கட்புலன் நிறமாலையும் புற ஊநா நிறமாலையும் 113
யும், 37-88 மீட்டர் வரை பல்வேறு அளவு அகலத் தையும் இது கொண்டுள்ளது. கட்டேகாட் நீர்ச்சந்தி யின் (kattegat strait) தோராய ஆழம் 26 மீட்ட ராகும். பால்டிக் கடலிலிருந்து வரும் மேற்பரப்பு நன்னீர்ப் பாய்வால் உப்புத்தன்மை அளவு 23% வரை குறைந்து காணப்படுகிறது. டென்மார்க் நாட் டுத் தீவுகளான லேசோ அன்ஹோல்ட், சம்சோ ஆகியவை இதில் அமைந்துள்ளன. ஸ்வீடன் நாட் டைச் சேர்ந்த கோதென்பர்க் ஹாம்ஸ்டம் டென் மார்க்கைச் சார்ந்த ஆர்கஸ் போன்றவை இங்கு அமைந்துள்ள முக்கியத் துறைமுகங்களாகும். கட்டே காட் நீர்ச்சந்தி ஒரு முக்கியமான கடற்பயண வழி யாகவும், சிறந்த கோடைக்கால உல்லாச இடமாக வும் திகழ்கிறது. 5 அ. மோகன் கட்புலன் நிறமாலையும் புற ஊதா நிற மாலையும் மின் காந்த அலைமாலையில் ஏறத்தாழ 760-380 நானோமீட்டர் வரையான பகுதி கட்புலனொளி யாகும்: 380 நானோ மீட்டருக்கும் கீழ் 40 நானே மீட்டர் வரையான பகுதி புற ஊதாப் பகுதியாகும். என பொதுவாக ஒளி என்பது ஒரு வகை ஆற்ற லாகும். இந்த ஆற்றல் அலை வடிவில் பரவுகிறது எனவும் அத்தகைய அலை பரவும்போது அதன் பாதையில் மாறுமின்புலத்தையும் காந்தப்புலத்தை யும் விளைவிக்கிறது எனவும் அறியப்பட்டுள்ளது. எனவே, ஒளியானது ஒரு மின்காந்த அலை நிறுவப்பட்டுள்ளது. காமா மற்றும் எக்ஸ் கதிர்களும் ரேடியோ அலைகளும் மின்காந்த அலைகளேயாகும். இவ்வாறாக, காமாக் கதிர்கள் முதல் ரேடியோ அலைகள் வரை எல்லா வகைக் கதிர்வீச்சுகளையும் உள்ளடக்கிய மின்காந்த அலைமாலையில் கட்புல னொளி மிகச்சிறு பகுதியேயாகும். நிறமாலைகளை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை, உமிழ் நிறமாலை (emission spectrum), உட்கவர் நிறமாலை (absorption spectrum) எனப்படும். அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் கிளர்ச்சியுற்ற நிலையிலிருந்து இயல் நிலைக்குத் திரும்பும்போது ஆற்றலை மின்காந்த அலையாக வெளிவிடுகின்றன. பொருள்களைச் சூடேற்றுவதன் மூலமோ (மின் விளக்குகளில் மின்னிழைகள் சூடேற்றப்படுகின்றன) வளிமங்களின் வழியே மின் போக்கு (discharge) ஒன்றை விளைவிப்பதன் மூலமோ (குழாய் விளக்குகள்) அணுக்கள் அல்லது மூலக்கூறு களைக் கிளர்ச்சியூட்டலாம். அத்தகைய மின்காந்த அலைகள் உமிழ் நிறமாலையை அளிக்கின்றன. அ.க. 7. 