108 கட்டுமான முறைகள்
108 கட்டுமான முறைகள் விளக்க அட்டவணைகளில் அறுதியிட்ட இலக்கு களுடன் ஒப்பிடுவதால் பெறலாம். திட்டத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் காலநீட்டிப்பு அனைத்துப் பணிகளையும் எளிதில் தாக்கக்கூடும். அத்தகைய நிலையில் பணியை விரைவுபடுத்துவதற்காகப் பணி யாளர்களையோ கருவிகளையோ மிகுதியாக்க வேண்டும். கட்டுமான முறைகள் கட்டுமானத்தில் பயன்படும் தொழில் நுட்பங்களும், வேலை செய்யும் ஒழுங்கும் கட்டுமான முறைகள் எனப்படும். கட்டுமானப் பணிகள் பொதுவாகச் சிறப்புப்பணித் துறைகளைப் (specialized fields) பொறுத்து வகைப்படுத்தப்படும். இவை, திட்டத் திற்குக் கட்டடம் தேர்வு செய்தல், மண் அள்ளுதல், அடிமானத்தைப் பதனிடுதல் (foundation treatment), எஃகு தூக்கி நிறுத்தல் (steel erection), கற்காரை வார்த்தல், நிலக்கீல் பாவல், எந்திரக் கருவிகளை நிறுவல் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளன. கட்டடங்கள். அணைகள், விமான நிலையங்கள் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக இருந்தாலும் பணித்துறைகளுக்கு ஒரே மாதிரியான செயலொழுங்கு களே பின்பற்றப்படுகின்றன. ஆனால், அனைத்துத் திட்டங்களிலும் ஒரு துறையின் சிறப்பு ஒரே அளவாக இருக்காது. அலகுகளால் ஒவ்வொரு வேலை இனத்திற்கும் நடப்பிலான அலகு விலையையும் (unit cost), வேலைத் தொடக் கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட அலகு விலையையும் ஒப்பிடுவதன் மூலம் செலவினக்கட்டுப்பாட்டைப் பெறலாம். கற்காரை வேலைகளுக்கும் அகழ்வுப் பணிகளுக்கும் கனமீட்டர் அலகாகக் கொள்ளப்படு கிறது. கட்டக எஃகிற்கு (structural steel) டன் என்பது அலகாகும். எந்தக் குறிப்பிட்ட நேரத்திலும் ஓர் இனத்திற்குக் கொடுத்த அலகு விலை அவ் வினத்தைச் சார்ந்த செலவுகளைச் சேர்த்துக்கூட்டி, வேலையின் செய்து முடிக்கப்பட்ட வகுத்துப் பெறப்படும்.
வெவ்வேறு வேலையினங்களுக்காகத் தனித்தனி கணக்குகளில் அவ்வப்போது சரக்குப் பட்டியல் மற்றும் ஊதியப்பட்டியல்களின் உதவியுடன் வேலை விலைகளை வரிசைப்படுத்தி எழுதிக் கட்டுவதன் மூலம் ஒவ்வொரு வேலையினத்தின் விலையையும் பெறலாம்.ஊதிய விகிதங்களும் கருவி வாடகைக் கட்டணங்களும் காலக்கணிப்பு அலுவலரால் தயார் செய்யப்பட்ட கால அட்டைகளின் உதவியால் வேலையினங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. இந்த அட்டைகள், பணியாள்களும் கருவியும் பல் வேறு வேலைக்கூறுகளில் (elments of work) செல விட்ட நேரத்தைக் குறிப்பிடுகின்றன. மூலப்பொருள் களின் விலை ஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட இனத்தில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளின் அளவை அடிப் படையாகக் கொண்டது. நடப்பு ஓர் அலகு விலையையும் (unit cost) மதிப்பீடு செய்யப்பட்ட ஓர் அலகு விலையையும் ஒப்பிடுகையில், நடப்பு ஓர் அலகுவிலை மிகையாக இருந்தால் உரிய காரணத்தைத் தெளிவாகக் கண்டு பிடிப்பதற்கு ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படும். கருவி யின் விலை மிகையானால், கருவி திறன் குறைந் திருக்கலாம். மேலும் கருவி முறையாக இயங்காமல் இருப்பதும் காரணமாகலாம். பணி விலையில் மிகை யேற்படுமாயின் பணியாளர்கள் தேவைக்கு மேலாக இருப்பதும், முறையாக மேற்பார்வையில்லாமல் இருப்பதும், மூலப்பொருள் தேவையால் தாமதம் ஏற்படுவதும் காரணங்களாகும். அத்தகைய நிலை களில் உற்பத்தித்திறனைப்பகுப்பாய்வு செய்வதற்குக் காலக் கணிப்புகள் (time studies) மிக மதிப் புடையவையாக இருக்கும். க கு. உதயபாலன் உள்ள . கட்டடத்தை ஆயத்தம் செய்தல் (preparation of site). கட்டடத்தைக் கட்டும் இடத்தில் இடத்தில் முன்னரே கட்டகங்களும் (structures) தாவரங்களும் அவ்விடத்தை விட்டு அகற்றப்படும். சிறு கட்டகங் களை இடிப்பதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் பெருமண் தள்ளிகள் (bulldozers) பயன்படுகின்றன. பெரும் கட்டகங்களாயின் சிறிது சிறிதாக இடித்து எடுக்கப்படும். நிலச்சீர்திருத்தம் (land levelling). நிலச்சீர்திருத்தத் தில் மண் தோண்டுதலும், தோண்டிய மண்ணை வேண்டிய இடத்தில் நிரப்புதலும் அடங்கும். கட்டடத்தை ஆயத்தம் செய்த பின்னர் அகழ்வுப் பணி தொடங்கும். கட்டடத்தில் அமைந்த சரிவு புது மட்டத்திற்கு வர, தோண்டும் வேலை நடைபெறும். அகழ்வுப் பணி தொடங்கும்போது கரிமப்பொருள் நிறைந்த மேல்மண் மட்டும் தனியாக வெட்டப்படும். இவ்வாறு வெட்டப்பட்ட மேல்மண் புதுக்கட்டகத் தைச் சுற்றித் தோட்டம் அமைக்கப் பயன்படும். மேலும், மேல் மண்ணுக்குக் கீழ் உள்ள கனிமப் பொருள்களை மாசடைவதிலிருந்து பாதுகாக்கவும் முடியும். ஏனெனில் இந்தக் கனிம மண், தளம் நிரப்புவதற்குத் தேவைப்படலாம். அகழ்வுப் பணிகள் செய்ய மண் கோதி (shovel), ஓந்தி (crane), சுரண்டி (scraper) போன்ற. பல தோண்டிகளைப் பயன்படுத்த லாம். நிலத்தில் அகழ்வுப்பணியைச் செய்ய, வெட்ட வேண்டிய பரப்பு உலர்ந்து இருக்க வேண்டும். ஈரமாக இருக்கும்போது பல மண்கள், நிலையற்றனவாக, எடுத்துச் செல்லும் கருவிகளையும் தோண்டிகளையும் தாங்குவதற்கு ஆற்றலற்றனவாக மாறி விடுகின்றன. இயற்கையான நீர்மட்டத்திற்குக் கீழே தோண்ட வேண்டியிருந்தாலும் நில நீர் ஓட்டத்தில் குறுக்கிடும்