கட்டுமானக் கருவிகள் 105
படம் 7 துளையிடும் கருவி கட்டுமானக் கருவிகள் 105 களால் இழுக்கப்படும் கொள்கலங்களும் மண்ணை எடுத்துச் செல்லப் பயன்படுகின்றன. வை கீழ்ப் பகுதியில் கொட்டும் அமைப்பைக் காண்டவை. வண்டி நகரும்போது மண்ணை விரித்துப் பரப்ப இந்த அமைப்புப் பயன்படுகிறது. சில குறிப்பிட்ட வேலைகளுக்குப் பக்கப் பகுதிகளில் கொட்டும் வண்டி களும் பயன்படுகின்றன. சாய்வுச் சீராக்கி. இவை உயர்ந்த உடலுடைய சக்கர ஊர்திகளாகும். முன்பின் சக்கரங்களுக்கு இடையே ஒரு மட்டப்படுத்தும் அலகு (blade) பொருத்தப்பட்டுள்ளது. தளர்வாகவும் (loose), ஓரளவுக்கு மட்டமாகவும் உள்ள நிலத்தை நன்கு சீராக்குவதற்கு இது பெரிதும் பயன்படுகிறது. சாய்வுச் சீராக்கி (grader) ஒரு பராமரிப்புக் கருவி யாகப் பொதுவாகக் கருதப்பட்டாலும் நெடுஞ்சாலை அமைப்பதில் ஓர் இன்றியமையா எந்திரமாகவே உள்ளது. சாய்வுச் சீராக்கியின் ஒழுங்கமைவு வழி முறைகள் (configuration) நீண்ட காலமாக மாற வில்லை. எனினும், குறைந்த ஆரங்களில் விரைந்த திருப்பத்தை அனுமதிப்பதற்கும் செங்குத்தான சரிவு களின் (steep slope) முனைகளில் பாதுகாப்பாக இயங்கும் நோக்குடனும் இவை துண்டிக்கப்பட்ட சட்டகங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. . தளமிடும் எந்திரங்கள். இவற்றை ரப்பர் சூழற் பட்டைகளின் மீதோ விளிம்பு சக்கரங்களின் மீதோ பொருத்தலாம். நிலக்கீல் தளமிடும் எந்திரங்கள் (asphalt pavers) தளப் பொருள்களைக் கெட்டி யாக்கும் திண்டுகளைக் (tamping pad) கொண்டவை. கற்காரைத் தளமிடும் எந்திரங்கள் இந்நோக்கத் திற்காக அதிர்விகளைப் (vibrator) பயன்படுத்து கின்றன. நழுவு (slip form) தளமிடும் எந்திரங்கள் பயன்பாட்டிற்கு வரும்வரை பொருள்களை ஏந்தும் உருளைகளைக் கற்காரைத் தளமிடும் கருவிகளில் பயன்படுத்த வேண்டியிருந்தது. தற்போது நழுவு தளமிடு எந்திரங்கள் தமக்குப் பின்னால் கட்டையான உருளைகளை இழுத்துக் கற்காரையைக் கெட்டி யாக்குகின்றன. எனவே, உருளைகள் அகற்றப்பட்ட பின்னர் கற்காரை குலையாமல் நிலைத்து நிற்கிறது. மிகப் புதிய தானியங்கி கட்டுப்பாட்டுக் கருவிகளைக் கொண்ட மிகு வேகத் தளமிடு கருவி உருவாக்கப் பட்டுள்ளது. இது நுட்பமானதும் சீரானதுமான பரப்புகளைக்கொடுக்கவல்லது. துளையிடும் கருவிகள். கிணறுகளுக்காகவும், பாறை உடைத்தல், புரை அடைத்தல் (grouting) ஆய்வுப்பணிகள் ஆகியவற்றுக்காகவும் பாறைகளில் துளைகள் இடப்படுகின்றன். துளைப்பான்கள், அடித்து அறைதல் (percussion), திருகி அறைதல் (rotary percussion), திருகல் (rotary) ஆகிய மூன்று முறைகளில் இயங்குவதால் மூன்று வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அடி விட்டமும் 40 அடி