கடல் அப்பம் 129
செய்ய முறையான அனுமதி பெற்றிருக்கவேண்டும். அதைச்செய்வதற்குரிய தொழில்நுட்பத்திறன் இருக்க வேண்டும். நிதி வசதி இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருந்தாலும் அந்தக் கப்பற் சிதைவு உள்ள இடத்தைச் சரியாகக் கண்டுபிடிக்கத் தவறி விட்டால் அகழாய்வாளர் ஏமாற்றமே அடைவார். செ.இரெ.ஜெயச்சந்திரன் . கடல் அப்பம் /29 கடல் அட்டை இது கடலினடியில் பாறைகள் நிறைந்த பகுதியில் வாழும், முள்தோலி (echinodermata) தொகுதியை சேர்ந்த விலங்காகும். இதன் உருண்டையான உடல் முழுதும் முள்களால் மூடப்பட்டுள்ளதால், தோற்றத் தில் முள்ளெலியை ஒத்துள்ளது. ஆயினும் இதன் தோல் கடினமான போன்றது. கடல் அட்டையின் (sea urchin) உடல் பந்து போன்றிருப்பினும் அடிப்பகுதி சிறிது தட்டையாக உள்ளது. இதன் நடுவில் வாயும் மேல் பகுதியின் நடுவில் மலத்துளையும் உள்ளன. அட்டையின் ஓடு (உடல்) கறுப்பு, சிவப்பு பச்சை. வெண்மை,காக்கி ஊதா நிறத்தில் இருக்கும். சிலவகைக் கடல் அட்டை கள் ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களையும் கொண் டுள்ளன. உடலின் குறுக்களவு (விட்டம்) 6 12 செ.மீ. வரையும் சிலவகைகளில் 36 செ.மீ. வரையும் இருக்கும். கடல் அட்டையின் உடல் மற்ற முள்தோலி களைப் போலவே ஆரச்சமச்சீர் (radial symmetry) கொண்டுள்ளது. உடலை வாயிலிருந்து மலத்துளை வரை 10 ஆரப்பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் 5 பகுதிகள் குழற்கால்களைக் கொண்டுள்ளன. பகுதிகள் குழற்கால்களற்றவை. இவ்விரு பகுதிகளும் மாறிமாறி அமைந்துள்ளன. ஏனைய . கடல் அட்டைகளின் உடலை மூடியுள்ள முள்கள் அசையக்கூடியவை. இவை ஒழுங்காகப் பரவியுள்ளன. உடலின் மையப்பகுதியில் அமைந்த முள்கள் மிக நீளமானவை. துருவப் பகுதிகளில் உள்ளவற்றில் குட்டையாயுள்ளன. முள்களின் அடிப்பகுதி குழிவாக உடலின் மேற்புறத்தில் பந்து போன்ற அமைப்பில் பொருந்தியுள்ளது. முள்களை அசைக்க இருவகைத் தசைகள் உதவுகின்றன. சிலவகை அட்டைகளின் முள்கள் நுனியில் நச்சுப்பையைக் கொண்டு எதிரி களை நிலையிழக்கச் செய்யும். கடல் அட்டைகள் கடவினடியில் உள்ள பாறைகளின் மேற்பரப்பில் வாழ்கின்றன. சிலவகை அட்டைகள் பாறைகளில் உள்ள குழிகளிலும், பாறைகளைத் துளைத்தும் வளை பறித்தும் வாழ்வதுண்டு. அ.க.7 g கடல் அட்டைகள் பாசிகள், மட்திய அங்ககப் பொருள்கள், ஒட்டி வாழும் விலங்குகள் ஆகிய வற்றை உண்ணுகின்றன. கடல் அட்டைகள் வேற்றுப் பாலின. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே புற வேற்றுமைகள் இல்லை. முட்டைகளும் விந்தணுக் களும் கடல் நீரில் இடப்படுவதால் கருவுறுதல் நீரில் நடக்கிறது. முட்டையிலிருந்து வெளிவரும் இளவுயிரி கள் இருபுறச்சமச்சீரும் உருமாற்றமும் கொண்டு கடல் அட்டைகளாக வளர்கின்றன. கடல் அட்டைகளின் முள்கள் எழுதுகோல்களாகப் பயன்படுகின்றன. எம். உத்தமன் கடல் அப்பம் சில துகடலினடி மணலில் புதைந்து வாழ்கின்ற முள்தோலித் தொகுதியைச் சார்ந்த விலங்காகும். வை மிகவும் தட்டையான ஓடு போன்ற வட்ட வடி விலான உடலமைப்பைக் கொண்டவை. வகைக் கடல் அப்பங்களின்(cake urchins) உடலில் 2 முதல் பல நீள்வட்டத் துளைகளுண்டு. உடல் முழுதும் சிறிய முள்கள் மூடியுள்ளன. இவை கடல் அட்டைகளின் முள்களைவிட மிகவும் சிறியவை, ஆயினும் எண்ணிக்கையில் மிகுதியாக உள்ளன. பெரும்பாலான கடல் அப்பங்கள் மணலில் புதைந்து வாழ்கின்றன. சிலவகையில் உடலின் பின்