பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடத்து மிழையம்‌ 121

சைலமும் ஃப்ளோயமும் ஒரே இடத்தில் அமைந் திருந்தாலும், இவற்றின் அமைப்பைக் கொண்டுள்ள சாற்றுக்குழாய்க் கற்றைகளின் அமைப்பு, பயிரின் பல பகுதிகளில் மாறுபடுகிறது. கடத்துமிழையத்தைப் பொறுத்து வேரின் அமைப்பு, தண்டின் அமைப்போடு முற்றிலும் மாறுபடுகிறது. மேலும், ஒருவிதை இலைத்தாவரத்தின் அமைப்பு, இருவிதை இலைத் தாவரத்தின் அமைப்புகளோடு ஒப்பிடும்போது இது முற்றிலும் மாறுபடுகிறது. சைலம். இத்திசு வேர் உறிஞ்சும் நீர், உரங்கள், பூச்சி பூஞ்சணக் கொல்லி மருந்துகளைச் செடியின் மேல் பகுதிகளான தண்டு, இலை, புதுத்தளிர் போன்ற இடங்களுக்கு எடுத்துச் செல்கிறது. இப்பணியைப் பலவகை நிலைத்த கூட்டுத் சுக்கள் ஒன்றாக இணைந்து செய்கின்றன. முதன் முதலில் கி. பி. 1858 ஆம் ஆண்டு நாகேலி என்பார் இவ்வகைத் திசுக்களுக்குச் சைலம் எனப் பெயரிட்டார். இப்பிரிவில் டிரக்கீடுகள் (tracheids), டிரக்கியா (trachea) அல்லது சைலம் வெஸ்ஸல் (xylem vessel), சைலம்நார் (xyleum fibre), பாரன்கைமா (xylum parenchyms) போன்ற கூட்டுத் திசுக்கள் அடங்கியுள்ளன. இவை யாவும் காம்பியம் (cambium) என்னும் ஆக்கத் திசுக்களிலிருந்து தோன்றுகின்றன. சைலம் திசுக்களில் பாரன்கைமா திசுக்கள் மட்டுமே உயிருடையவை. சைலம் சைலம் திசுக்கள் வேர்நுனி முதல் புதுத்தளிர் (newflush) வரை நீண்ட செங்குத்தான குழாய்களா ஒன்றொடொன்று கவும், இவற்றின் முனைகள் ணைந்து ஒரே தொகுதியாகவும் அமைந்துள்ளன. இத்திசுக்கள் ล உண்டாக்கப்படும்போது குறுக்குச் செல் அவர்கள் கரைந்து விடுவதால் நீர் கொண்டு வதற்கு ஏற்றவாறு ஒரு நீண்ட தொடர்ச்சியான வெஸ்ஸல் வழி ஏற்படுகிறது. இவற்றில் சைலம் திசுக்களே பெரும் பங்கு கொள்கின்றன. சைலம் பாரன்கைமா திசுக்கள் சைலம் வெஸ்ஸல் திசுக் களைச் சுற்றி அமைந்துள்ளன. இது உணவு சேமிக் கவும் நீரைப் பக்கவாட்டில் கடத்தவும் பயன்படு கின்றது. சைலம் நார்கள் ஸ்கிளிரன்கைமா (scieren chyma) என்னும் கடினமான செல்களால் ஆனவை. இச்செல்களின் செல்சுவர் தடித்த கடினமான லிக்னின் (lignin) என்னும் பொருள்களால் ஆனது. சைலம் நார்கள் பயிரின் உறுதியான அமைப்புக்கு உறுதுணையாகின்றன. டிரக்கீடுகள் பொதுவாக டெரிடோஃபைட் மற்றும் ஜிம்னோஸ்பர்ம் தாவரங் களில் பெரும் பங்கேற்கின்றன. டிரக்கியா அல்லது சைலம் வெஸ்ஸல் திசுக்களுக்குத் துணையாக நீரைக் கடத்தும் பணியில் உதவி செய்கிறது. இவ்வகைத் திசுக்கள் ஆஞ்சியோபர்ம்களில் காணப்படும். பொது வாகக் சுட்டை (wood) என்பது சைலம் பகுதியைச் குறிப்பதாகும். பெரிய மரங்களில் சைலம் முழுதும் செயல்படுவதில்லை. நடுவிலுள்ள