பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுமானக்‌ கருவிகள்‌ 103

எந் தொடர் வாளி தோண்டி (continuos bucket cxca- vator). இந்தத் தோண்டி அகழி வெட்டும் திரத்தைப் போலவே இயங்குகிறது. ஆனால், அகன்ற பரப்பில் குறைந்த ஆழத்திலிருந்து மண்ணையும் கலகலப்பான பாறைகளையும் அகற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள் தாமாகவே இயங்கக் கூடியவை. இவை தொடர்ந்து வண்டிகளில் சுமை ஏற்ற வல்லன; நிரப்பப்பட்ட வண்டியிலிருந்து வெற்று வண்டிக்கு இரண்டு நொடி களுக்குள் தாவும் ஆற்றல் கொண்டவை. மேலும், மண்கோதி மற்றும் சுமையேற்றி இயக்கங்களுக்குத் தேவையான வேறு செயல்கள் தொடர் வாளி தோண்டியில் தேவையில்லை. எனவே, தொடர்வாளி தோண்டி விரைவாக இயங்க முடிகிறது. இந்த எந்திரம் பெரிய அகழும் பணிகளைச் சிக்கனமான முறையில் நிறைவேற்ற உதவுகிறது. தோண்டியும் இழுப்பியும் இணைந்த எந்திரங்கள். கட்டுமானக் கருவிகளின் வகைப்பாட்டின் கீழ் பெருமண்தள்ளி, சுமைகொண்டு செல்லும் சுரண்டி தாமே சுமையேற்றிக் கொள்கின்ற அல்லது மேல்நிலைக்குக் கொண்டு செல்கின்ற சுரண்டிகள், முன்முனைச் சுமையேற்றிகள் ஆகியன உள்ளன. கள். பெருமண்தள்ளி, ஊர்ந்து செல்லும் வண்டிகள் அல்லது ரப்பர் சக்கர இழுப்பியின் முன்முகப்பில் கட்டுமானக் கருவிகள் 103 ஒரு வளைந்த அலகு (blade) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலகு, மண்ணையும் உடைந்த பாறைகளையும் வெட்டி ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குத் தள் ளிச்செல்கிறது. இது ஒரு கிளரியுடன் (ripper) பயன் படுகிறது. இக்கிளரி, ஓர் இழுப்பியின் பின்பக்கத் தில் பொருத்தப்பட்ட கனத்த பற்களைக் கொண்ட அமைப்பாகும். பாறைகளைப் பெயர்த்து வைக்க மண்தள்ளி அவற்றைத் தள்ளிச் செல்கிறது. மண்தள்ளி ஒருமுறை எடுத்துச் செல்லும் மண்ணின் அளவு அகழ்வின் புற அளவுகளைப் பொறுத்தது. கிளரி ஆகவே மண்ணை சில நூறு அடித் தொலைவிற்கு அப்பால் எடுத்துச் செல்லப் மெருமண்தள்ளியைப் பயன்படுத்துவது நன்றன்று. சுரண்டிகள், சில நூறு அடிகளுக்கு மேற்பட்ட தொலைவுகளுக்கு எடுத்துச்செல்லும் தோண்டியும். இழுப்பியும் இணைந்த எந்திரங்களுள் சுரண்டிகள் மிகவும் சிக்கனமானவை. சக்கரங்களில் ஏற்றப் பட்ட மேல்பக்கம் ஒரு திறந்த பெட்டி அல்லது கலம், கீல் பொருத்தப்பட்ட அடிப்பகுதியுடன் உள்ளது. எந்திரம் முன்னோக்கி நகரும்போது அடிப் பகுதி தாழ்த்தப்பட்டு மண் அள்ளப்படுகிறது. கலம் (bowl) நிரம்பியதும் அடிப்பகுதி மூடிக் கொள்கிறது. பின்னர் மண்ணைக் கொட்ட வேண்டிய பகுதிக்கு எந்திரம் ஓட்டிச் செல்லப்பட்டு அடித்தட்டு, கலத்தின் பின்னால் தாழ்த்தப்படுகிறது. நீரியல் விசையால் படம் 5