பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடகம்‌ 115

கடகம் 115 அவற்றை உரிய அலைநீள ள அட்டவணைகளோடு ஒப்பிடுவதால் நிறமாலைக்குரிய பொருளில் அடங் கிய மூலப்பொருள்களை னமறிய முடியும். வரிக ளின் செறிவு. மூலப்பொருள்களின் அளவைப் பொறுத்து அமைவதால் அத்தகைய செறிவு அள வீட்டிலிருந்து அவற்றின் அளவையும் மதிப்பிட முடி யும். இம்முறைகள் மில்லியனில் ஒரு பங்கு அளவான மிகக் குறைந்த அளவில் உள்ள பொருள்களைக் கூட னமறியும் அளவுக்கு உணர்வு நுட்பம் வாய்த் தவையாக அமைகின்றன. பொருள்கள் சூடேற்றப்படும்போது அவை கிளர்ச்சியுறுகின்றன. தீப்பிழம்பு ஒன்றையோ மின் வில் ஒன்றையோ இதற்குப் பயன்படுத்தலாம். தீப் பிழம்பு முறையில் தக்கதொரு பிழம்பில் உலோக உப்புகள் வைக்கப்படும்போது அவை ஆவியாக்கப் பட்டுக் கிளர்ச்சியூட்டப் பெற்றுச் சிறப்பியல்பு நிற மாலைகளை வெளிவிடுகின்றன. இம்முறையில் தீப் பிழம்பின் வெப்பநிலை குறைந்த அளவிலேயே அமைவதால் எளிதில் பிரிகையுறக் கூடிய சேர்மங் களே இம்முறையில் ஆராயப்படுவதற்கேற்றவையாக அமைகின்றன. ஆயினும், இம்முறையில் நாற்பத் தைந்துக்கும் மேற்பட்ட தனிமங்கள் இனமறியப்படு கின்றன. மின்வில் முறையில் ஆய்வுக்குரிய பொருள் கள் மின்வில்லை உருவாக்கும் மின்வாய்களுக் கிடையில் வைக்கப்படுகின்றன அல்லது மின்வாய் களின் மீது பூச்சாகப் பயன்படுத்தப்படுகின்றன. மின்வில்லில் நிலவும் மிக உயர்ந்த வெப்பநிலையின் காரணமாகப் பெரும்பாலான சேர்மங்கள் அணுக்க ளாகப் பிரிவடைவதால் உருவாகும் நிறமாலைகள் அணுவியல் நிறமாலைகளாக அமைகின்றன. மேலும் மின்வில் ஒன்றை உருவாக்குவதற்குக் குறைந்த மின்னழுத்த வேறுபாடுகளே தேவைப்படுவதால் இம் முறையில் கிடைக்கப்பெறும் நிறமாலைகள் நடுநிலை அணுக்களுக்குரியவையாக அமைகின்றன. எனவே, சேர்மங்களைப் பற்றிய வேதிப் பகுப்பாய்வில் இம் முறை பெரிதும் பயன்படுகிறது. பொருள்களைப் உட்கவர் நிறமாலைகளும் பற்றிய வேதிப் பகுப்பாய்வுக்குப் பயன்படுகின்றன. இம்முறையில் ஆய்வுக்குரிய பொருள் ஆவியாக்கப் பட்டு அதில் அடங்கிய மூலப்பொருள்களுக்குரிய சிறப்பியல்பு அலைநீளங்களில் ஆவியின் உட்கவர்ச்சி (absorbance ) அளவிடப்படுகிறது. இந்த உட்கவர்ச்சி யின் அளவு உட்கவர் பொருளின் செறிவைப் பொறுத்தமையும். எனவே, அதை அதே ஆய்வு நிலைகளில் அளவிடப்பட்ட தெரிந்த செறிவுடைய அப்பொருளின் உட்கவர்ச்சியுடன் ஒப்புநோக்குவதன் மூலம் ஆய்வுக்குரிய பொருளில் அமைந்த உட்கவர் பொருளின் அளவை நுட்பமாக மதிப்பிடலாம். புற ஊதாக் கதிர்வீச்சு. கார்பன் வில் விளக்கு ஒன்றிலிருந்து தோன்றும், ஒளிக்கற்றை குவார்ட்ஸ் அ. க. 7. 