பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ ஆமை 131

பழங்காலத்தில் மிகுதியாக வளர்ச்சி பெற்றிருந்த முள் தோலிகள் இவையேயாகும். முன்னிருந்த வற்றில் சிலவே இக்காலத்தில் எஞ்சியுள்ளன. இவை உயிரிகளாயினும் மலர் போன்றே தோன்றுவதால் கடல் அல்லி எனப்பட்டன. இடை யூழிக் காலச் சுண் ணாம்புக் கற்கள் பெரும்பாலும் இவ்வுயிரிகளால் தோன்றியவையே. -ஜி.எஸ்.விஜயலக்ஷ்மி கடல் ஆமை நீண்ட காலம் உயிர்வாழும் விலங்கினங்களுள் ஆமை யும் ஒன்றாகும். இவை சராசரியாக 150 ஆண்டுகள் வாழ்கின்றன. இந்தியக் கடல்களில் ஐந்து இன ஆமை கள் காணப்படுகின்றன. கெலோனியா மைதாஸ் ( Chelonia mydas). பச்சை நிறங்கொண்ட ஆமைகள் பச்சை ஆமைகள் என்று குறிப்பிடப்படுகின்றன (படம் 1). இவற்றின் மேலோடு முட்டை வடிவத்தையும் இதன் மேல் பகுதி கரும்பழுப்பு அல்லது கருமை நிறத்தையும், கீழ்ப்பகுதி சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தையும் கொண்டிருக்கும். ஏறத்தாழ 75-140 கிலோகிராம் எடையையும். 80-120 செ.மீ.நீளத்தையும் கொண்டுள்ள இவை இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் மிகுதியாகக் கடல் ஆமை 131 காணப்படுகின்றன. கடல் தாவரங்களை மட்டுமே உண்டு வாழ்வதால், கடல் களைகள் நிறைந்த பகுதி களில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன. இவற் றின் இறைச்சியில், 8-20% புரதம் உள்ளதால், மீன், ஆட்டிறைச்சிகளுக்கு இணையாகக் கருதப்பட்டு உண்ணப்படுகின்றது. இதன் முட்டைகளையும் உண வாகப் பயன்படுத்தலாம். ஜெர்மானியர்கள் இதன் இறைச்சியிலிருந்து ஒரு வகையான சாறு செய்து விரும்பிப் பருகுகிறார்கள். சதையின் மேலாகக் காணப்படும் கொழுப்பிலிருந்து தோணியின் மேல் பூச்சிற்குப் பயன்படும் ஓர் எண்ணெய் எடுக்கப்படு கிறது. இவ்வின ஆமைகளின் இரத்தம், இளைப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படு கின்றது. இதன் தோலும் அழகுப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றது. எரட்மோகெலிஸ் இம்பிரிகேட்டா (Eretmochely's imbricata }. இவ்வினத்தைச் சார்ந்த ஆமைகள் அழுங்கு ஆமைகள் எனப்படுகின்றன. பச்சை நிறத்தையும், பறவைகளின் அலகு போன்ற அமைப்பையும் தலை யில் கொண்டுள்ள இவற்றின் மேலோடு முட்டை வடிவத்தைக் கொண்டிருக்கும். மேற்பகுதி கரும் பழுப்பு நிறத்தையும், மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் கலந்த கோடுகளையும், கீழ்ப் பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்தையும் கொண்டி ருக்கும். ஏறத்தாழ 60-100 கிலோகிராம் எடையை யும், 80 முதல் 100 செ.மீ. நீளத்தையும் கொண் டுள்ள இவ்வின ஆமைகள் அனைத்து உயிரினங் அ. க. 7 9 அ படம் 1. கெலோனியா மைதாஸ்