பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுமானக்‌ கருவிகள்‌ 101

முன்முனைச் சுமையேற்றி. இது மண்கோதியின் இடத்தைப் பெரிதும் ஆக்கிரமிப்புச் செய்து கொண் டுள்ளது. சிறிது காலத்திற்குள் மிகப்பெரும் வேலை களைத் தவிர்த்து அனைத்துப் பணிகளிலும் இச்சுமையேற்றியே முதன்மை பெறுகின்றது. பத் தாண்டுகளுக்கு முன்னர் 9-18 மீட்டர் கொள்ளளவு காண்ட வாளிகள் மண்கோதிகளுக்கே பெரியன வாகத் தோன்றின. ஆனால், தற்போது 18 மீட்டர் கொள்ளளவுள்ள வாளிகளை இயக்கக்கூடிய சுமை யேற்றிகள் (loader) கட்டப்படுகின்றன. ஊர்ந்து செல்லும் வண்டி (crawier) அல்லது ரப்பர் சக்கரங் உடைய ஒரு வண்டியின் முன்முகப்பில் பல இயங்கு கைகள் அமைந்துள்ளன. இவற்றில் ஒரு வாளி தனியாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இச் சுமையேற்றி இயக்கம். பணிய யாற்றும் வேகம் குறைந்த செலவு, இயக்குவதில் எளியை, எந்திரத்தின் குறைந்த பளு ஆகிய இயல்புகளைக் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட திறனுடைய சுமையேற்றியின் விலை அதே திறனுடைய மண்கோதியின் விலையில் பாதி யாகவே உள்ளது. சில சமயங்களில் மூன்றிலொரு பங்காகவே உள்ளது. மண்கோதியை இயக்குவதற் குப் பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் தேவைப்படுவர். ஆனால் சுமையேற் றியை இயக்க ஒருவரே போதும். நிலத்தில் இயங்கும் ஒரு சுமையேற்றி படம் 4 இல் காட்டப்பட்டுள்ளது. அனைத்து வெட்டி 'து ஒரு தலைகீழான மண் கோதியாகும். இதன் வாளி இணைக்கப்பட்ட நெடுங் கட்டுமானக் கருவிகள் 101 கையுடன் பொருத்தப்பட்டுள்ளது. எந்திரம் இருக் கும் திசையில் மேல்நோக்காசு வெட்டுகிறது. கொட்டு மிடத்தில் வாளி தலைகீழாகத் திருப்பப்பட்டு மண் கொட்டப்படுகிறது. அனைத்து வெட்டிகள் (back hoe) தனி எந்திரங்களாகத் தயாரி ரிக்கப்பட்டாலும் ஊர்ந்து செல்லும் சுமைதூக்கி, ரப்பர் சக்கர வண்டியிலுள்ள சுமை தூக்கிகளின் மீது அமைக்கட் ணைப்புகளாகவும் அமைக்கப்படுகிறது. அனைத்துத்தோண்டி குறிப்பாக ஆழமான அகழிகள் தோண்டுவதற்கும் பயன்படுகிறது. பட்ட அனைத்து இழுப்பி. இது நான்கு பக்கங்கள் கொண்ட வாளியாகும். ஓர் அகழும் எந்திரத்தைத் தாங்க இயலாத மிகவும் ஈரமான மண்ணாயின். இந்த எந்திரம் பயன்படும். வழக்கமாக, இது ஒரு சுமைதாங்கியின் நெடுங்கை தாங்கிய ஊர்தி யொன்றில் எடுத்துச் செல்லப்படும். ஆனால். தோண்ட வேண்டிய தொலைவு மிகுதியானால் கம்பி கயிறுவழியாகவும் இதை இயங்கச் செய்யலாம் வெட்ட வேண்டிய இடத்திற்கு வடங்களின் வழியாக வாளி எடுத்துச் செல்லப்படுகிறது. (படம் 4) நிலத்தின் வழியாக இழுக்கும்போது மண்ணை அகழ்ந்து வாளியைத் தானே நிரப்பிக் கொள்ளும் விதத்தில் அனைத்து இழுப்பி வடிலமைக்கப்படுகிறது. முன் முனை தாழ்த்தப்படும்போது வாளி காலியாகிறது. சிப்பி வடிவ வாளி. செங்குத்தாக மட்டுமே வெட்டக்கூடிய இருபக்கமும் உடைய வாளியே சிப்பி வடிவலாளி (clamshell bucket) எனப்படுகிறது. படம் 3. சரக்கு வண்டிகளில் சுமையேற்றும் மண்கோதி