8 அ முப்பட்டகம் வழியே செலுத்தப்பட்டு, வெண்திரை ஒன்றில் ஏற்கப்படுமாயின் சிவப்பு முதல் ஊதா வரையான தொடர் நிறமாலை ஒன்றைக் காணலாம். வெண்திரைக்குப் பதிலாக ஒளிர்திரை ஒன்று பயன் படுத்தப்படுமாயின் ஊதா நிறத்துக்கு அப்பாலும் நிறமாலை அமைவதைக் காணலாம். நிறமாலையின் அப்பகுதியே புறஊதாப் பகுதியாகும்; அது கட்புல னொளிப் பகுதியின் கீழெல்லையான ஏறத்தாழ 480 நானோ மீட்டர் முதல் எக்ஸ்கதிர் பகுதியின் தொடக்கமான ஏறத்தாழ 40 நானோ மீட்டர் அலை நீளம் வரை பரவியுள்ளது. இப்பகுதியை, 480 நானோ மீட்டர்முதல் 200 நானோ மீட்டர் வரை அணுக்கப் புற ஊதாப்பகுதி (near ultraviolet region) எனவும் அதற்குக் கீழ் 40 நானோ மீட்டர் வரை மிகுபுற ஊதாப் பகுதி (far ultraviolet region) எனவும் மேலும் இரு பகுதிகளாகப் பிரித்துக் கூறுவதும் உண்டு, புறஊதாக் கதிர்கள் ஒளிப்படத் தகடுகளைத் தாக்குந்திறனும் அயனியாக்கத் திறனும் பெற்று அமைவதால் இவ்விரு முறைகளாலும் அவற்றை எளிதில் கண்டுணரலாம். ஆய்வகங்களில் ஹைட்ர ஜன் வில் விளக்கு, செனான் விளக்கு, டங்ஸ்டன் விளக்கு,பாதரச வில் விளக்கு ஆகியவை புறஊதாக் கதிர் மூலங்களாகச் செயற்படுகின்றன. புறஊதாக் கதிர்கள் கண்ணாடியால் உட்கவரப்படுவதால் இவ் விளக்குகளில் கண்ணாடிக்குப் பதில் குவார்ட்ஸ் பயன் படுத்தப்படுகிறது. மேலும், இப்பகுதியில் ஆய்வுக்குரிய கருவிகளில் புறஊதாக் கதிர்கள் எளிதில் ஊடுருவக் கூடிய குவார்ட்ஸ், ஃப்ளூரைட் போன்ற பொருள்க ளான வில்லைகள் மேலும் முப்பட்டகங்கள் பயன் படுத்தப்படுகின்றன. பெரும்பாலான ஈரணு மூலக் கூறுகள் புறஊதாப் பகுதியில் மிகுந்த உட்கவர் திறனைப் பெற்றிருப்பதால் அப்பகுதியிலமைந்த அவற்றின் உட்கவர் நிறமாலைகள் மூலக்கூறமைப் பைப் பற்றிய ஆய்விற்குப் பெரிதும் துணை புரிகின் றன. புறஊதா உட்சுவர் நிறமாலைகள் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள், வைட்டமின்கள், ஸ்டீராய்டு கள் மற்றும் சிலவகை அலிஃபாட்டிக் சேர்மங்கள் ஆகியவற்றை இனமறிவதிலும் உயிரியல் வேதியியலி லும் சிதைவு விளைவுப் பொருள்களை இமைறிவதி லும், மருந்தியல் ஆய்விலும் மருந்துப் பொருள்களின் தூய்மையை ஆய்வதிலும் பெரிதும் பயன்படுகின்றன. ரா.நாகராஜன் கடகம் வான வட கோளத்தில் பெருங்கரடி விண்மீன் குழு விற்கு அருகில் அமைந்துள்ள மங்கலான ளவேனிற்