கடல் ஆமை 133
கடல் ஆமை 133 களையும் உண்ணக் கூடியவை. வெப்ப, மிதவெப்ப ஆழக் கடல்களில் மிகக் குறைந்த அளவிலும், ஆழம் குறைந்த கடற்கரைப் பகுதிகளில் மிகுதியாகவும் காணப்படுகின்றன. இவற்றின் முட்டைகள் மட்டுமே பெரும்பாலும் உணவுக்குப் பயன்படுகின்றன. ஓடுகள் அழகுப் பொருள்கள் செய்யப் பயன்படுகின்றன. கேரட்டா கேரட்டா ஜைகாஸ் (Caretta Carita gigas). இவ்வினத்தைச் சார்ந்த ஆமைகள் பெருந் தலை ஆமை அல்லது நாய் ஆமை எனப்படுகின்றன. இவற்றின் ஓடுகள் இதய வடிவத்தைக் கொண்டவை. மேல்பகுதி பழுப்பு நிறம் கலந்த சிவப்பு நிறத்தையும், கீழ்ப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்தையும், ஆரஞ்சு நிறப் புள்ளிகளையும் கொண்டுள்ளன. பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படுகின்ற இவை 100-150 கிலோகிராம் எடை யையும், 110-120 செ.மீ. நீளத்தையும் பெற்றுள் ளன. இவ்வின ஆமைகள் மெல்லுடலிகள், மீன்கள் போன்றவற்றை மிகுதியாக உண்ணும் ஊனுண்ணி களாகும். அந்தமான், நிக்கோபார், இலங்கைக் கடல் களில் வை மிகுதியாகக் காணப்படுகின்றன. இவை நெடுந்தொலைவு பயணம் செய்வதோடல்லாமல், கழிமுகப் பரப்புகளையும் அவ்வப்போது வந்தடை கின்றன. இவற்றின் இறைச்சியும், முட்டையும் உணவாகப் பயன்படுகின்றன. ஓடுகள் அழகுப் பொருள்களாகப் பயன்படுகின்றன. லெபிடோ கேலிஸ் ஓலிவேசியா Lepidochelys oli- vacea). சிறிய உருவத்தைப் பெற்றுள்ளதால், இவ் வினத்திற்குச் சிற்றாமை என்றும் பெயாருண்டு மேலோடு அரைவட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. சிறிய தலையில் ஓரமுள்கள் அடங்கிய அலகு போன்ற நுனியும் காணப்படுகிறது. மேற்பகுதி பழுப்பு நிறத்தையும், கீழ்ப்பகுதி மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தையும் பெற்றிருக் கும். ஏறத்தாழ 40-50 கிலோகிராம் எடையையும், 70.75 செ.மீ. நீளத்தையும் இவ்வின ஆமைகள் கொண்டுள்ளன. இந்திய, பசிபிக் பெருங்கடல்களி லும், அவற்றை ஒட்டிய அண்மைக்கடல்களிலும் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன. முட்டைகள் மட்டுமே பெரிதும் உணவாகப் பயன்படுகின்றன. இவற்றின் தோல் அழகுப் பொருள்கள் உருவாக்கப் பயன்படுவதால் மிகுதியாக ஏற்றுமதியாகிறது. டெர்மோகெலிஸ் கோரிகேசியா ( Dermochelys cori- cacea). பல்வேறு ஆமை இனங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இவ்வினம் பெரும் பருமனுடைய தாகும்.(படம் 5) ஏறத்தாழ 200-750 கிலோகிராம் எடையையும். 140-180 செ.மீ. நீளத்தையும் கொண்டுள்ள இவ்வினம் ஏழுவரி ஆமை அல்லது தோணி ஆமை எனப்படும்.உடல் ஓரளவு தட்டை யாகவும், மென்மையான தோலால் மூடப்பட்டதாக வும் தலை சிறியதாகவும், நுனியில் அலகு போன்ற அமைப்புடையதாகவும் காணப்படும். உடலின் மேல் பகுதி கரும்பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தையும், கழுத்து வெள்ளைப் புள்ளிகளை யும்.உடலின் கீழ்ப்பகுதி சிலப்பு வெள்ளை நிறங்க படம் 4, லெபிடோ கேலிஸ் ஒலிவேசியா