பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கட்டேகாட்‌ நீர்ச்சந்தி

1/2 கட்டேகாட் நீர்ச்சந்தி விரியனில்லை. மக்கள் நினைப்பது போல் கொடியது மன்று. நச்சுப்பாம்புகளுக்குள்ளேயே மிக அமைதியான பண்புடையது கட்டு விரியனே. விரியனுக்கு இருக்க வேண்டிய பண்புகளான அகன்ற தலை, நெருங்கிய கழுத்து, துளையுடைய நீண்ட நச்சுப் பற்கள் முதலியன இல்லை. தலையில் சிறு செதில்களுமில்லை. பட்டைச் செதில்களே உண்டு. வெளிர்நிறமுள்ள அடிப்பகுதியில் பட்டைச் செதில்கள் வயிற்றின் அகலவாட்டத்தில் இருக்கும். வாலடிப்பட்டைச் செதில்கள் ஒரு வரிசையாக (subcandals) முழு அகலத்தையும் மறைத்து நிற்கும். தலை கேற்ற பருமன் உடையது. உடலுக் வட இந்தியாவில் காணப்படும் பட்டைக்கட்டு விரியன் (banded krait) பார்ப்பதற்கே அஞ்சத்தக்க தாக இருக்கும். ஆனால் அதன் நிறம் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். தலை முதல் வால் வரை முதுகில் இரண்டு செண்டி மீட்டருக்குக் கருநீலப் பட்டை இருக்கும். டைவெளி தங்கநிறமாக ஒளிரும். வால் கூர்மையாக முடியாமல் சிறிது உருண்டு இருக்கும். பிற பாம்புகளைப்போலவே, கட்டுவிரியனும் ஓராண்டில் பல தடவை தோலுரிக்கும். தோலுரிக்கும் சமயத்தில் பாம்பு மந்தமாக இருக்கும். தோலுரித்த வுடன் மிகவும் பளப்பளப்பாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும். குட்டிப்பாம்புகள் எப்போதும் சுறுசுறுப் பாக இருக்கும். கட்டு விரியனும் ஊனுண்ணியே. கணுக்காலி களையும், நத்தையையும், தரையில் ஊர்ந்து செல் லும் மெல்லுடலி அட்டை முதலிய வேறு சில பூச்சி, விலங்கினங்களையும் பிடித்து விழுங்கும். சிறு விலங்கு களாகிய தவளை, சொறித்தவளை, பல்லி, எலி முதலியனவற்றையும் விரும்பி விழுங்கும். சில சமயங் களில் நஞ்சுடைய அல்லது நஞ்சற்ற பிற பாம்பு களையும் பிடித்து விழுங்கும். கட்டு விரியனுக்குச் சிறிய நச்சுப்பற்கள் மேலண் ணத்தில் பக்கத்துக்கு ஒன்றாக இருக்கும். பக்கத்தில் குழி அல்லது பள்ளம் விழுந்திருக்குமேயன்றி விரிய னின் பற்கள்போல் துளையுடையவை அல்ல மேல் உதட்டையடுத்த சில சுரப்பிகள் நச்சுச் சுரப்பி களாக மாறுகின்றன. நச்சுச்சுரப்பியிலிருந்து வரும் நச்சு நாளம் நச்சுப்பல்லின் உறையினுள்ளே திறக் கும். பாம்பு கடிக்கும். போது நஞ்சு பல்லின் கூர் முனையின் வழியாகக் கூரான பல் ஆழமாகப் பதிந்து உண்டாக்கிய காயத்துள் பாயும். சுட்டு விரியனின் நஞ்சு, நல்ல பாம்பின் நஞ்சைப் போன்று நரம்பைத் தாக்கும் தன்மையுடையதால் இது நரம்பு நஞ்சு (neuro toxin). எனப்படும் நல்ல