பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கட்டுமானக்‌ கருவிகள்‌

102 கட்டுமானக் கருவிகள் அலகுகள் (leaves) திறந்திருக்கும்போது வாளி இறக்கப்படுகிறது. வெட்டும்போது மூடப்படுகிறது. முன்னாளில் சிப்பிகள் ஒந்திகளிலிருந்தோ தாங்கு சட்டங்களிலிருந்தோ (gantries) வரும் வடங்களில் தொங்கவிடப்பட்டன. இவை தம் எடையால் இயக்கப்பட்டமையால், தோண்டுவதில் நுட்பம் இல்லை. இதனால் வை மென்மையான மண்ணுக் கும். இறுக்கமில்லாப் பாறைகளுக்குமே பயன்பட்டன. தற்காலத்தில் பல சிப்பி வடிவ வாளிகள் விசையால் இயங்கும் நெடுங்கைகளில் நேராகப் பொருத்தப்பட்டு நீர்விசையால் இயக்கப்படுகின்றன. இவை இறுக்கமான தரையிலும் பொருத்தப்பட்டு நீர்விசையால் இயக்கப் படுவதோடு மிகவும் நுட்பமாகச் செயலாற்றவும் வல்லவை. ஆரஞ்சுத்தோல் வடிவ வாளி. து பல அலகுடைய வாளியாகும். பொதுவாக வடிவத்தில் வட்டமாக அமைந்தவை. இதுவும் சிப்பி வாளி போலவே வடத்தின் வழியாகத்தன் எடை மூலம் இயங்குகிறது. எனினும், சிப்பி வாளியைப் போலவே இதுவும் கையுடன் பொருத்தப்பட்டு நீரியல் விசையால் இயக்கப்படுகிறது. சிறு அச்சுத்தண்டுகள் வடிகால்கள், கழிவுநீர், குழாய்கள் ஆகியவற்றைத் தூய்மைப் படுத்துவது ஆரஞ்சு தோல் வாளியின் பயன் களில் ஒன்றாகும், பெரும் எந்திரங்கள் வழக்கமாக உடைந்த பாறைகளை அகழ்ந்தெடுப்பதற்குப் பயன் படுகின்றன. பிடிப்பான்கள் (grapple). இவ்வகையில் சிப்பிவடிவ வாளி, ஆரஞ்சுத்தோல் வடிவவாளி ஆகியவை இயங்கும் அடிப்படையில் பல இயங்கும் முனைகள் உடைய கரண்டிகளின் (tined grabs) இனங்கள் அடங்கும். இவை சில குறிப்பிட்ட நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும். குறிப்பாகப் பெரும் மரத்தடிகள், குழாய்கள்,பாறைகள் இவற்றைத் தூக்குவதற்குப் பயன்படுகின்றன. சில தோண்டும் வார் சுமையேற்றி (excavating belt loader). இவ்வகை எந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் இருந்து (stock pit) மூலப்பொருள்களை ஏற்றுவதற்குப் பயன்படுகின்றன. மேலும் வார்கள் செங்குத் தாகவோ, சாய்வாகவோ அமைக்கப்பட்டு அவற்றின் மீது சிறு வாளிகள் ஏற்றி அனுப்பப்படுகின்றன. வார் சுமையேற்றிகள் நகரக் கூடியனவாக உள்ளன. சில நிலையானவையாகும்; இவற்றின் வார்களில் பெருமண்தள்ளிகளால் மண் ஏற்றப்படுகிறது. இவை தொடர்ந்து இயங்குவதால் பிற தோண்டிகளைவிடச் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. அகழ்வு எந்திரம் (trcnching machine). அகழிகள் வெட்டுவதற்கான இக்கருவியில் தெருவிலிருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சிறு குழாய்களுக்கான கையால் தள்ளிச் செல்லும் சிறு எந்திரங்கள் முதல் 3500 கி.மீ.நீளத்திற்கு மேற்பட்ட கண்ட ங்களுக்கு இடையேயான குழாய்த்தொடர்களுக்கான (pipe line) நான்கு அடி அகன்ற அகழியை வெட்டக்கூடிய பல டன் நிறையுடைய எந்திரங்கள் வரை பல வகை களில் உள்ளன. எனினும், இவை அனைத்தும் அடிப் படையில் ஒரே தத்துவத்தில் யங்குகின்றன. வாளி கள் ஒரு நாற்காலி அல்லது ஒரு சக்கரத்தின் மீது வரிசையாக ஏற்றப்பட்டுள்ளன. இவை தரையிலிருந்து மண்ணைச் சுமந்து வெட்டிய அகழியின் இருமருங்கி லும் கொட்டுகின்றன. படம் 4