
100 கட்டுமானக் கருவிகள் பொருள்களைச் செங்குத்துத் திசையில் மட்டுமே எடுத்துச் செல்வதால் அவற்றைப் பக்கங்களுக்கு எடுத்துச் செல்ல வேறு கருவிகள் தேவைப்படுகின்றன. எனவே. கனமற்ற பொருள்களைச் சிறு பணிகளுக்கு எடுத்துச் செல்ல மட்டுமே உயர்த்திகள் பயன்படு கின்றன. ஓந்தித்தூக்கி. இதில் ஓர் இயங்கும் நெடுங்கை, ஒரு சட்டகத்தின் மீது பொருத்தப்பட்டு உள்ளது. சட்டகத்தில் ஆற்றல் வழங்கும் அமைப்பும், பளு வேற்கும் வடங்களை ஏற்றி இறக்க நெடுங்கையை இயக்குவதற்கான எந்திர அமைப்பும் உள்ளன. நெடுங்கையின் உச்சியிலுள்ள கப்பியின் வழியாக வடங்கள் செல்கின்றன. முன்பு அனைத்து ஓந்தித் தூக்கிகளுமே நகரக்கூடியவையாக இருந்தன. அதாவது காற்றடைக்கப்பட்ட சக்கரங்கள் (tyres), விளிம்பு (flange) அமைப்புக் கொண்ட சக்கரங்களின் மீது ஏற்றப்பட்ட அடிச்சட்டத்துடன் (chassis) பொருத்தப்பட்டிருந்தன. மேலும் இவ்வகை எந்திரங் கள் நகர்ந்து நகரவேண்டிய இடத்தில் அனைத்து இயக்கங்களுக்கும், வேலைகளுக்கும் பயன்படுகின்றன. படம் 2. இருப்புப்பாதை முற்றத்தில் பாறையைத் தூக்கிச் செல்லும் செலுத்தமைப்பு எனினும், ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலியக் கோபுர ஓந்திகளும், ஏறு ஓந்திகளும் பரவலாகி வருகின்றன. இவை புறப்போக்குகள் தேவையற்ற மிக உயர்ந்த கட்டட வேலைகளுக்கு மிகவும் பயன்படுகின்றன. கிடைமட்டத்திலோ குறுக்காகவோ அமைந்த நெடுங் கைகள் கொண்ட இந்த எந்திரங்கள் கட்டுமானம் உயர உயரஉயர்கின்ற றன. மேலும், சில பகுதிகளைத் தங்கள் கோபுரத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலம் இவை உயர்கின்றன. நகரும் ஓந்திகளைப் போன்று விரைந்து இயங்கும் நெடுங்கைகளும் நேர்பாதை யிலான செயல்பாடு காண்டனவாக இருப்பினும் நெடுங்கையின் போக்கு வரையறுக்கப்பட வில்லை. செலுத்தமைப்பு, தாழ்வான கட்டடங்களின் கட்டு மானத்திற்குத் தேவையான மூலப்பொருள்களை ஏற்றுவதற்குச் செலுத்தமைப்புகள் (conveyor) அரி தாகப் பயன்படுகின்றன. ஒரு சட்டகத்தின் மேல் ஏற் றப்பட்டு நகரும்படி அமைக்கப்பட்டுள்ள முடிவற்ற வாரின் (endless belt) மேல் குறைந்த பளுவுடைய செங்கல் சிமெண்ட் மூட்டைகள் ஆகியவற்றைச் சுமந்து செல்லும் இந்த எந்திரத்தை ஒன்று அல்லது இரண்டு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களுக்குப் பயன்படுத்த இயலாது. இருப்புப்பாதை முற்றம் (yard) ஒன்றின் மேல். கற்களை ஏற்றிச் செல்லும் ஒரு செலுத்தமைப்பு படம் 2 இல் காட்டப்பட்டுள்ளது. அகழ் கருவிகள். இவ்வகைக் கருவிகள் செந்தர நில அகழ்வி (standard land excavator), துார்வாரி (dredger) row n வகைப்படுத்தப்படும். இவற்றுள் ஒவ்வொன்றும் பல்வேறுபட்ட இனங்களை உள்ள டக்கியிருக்கும். நிலஅகழ்வி. இக்கருவி வகையில் மண்ணையும், கல்லையும் தோண்டி எடுத்துச் செல்லும் தனிக்கருவி கள், கொட்டும் வேலையை மட்டும் செய்யும் கருவி கள், எந்திரங்களையும், பொருள்களையும் தூக்கி வேற்றிடத்திற்குக் கொண்டு செல்லும் கருவிகள் ஆகியன அடங்கும். மண்கோதி (shovel), அனைத்து இழுப்பி (drag- line). அனைத்து வெட்டி (back hoe), பல்வகை வாளிகள் கொண்ட ஓந்திகள் முன்முனைச் சுமை யேற்றி (front end loader), தோண்டும் வார் சுமை யேற்றி (excavating belt loader), அகழிதோண்டி (trencher), தொடர் வாளி அகழ்வி (continuos bucket excavator) ஆகியன முன்னர்க் கூறிய வகையில் அடங்கும். இரண்டாம் வகை, பெரு மண் தள்ளி (pull dozer), பல்வகைச் சுரண்டி (scraper) ஆகிய வற்றைக் கொண்டது. கும் மண்கோதி. செங்குத்தான கரைகளுக்கிடையே தோண்டுவதற்கும் பாறைகளை அகழ்ந்தெடுப்பதற் இது மிகவும் ஏற்ற எந்திரமாகும். மண் கோதியில் ஒரு சிறிய கட்டையும் (short boom), அதன்மீது இயக்கப்படக்கூடிய காம்பும் (dupper stick) காம்பின் முனையில் ஒரு திறந்த வாளியும் உள்ளன. வாளி, எந்திரத்திலிருந்து வெளித்திசையில் மேல்நோக்கித் தோண்டுகிறது. தோண்டிய மண், வாளியில் முன் முகப்பைத் தாழ்த்து வதன் மூலம் கொட்டுகிறது. முகப்பைத் தாழ்த்து வதற்கு வாளியின் அடிப்பகுதியில் ஒரூ கீல் அமைந் துள்ளது. சரக்கு வண்டியொன்றில் மண்ணேற்றும் மண்கோதியைப் படம் 3 காட்டுகிறது.