124 கடமான்
24 கடமான் ஒற்றைத் தலை மஞ்சரிகள். மலர்கள் மணமுள்ளவை, உச்சியில் கொத்தாயிருக்கும், உருண்டை வடிவ மானவை. பூவடிச்செதில்கள் இலையடிச் சிதல்கள் போலிருக்கும். அவை மஞ்சரித் தண்டினடியில் இருக் கும். பூக்காம்புச் செதில்கள் இல்லை. புல்லிக்குழல் நெருக்கமாக ஒட்டியிருக்கும்; ஆனால் ணைந் திராது மடல்கள் 5. அல்லிகள் இணைந்தவை. குழல் நீளம் புனல் வடிவாக இருக்கும். தொண்டை மயிரற் றவை. திருகு இதழமைவில் காணப்படும். மகரந்தத் தாள்கள் 5. தொண்டையில் அமைந்தது. மகரந்தக் கம்பிகள் குறுகியவை. மகரந்தப் பைகள் முட்டை அல்லது அம்பு முனை வடிவாயிருக்கும்; கூர்மை யானவை. சூலகப் பை மேல்புறம் அறைகளையும், கீழ்ப் புறம் 2 அறைகளையும் கொண்டு காணப்படும். கீழ்மட்டச் சூலகப்பைகள்; பல சூல்கள் கிடைமட்டத் தில் அமைந்திருக்கும். சூலகத்தண்டு நூல் போன்றது. கனி-கூட்டுக்கனி (multiple fruit). உருண்டைக் கனியின் பூத்தளத்தின் மீது கேப்ஸ் ல்கள் அடங்கி து யிருக்கும். கேப்ஸுல்கள் 4 தொப்பிகளாக மேலே அமைந்திருக்கும்; நொறுங்கக்கூடியவை. விதைகள் பல மூலைகளுடன் காணப்படும். புற உறை சிறு திட்டுகளுடன் காணப்படும். முளைசூழத சை சதைப்பற்றானது. கரு நுணுக்கமாகவும் வட்டமான வித்திலைகளாகவும் இருக்கும். முளைவேர் மட்டமான உருளை போன்றது. கனிகள் மஞ் கள் நிறமான சதைக்கனி. இந்தியாவில் கடப்ப மரங்களை அஸ்ஸாம். மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் காணலாம். இம்மரம் 6-8 ஆண்டு களில் முழு வளர்ச்சி அடைந்து பயன் தரும். இது நேராகவும் உருளை போன்ற தண்டுடனும் 9 மீட்டர் உயரமும் ஏறத்தாழ 2 மீட்டர் கனமும் கொண்ட மரமாக வளரும். நல் வடிகா வசதியுள்ள மணல் பாங்கான நிலம் இம்மரத்தின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. மரக்கட்டை. கடம்பமரத்தின் மரக்கட்டை மஞ்சள் கலந்த வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலி ருக்கும். வழவழப்பாகவும், கனமில்லாமலும் இருக்கும். ஒரு கன அடிக்கட்டையின் எடை 15 கிலோதான் இருக்கும். இம்மரம் தேக்குமரத்தைப்போல் கடினத் தன்மையைக் கொண்டிருக்கும். மரத்தை வாளால் அறுத்து மரப்பலகைகள் பெறலாம். மரத்தை வெட்டி அறுத்தவுடன் நன்றாக உலர்த்த வேண்டும். இல்லை யேல் பூஞ்சணம் கறையான் முதலியவற்றால் கேடு விளையும். பயன்கள். இம்மரத்தைக் கொண்டு உத்திரங்கள் இறைவாரக்கை (rafters) முதலியன செய்யலாம். மேலும் அறுத்த பலகைகளில் கள்ளிப் பெட்டிகள், கரும்பலகைகள், விலை குறைந்த பலகைகள் செய்ய லாம். பர்மாவில் கடப்பமரத்தை வளர்த்து அதில் தீக்குச்சிகள் மற்றும் மரக்கூழினால் காகிதம் தயாரிப்ப துண்டு. மருத்துவப் பண்புகள். கடப்ப மரத்தின் இலைகள், பழம், விதை, பட்டை முதலியன மருந்துக்குதவும். கடப்பமரத்தின் இலைகளைக் கஷாயம் செய்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், தொண்டைப்புண் முதலியன நீங்கும். வயிற்று நோய்களுக்கும் நீர் வேட்கையுடன் கூடிய சுரங்களுக்கும் பழச்சாற்றுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொடுக்க இந்நோய்கள் நீங்கும். கடப்பமரத்தின் விதைக்குக் கடிநஞ்சு, நீரேற்றம், மாந்தம், வளிநோய் ஆகியவற்றை நீக்குந் தன்மை உண்டு. இதன் பட்டையை இடித்துக் கஷாயம் செய்து எலும்புக்காய்ச்சல், குளிர்காய்ச்சல் முதலிய நோய்கள் நீங்கத் தரலாம். பட்டையை இடித்து ஒற்றடமிடப் பிடிப்பு முதலியன குணமாகும். கண் நோய்களுக்குப் பட்டை பயனாகிறது. சீனாவில் பட்டையைச் சிறுநீரக வலிக்குப் பயன்படுத்துகின்றனர். சில கோயில்களில் கடப்பமரம் தலமரமாகக் கருதப்படுகிறது. கடமான் இராபின்சன்தாமஸ் நுகரும் திறன், பார்வைத் தெளிவு, நீண்ட செவி களால் உற்றுக் கேட்கும் திறன், விரைந்தோடும் வேகம் கொண்ட கடமான்கள் (cervus unicolar) மான் இனத்திலேயே பெரிய உருவம் கொண்டவை (5அடி உயரம், 320 கிலோ உடல் எடை). அடர்ந்த காடுகளிலும், காடுகளை ஒட்டிய புல்வெளி களிலும் தாவரங்களை உண்டு வாழ்கின்றன. இவை இந்தியா, பர்மா, இலங்கை போன்ற காணப்படுகின்றன. கடமான்கள் நாடுகளில் ஆண் கடமான்களுக்கு எடுப்பான கொம்புகளும் (26 அங்குல நீளம்), கற்றையாகப் பிடரி மயிரும் உள்ளன. பெண் மான்களுக்குக் கொம்புகள் இல்லை. முகச்சுரப்பிகள் கண்களுக்குக் கீழே மணச்சுரப்பிக ளாக நன்கு வளர்ந்துள்ளன. நீண்ட காதுகளும், மஞ்சன் அல்லது சாம்பல் கலந்த பழுப்பு நிறத் தோலும், பக்க நகங்கள் கொண்ட குளம்புகளும் கொண்டுள்ளன. மேய்ச்சல் காட்டின் எல்லையைப் பாதுகாக்கவும், எதிரிகளைத் துரத்தவும், பெண் மான்களைக் கவரவும் ஆண் கடமான்களின் எடுப்பான கொம்புகள் பயன் படுகின்றன. மென்மையான வெல்வெட் தோலால் மூடப்பட்ட கொம்பு மொக்குகளாகத் தோன்றி, மூன்றாம் ஆண்டில் பக்கத்துக்கு மூன்று கிளைகளைக்