பாம்பின் நஞ்சைவிடக் கட்டு விரியனின் நஞ்சுமூன்று மடங்கு வீரியமுடைய தாகும். இது முக்கியமாக மூளையையும் தண்டுவடத் தையும் தாக்கும். மூளையிலுள்ள மூச்சு மையத்தை (respiratory centre) வேலை செய்யாதவாறு செய லிழக்கச் செய்து மரணம் உண்டாக்கும். சுடித்த பத்து நிமிடத்திலிருந்து இரண்டு மணி நேரத்தில் நச்சுக்குறிகள் தோன்றும். கடித்த இடத் தில் எரிச்சலும் குத்தலும் உண்டாகும். பின்னர் அந்த இடம் மரத்துப் பிறகு வீங்கும். நச்சுப்பற்கள் தைத்த துளைகளிலிருந்து செந்நிற நீர் வடியும். உடம்பில் சோர்வும் வலிவின்மையும் தோன்றும். கால் கள் தள்ளாடும்; நரம்புத் தளர்ச்சியேற்பட்டு நிற்கமுடி யாமல் கீழே விழுந்து, படுத்து, கைகால் அசைக்க முடியாமற்போகும். பேசவும், விழுங்கவும் இயலாமல் வயிற்றுப்புரட்டல் தோன்றும்; வலியும் வயிற்றில் உண்டாகும். நேரம் அதிகரிக்க அதிகரிக்க வின்மை மிகும். உடம்பில் இழுப்பு அல்லது வலிப்பு உண்டாகும். மூச்சு விடுதல் சிறிதுசிறிதாகக் குறைந்து இறுதியில் மரணம் ஏற்படும். 5-12 மணி நேரத்தில் மரணம் நேரும். கடிபட்ட இரண்டொரு மணி நேரத்திற்குள் நஞ்சு முறிப்பு (antivenm) மருந்தை உடலில் செலுத்தினால் மரணம் ஏற்படாமல் தடுக்க லாம். வலி கட்டுவிரியன் போன்றிருப்பவை சிறியவையாக உள்ளன. கருவழலைப் பாம்பு (bridal snake), வெள் ளிக்கோல் வரையன் (lycodon travancorius), சுவர்ப் பாம்பு (wall snake), ஓலைப்பாம்பு (oligodon arnen sis) இவையெல்லாம் நஞ்சற்ற பாம்புப் போலிகள். இப்போலிப் பாம்புகளின் கழுத்திலோ தலையிலோ வரைகள் இருக்கும். தலையிலிருந்து வால் இவ்வரைகள் மங்கும் அல்லது நெருங்கித் தேய்ந்து மறையும். கட்டுவிரியனோ நன்றாக ஒளிரும் கறுப்பு நிறமுடையது. தலையிலிருந்து சில செண்டிமீட்டருக் கப்பால்தான் முதல் வெள்ளி வளையம் தோன்றும். வாலை நோக்கிப் போகப்போக அவ்வரைகள் தெளி வாக இருக்கும். நன்றாக வளர்ச்சியடைந்த பாம்பில் வரை முன் பகுதியில் வரையே இல்லாமலுமிருக்கலாம். பட்டைகள் அடிவால் முழுப்பட்டைகள் ஆகும். போலிகளுக்கோ இரட்டைப் பட்டைகள் இருக்கும். கே. கே. அருணாசலம் கட்டேகாட் நீர்ச்சந்தி இது டென்மார்க்கைச் சேர்ந்த சிலாண்டு தீவுக்கும் ஜட்லாண்ட் முந்நீரகத்திற்கும் இடையில் செல்லக் கூடிய நீர்ச்சந்தியாகும். இந்த நீர்ச்சந்தி வடக்கில் உள்ள ஸ்காஜெராக் வழியாக வடகடலுடனும், நீள் திட்டுகள் வழியாகப் பால்டிக் கடலுடனும் இணைக் கப்பட்டுள்ளது. 57.00 வடக்கு அகலாங்கு, 11.00 கிழக்கு நெட்டாங்கில் இது அமைந்துள்ளது. பரப்பு 25,486 சதுர கி.மீ. ஆகும். 220 கி.மீ. நீளத்தை