சைவம் செயல் கடத்து மிழையம் 12/ இழந்து, தேவையற்ற பொருள்களைக் கொண்டி ருக்கும். இது வைரப்பகுதி (heart wood) என்றும் கடத்தும் செயலை நடத்தும் புறச் சைலம் மென் கட்டை (sapwood) என்றும் குறிப்பிடப்படும். ஃப்ளோயும். இப்பிரிவுத் திசுக்கள் இலைகளில் தயாரிக்கப்படும் உணவு, இலைகளில் தெளிக்கப்படும் உரங்கள். பூச்சி மருந்துகள் இவற்றைச் செடியின் பல பகுதிகளுக்கும் குறிப்பாக வேர் வளர்ச்சிக்குக் கொண்டு செல்கின்றன. இப்பிரிவில் சல்லடைச் செல் (sieve cells), சல்லடைக்குழாய் (sicve tube), துணைச் செல்கள் (companion) cells}, ஃப்ளோயம் நார் (phloem fibre), ஃப்ளோயம் பாரன்கைமா (phloem parenchyma) போன்ற நிலைத் திசுக்கள் அடங்கி யுள்ளன. நகேலி என்பார் முதன் முதலாக கி.பி.1858 ஆம் ஆண்டு இத்திசுக்களுக்கு ப்ளோயம் எனப் பெய ரிட்டார். வேளாண்மைப் பயிர்த் தாவரங்களில் சல்லடைக் குழாய்கள் உணவைக் கடத்தும் வேலை களில் பெரும் பங்கு பெறுகின்றன. சல்லடைத் தட்டுகள் (sieve plates) குழாய்களின் குறுக்கே அமைந்துள்ளன. இத்தட்டுகள் உணவைக் கடத்து வதற்குப் பெரிதும் உதவிபுரிகின்றன. இவற்றைச் சுற்றித் துணைச் செல்களும், பாரன்கைமா செல் களும் அமைந்துள்ளன. ப்ளோயம் நார்கள் இவற் றிற்கு உறுதி அளிக்கின்றன. சணல், புளிச்சை நார் என்பன கற்றாழை நார் ஃப்ளோயம் நார்களைக் குறிப்பன. இவை பொருளாதாரச் சிறப்பு ஃப்ளோயம் வாய்ந்தவை. கட த்தும் உணவிற்குப் ஃப்ளோயம் சாறு (phloem sap) என்று பெயர். இதில் அமினோ அமிலங்கள், சர்க்கரை, புரோட்டீன், கரிய அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. பனை, மரங்களிலிருந்து தென்னை எடுக்கப்படும். பதனீர், ஃப்ளோயம் சாற்றிற்கு ஓர் எடுத்துக்காட் டாகும். வகைகள். ஃப்ளோயமும், சைவமும் அவற்றின் வளர்ச்சியைப் பொறுத்து முதன்மையான ஃப்ளோயம் primary phloem), இரண்டாம் நிலை ஃப்ளோயம் (sccondary phloem), முதன்மையான சைலம் (primary xylum) இரண்டாம் நிலைச் சைலம் (secondary xylum) எனப்பகுக்கப்படும். இதே போல் இதன் அமைப்பையும் புரோட்டோசைலம் (proto xylum) மெட்டாசைலம் (meta xylum) என இரு வகையாகப் பிரிக்கலாம். ஆக்கத்திசுக்களிலிருந்து முதன் முதலில் தோன்றும் புரோட்டோசைலமும்,ஃப்ளோயமும் செடி முன்பே களின் பகுதிகள் வளர்ச்சியடைவதற்கு முதிர்ச்சி அடைந்து விடுகின்றன. ஆனால் மெட்டா ஃப்ளோயமும் மெட்டா கைலமும் செடிகளின்பகுதிகள் வளர்ச்சி அடைந்த பின்டே முதிர்ச்சி அடைகின்றன. சைலமும் ஃப்ளோயமும் பொதுவாக ணைந்தே காணப்படும். சைலம் திசுக்கள் ஃப்ளோயம் திசுக்கள் இடையே கேம்பியம் இருந்தால் இவற்றிற்குத் திறந்த சாற்றுக் குழாய்த் திரள்கள் (open vascular bundles)