8 கட்புலன் நிறமாலையும் புற ஊதா நிறமாலையும் 113 வெள் எல்லா அலைநீளங்களையும் கொண்ட ளொளிக் கற்றை ஒன்றைச் சில வளிமங்கள் அல்லது ஆவிகள் வழியே செலுத்தும்போது அவற்றினின்றும் வெளியேறும் ஒளிக்கற்றையின் தொடர் நிறமாலை யில் ஆங்காங்கே இருள் வரிகள் காணப்படும். அத் தகைய நிறமாலை உட்கவர் நிறமாலை எனப்படும். அத்தகைய இருள் வரிகளுக்குரிய அலைநீளங்களை அவ்வளிமங்கள் உட்கவர்வதாலேயே அவை நிற மாலையில் தோன்றாமல் அவற்றின் நிலைகளில் இருள் வரிகள் காணப்படுகின்றன. பொருள் ஒன்றின் உட்கவர் நிறமாலையில் காணப்படும் இருள் வரி அலைநீளங்கள் அதே பொருளின் வெளிவிடு நிற மாலையில் சில வரி அலை நீளங்களுடன் திருப்பதைக் காணலாம். நிறமாலைகளை இவற்றின் தோற்றத்தைப் பொறுத்து வரி நிறமாலை (line spectrum), தொடர் நிறமாலை (continuous spectrum), பட்டை நிற மாலை (band spectrum) என மூவகையாகப் பிரிக்க லாம். வரிநிறமாலை ஒன்றில் இருண்ட பின்னணியில் பல மெல்லிய வண்ண ஒளி வரிகள் காணப்படும். அணுக்கள் இவற்றிடையே ஏற்படும் மோதல்களால் பெருமளவில் தாக்கமுறாத நிலையில் இத்தகைய மெல்லிய வரிகளைக் கொண்ட நிறமாலைகளை வெளிவிடுகின்றன. மேலும், குறைந்த அழுத்தங் களில் அமைந்த வளிமங்களின் வழியே மின்போக்கு விளையும்போதும் வரி நிறமாலைகள் தோற்றுவிக்கப் படுகின்றன. நிறமாலையை வெளிவிடும் பொருளுக் கேற்ப வரிகளின் எண்ணிக்கை மாறுபடும். காட்டாக, சோடியம் மஞ்சள் நிறப்பகுதியில் அருகருகே க அமைந்த இருவரிகளை வெளிவிடுகிறது. ஒரு சில கேட்மியம் செறிவு மிகுந்த சிவப்பு வரி ஒன்றை யும் பச்சை வரி ஒன்றையும் வெளிவிடுவதோடு செறிவு குன்றிய மேலும் பல வரிகளை வெளிவிடு கிறது. பாதரச ஆலியோ குறைந்த அழுத்தத்தில் பல வரிகளை செறிவு மிகுந்த வெளிவிடுகிறது. அழுத்தம் மிகுவிக்கப்படும்போது வரிகள் அகன்று வளி அழுத்தங்களில் அவை ஒன்றோ டொன்று இணைந்து தொடர் நிறமாலை ஒன்று தோன்றுகிறது. சூடேற்றப் பெற்ற திண்பொருள் களும் தொடர் நிறமாலைகளை வெளிவிடுகின்றன. மூலக்கூறு நிலையிலமைந்த பொருள்களுக்குரிய நிற மாலைகளில் சில குறிப்பிட்ட அலை நீளப்பகுதிகளில் முகப்புகளை (head) அமைக்கும் வகையில் நெருக்க மான மிகு எண்ணிக்கையுடைய வரிகளைக் கொண்ட பல பட்டைகள் காணப்படும். அத்தகைய நிறமாலை கள் பட்டை நிறமாலைகள் எனப்படுகின்றன. அணுக்களிலுள்ள எலெக்ட்ரான்கள் வரை யறுக்கப்பட்ட ஆற்றல்களைக் கொண்டு அவற்றிற் குரிய பாதைகளில் அணுக்கருவைச் சுற்றி இயங்கி வருகின்றன. இப்பாதைகள் குவாண்ட்டப்படுத்தப்