பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டு விரியன்‌ 111

வணிகக் கலவை நிலையங்களின் அருகில் பணி யிடம் இருந்தால் அங்கிருந்து கற்காரையைப் பெற முடியும். கலவை நிலையங்கள் கற்காரையைத் தனி வண்டிகளில் அனுப்புகின்றன. பணியிடத்திலேயே கற்காரையைத் தயார் செய்ய முடியும். பணியிடத்தில் கற்காரை தயாரிக்க கலவை நிலையமும் சிமெண்ட், ஜல்லி ஆகியவற்றைக் கையாளும் நிலையமும் தேவைப்படும். ஜல்லி சிலசமயம் பணியிடத்திலோ அருகிலோ தயார் செய்யப்படும். அத்தகு சூழ் நிலையில் ஒரு கற்சுரங்கத்தை (quarry) ஏற்படுத்துவ தோடு நொறுக்கிகள் (crushers), சலிப்புகள் போன்ற கருவிகள் அமைக்கவும் வேண்டும். இயன்றவரை கல்வை வண்டியிலிருந்து நேராகக் கொட்டுவதன் மூலம் கற்காரை வார்க்கப்படுகிறது. இல்லையெனில், ஓந்தி முதலியவற்றின் வாளிகளாலும் வார்க்கலாம். சிறப்பான கற்காரை இறைப்பிகளால் இறைத்தும் அனுப்பலாம். கற்காரை வார்க்கும்போது, காரை சீராக அமையக் கம்பிகளால் குத்தியோ, அதிர்விகளால் (vibrators) இடித்தோ காரை வார்ப்புகளைச் சமன் செய்ய வேண்டும். கற்காரை தன் முழு வலிமையும் பெறப் பல நாள் ஆகும். கற்காரை நீரால் கெட்டிப் பட்டு முழு வலிமை பெறும், எனவே கற்காரை வார்க் கப்பட்ட பின் அதன் புறப்பரப்பைக் குறைந்தது 28 நாளாவது ஈரமாக வைத்திருக்க வேண்டும். எனவே குழாய்களின் மூலம் நீரை வீசியோ, ஒன்றிரண்டு செண்டிமீட்டர் நீரைப் புறப்பரப்பில் தேக்கியோ படம் 2. கற்காரை மாதிரிச் சட்டம் கட்டு விரியன் 111 கற்காரையை ஆற்ற வேண்டும். மேலும் நீருக்கும் சிமெண்ட்டிற்கும் இடையேயுள்ள விகிதத்தைச் சரியாக வைத்திருக்க வேண்டும். விமான ஓடுதளம், நெடுஞ்சாலை ஆகியவற் றிற்குக் கற்காரை பதிப்பது முழுமையாக எந்திரமய மாக்கப்பட்டுள்ளது. கலப்பியும் (mixer) பாவியும் (paver) ணைந்த நகரும் பாவியால் சாலை மடிப்பு களுக்கிடையில் கற்காரை வார்ப்பதும் உண்டு. கற்காரை வார்த்த பின்னர் கூழ்மத்தின் மீது சிறுசிறு கருவிகள் நகர்த்தப்படுகின்றன. அவை தொடர்ச்சியாகக் கற்காரையை அதிரச் செய்து பரப்புதல், மேற்பரப்பை வழவழப்பாக்கல், கூட்டுப் பொருள் ஒன்றை ஊட்டல் ஆகிய பணிகளைச் செய்கின்றன. பிட்டுமின் பாவுதல். நொறுக்கப்பட்ட ஜல்லியும், பிட்டுமின் இணைப்பியும் (binder) சேர்ந்த கலவை சாலைப்படுகை மீது தனித்தனிச் செயல்கள் மூலம் பரப்பப்படுகிறது அல்லது கலவை நிலையத்தில் கலந்து ஒரே நேரத்தில் சாலைப்படுகையில் பரப்பப்படுகிறது. பின்னர் உருளிகளால் பாவுதளம் கெட்டிப்படுத்தப் படுகிறது. கு. உதயபாலன் கட்டு விரியன் இது ஊர்வன வகுப்பில் எலாப்பிடே என்னும் குடும் பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் நல்ல பாம்பு பவளப் பாம்பு (bungarus caeruleus) முதலியவையும் அடங்கும். முழு வளர்ச்சியடைந்த கட்டுவிரியன் 1-1.5மீ நீளம் இருக்கும். அடர்ந்த புதர்களிலும், வீடுகளின் அருகிலும் காணப்படும். தாகம் அதிகரித் தால் அது வீட்டில் நீர்க் குடங்களைத் தேடி வரும். அதனால் சிலசமயம் குளிக்கும் அறையிலும் இது காணப்படுவதுண்டு. சாதாரணமாக து பகலில் காணப்படுவதில்லை. நன்றாக இருண்ட பின்னரே வெளியே உலர்வும். மனிதப் புழக்கமுள்ள வீடுகளி லேயே இருந்தும் வீட்டார்கண்களுக்குப் படாமலேயே மறைந்து வாழும் குணமுடையது. பெரும்பாலான பாம்புகளைப்போலவே இது முட்டையிடும். கட்டுவிரியனின் முதுகுப்புறம் கருநிறமாகவும் வயிற்றுப் பக்கம் சற்று வெண்மையாகவும் இருக்கும். முதுகில் நடுவரிசையிலுள்ள செதில்கள் அறுகோண முள்ள பெருஞ்செதில்களாயுமிருக்கும், தலையிலிருந்து வால் வரை கருநிற முதுகில் இடையிடையே மின்னல் வெட்டியதுபோல் வெள்ளைக்கட்டுகள் அல்லது வளையங்கள் உண்டு. இதனால் கட்டுவிரியன் என்ற பெயர் வந்தது என்றாலும் இது உண்மையான