பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ அகழாய்வுத் தோற்றம்‌ 127

அலுவலராகக் கௌஸ்டேயூ என்பவருக்கு அடுத்துப் பதவி ஏற்ற கமாண்டர் பிலிப்பே தைலேஸ் என்பார் தலைமையில் 1958 ஆம் ஆண்டில் மார்சேல்சுக்கு அப்பால் டிட்டான் கடல் நீரடிப் பாறைப் பகுதியில் மற்றோர் அகழாய்வு நடத்தப்பட்டது. அந்தச் சிதைவுற்ற பகுதியிலிருந்து கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு சிறு ரோமானியக் கலங்கள் மீட்கப்பட்டன. ஆகிய கடலி கௌஸ்டேயூவின் கிராண்ட் காங்லோயே அக ழாய்வு நடந்த காலத்தில், தைலேஸ், தொல்பொருள் துறையாளர் ஃபெர்னாண்டு, பீநாய்ட் இருவரும் மூழ்கிப்போன கப்பல் ஒன்றைக் லிருந்து வெளியே எடுக்கும்போது அக்கப்பலை மீண்டும் உருவாக்குவதே நோக்கமாக இருக்கவேண்டுமென்றும், அகழாய்வு மேலும் சிறந்த முறையில் செய்யப்பட வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அக்காலத்தில் நீரகழாய்வுகள் தொழில்நுட்ப அடிப்படையில் செய்யப்படவில்லை. ஒரு பொருள், அதன் சுற்றுச் சூழலோடு கொண்டுள்ள தொடர்புதான் பழங் காலத்தைப்பற்றி அறிய உதவும் சிறந்த கருவி என்ற உண்மை இந்த அகழாய்வுகளில் வெளிப்பட்டது. மீட்கப்படும் பொருள்களில் மிக மதிப்புள்ள பொருள் சுப்பல்தான் என்பது விரைவிலேயே தெளிவாகியது. அதே போல ஒரு கப்பலை அப்படியே முழுமையாக வெளிக்கொணர முடியாது என்பதும் தெளிவாகியது. அமெரிக்கர்களின் ய நீரகழாய்வுப்பணிகளில் தொடர்பு 1960 ஆம் ஆண்டில்தான் தொடங்கியது. அப்போது பென்சில்வேனியா பல்கலைக்கழக அருங் காட்சியகம், கடலில் மூழ்கிக் கிடந்த, கி.மு. 1200 கப்பலொன்றை வெளிக்கொணர், ஆம் ஆண்டின் அகழாய்வுக்குழு ஒன்றைத் துருக்கி நாட்டிற்கு அனுப்பியது.ஜார்ஜ்பாஸ் அக்குழுவின் இயக்குநராக வும் பீட்டர் கிராக்மார்ட்டன் அதன் தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்தனர். சைப்ரசில் தொல் பொருள் பின்னர் இருந்தவரும் இங்கிலாந்தில் கப்பல் துறை சார்ந்த தொல்பொருள் நிறுவனத்தைத் தோற்றுவித்தவருமான ஜோண்டுப் ளாட் டெய்லர் என்பார் அக்குழுவின் அகழாய்வாளர் பொறுப்பை ஏற்றார். இயக்குநராக தென்துருக்கியிலுள்ள கெஸிடோனியா முனைக்கு அருகிலுள்ள தீவுத் தொகுதிக்கு அப்பால்தொண்ணூறு அடி ஆழத்தில் அந்தக் கப்பற் சிதைவு கிடந்தது. கப்பல் சரக்கு அறையின் செம்பின னாலான பாளங்களின் சில துண்டுகளைத் தவிர பெரும்பாலும் எதுவுமே கண்ணுக்குத் தோன்றவில்லை. காகிதத்தில் அக் கப்பலை மீண்டும் வரையக்கூடிய வகையில், மூவாயி ரம் ஆண்டுக்கு முற்பட்ட அந்தக் கப்பற் சிதைவில் எவையெவை உள்ளன என்பதை விவரமாகக் குறித்துக் கொண்டபின், கப்பற்பகுதிகளை எடுப்பதுடன் கிடைக்கக்கூடிய சரக்குகளையும் எடுப்பதெனத் பட்டனர். கடல் அகழாய்வுத் தோற்றம் 127 திட்டமிட்டனர். இந்த அகழாய்வுப்பணிக்கு வரை படம் எழுதுவோர், நிழற்படம் எடுப்போர், அகழாய் வாளர் ஆகிய தொழில்நுட்ப வல்லுநர்களே அவர்க ளுடைய தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் அவர்களில் ஏறத்தாழ பாதிப்பேருக்குக் கடலில் மூழ்கி ஆய்வு செய்வது புதிதாக இருந்தது. ஆயினும் கடலில் மூழ்குவோரைத் தொழில் நுட்ப வல்லுநர்களாக ஆக்குவதைவிட, தேர்ந்தெடுக்கப் பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுக்குக் கடலில் மூழ்குவதற்குப் பயிற்சியளிப்பது எளிதாக இருந்தது. இவர்களில் ஃபிரெடெரிக் டூமாஸ் என்ற ஒரே ஒருவர் தான் நீரகழாய்வில் முன்னனுபவம் பெற்றிருந்தார். அவர் பிரஞ்சுக் கப்பற்படையின் ஆழ்கடல் ஆய்வுக் குழுவில் தலைமை மூழ்குபவரான கெளஸ்டேயூவுடன் சேர்ந்து பணியாற்றியவர். இன்று பயன்படுத்தப் படுகின்ற அகழாய்வுக் கருவிகளின் உற்பத்தியிலும் அவர் நேரடித் தொடர்பு கொண்டிருந்தார். அடிப் படையான அகழாய்வுக்குழுவினர் பதினெட்டுப்பேர் இருந்தனர். அவர்களில் ஒன்பது பேர் அகழாய்வுத் துறையினர்; ஒன்பது பேர் துருக்கி நாட்டுப் படகோட்டிகள் அப்பட கோட்டிகளில் நான்கு பேர் தலைக்கவசமணிந்து கடலில் மூழ்குவதில் நிறைந்த அனுபவம் உடையவர்கள். ந்த அகழாய்வு வேலையைச் செய்வதற்கு, நிழற்படம் கழுவக்கூடிய இருட்டறை ஒன்று: இரண்டு வரைப்படம் எழுதுவோர் உட்கார்ந்து எழுதக் கூடிய அளவில் வரைபட அறை ஒன்று; மீட்கப்பட்ட பொருள்களைத் தூய்மை செய்து, பாதுகாப்பாக வைக்கும் ஆய்வுக்கூடத்திற்கான இடம், உயர்ந்த, குறைந்த அளவுடைய காற்றழுத்தக் கருவிகள் வைப்பதற்கான இடம், எந்திரங்களைப் பழுது பார்ப் பதற்காவும் பாதுகாப்பாக வைப்பதற்காகவுமான இடம். செம்பு, வெண்கலப் பொருள்களைக் கழுவி எடுக்க மிகுதியான நல்ல நீர்வசதி ஆகியவை தேவைப் பட்டன. இவை எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கக் கூடிய அளவில் எந்தக் சுப்பலும் அவர்களுடைய நிதி ஒதுக்கீட்டில கிடைக்கவில்லை எனவே அருகிலுள்ள கடற்கரையில் மிகுதியான நன்னீர் கிடைக்கக்கூடிய இடத்தில் த்தில் முகாம் அமைத்துக்கொண்டு, துருக்கிய மீன் பிடிக்கும் படகுகளைப் பயன்படுத்தி வேலை செய்தனர். முதலில் வரைவு நிழற்படச் சட்டம் ஒன்றை வைத்துச் சிதைவின் விளக்கக் காட்சிப்படம் ஒன்றை தீர்மானித்தனர். வரையலாமெனத் அடிப்பகுதி பாறைகள் நிறைந்தும், ஒழுங்கில்லாமலும் இருந்த தால் இதைச் செய்வது கடினமாயிற்று. பிறகு நாடாவைக் கொண்டு முக்கோண வழி அளவீட்டு முறையால் செய்யத் தீர்மானித்தனர். வரிசையாக நிலையான புள்ளிகளைக் குறித்துப் பாறையில் நீண்ட ஆணிகள் அடித்து ஒவ்வொரு பொருளையும்