134 கடல் ஆமை
134 கடல் ஆமை ளையும் கொண்டுள்ளன. இலங்கைக் கடலில் இவ் வினம் பெருமளலில் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. ஆழ்கடல்களில் பெரும்பாலும் மிகுதியாகக் காணப் படுவதோடு, இவை நீண்ட தொலைவும் செல்லக் கூடியவை. அவ்வப்போது கடற்கரைப் பகுதிகளையும் அடைகின்றன. இவற்றின் முட்டைகள் உணவாகப் பயன்படுகின்றன. உடலின் கொழுப்பிலிருந்து தயா ரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோணிகளுக்கு மேல்பூச்சாகப் பயன்படுகின்றது. இதன் இறைச்சி; மீன் தூண்டிலுக்கேற்ற ஓர் உணவாகவும், தோல் விலைமதிப்புள்ள பொருளாகவும் கருதப்படுகின்றன. கடல் ஆமைகளின் வியத்தகு உணவுப் பழக்கம். வாரம் ஒருமுறையோ மாதம் ஒரு முறையோ உணவு உட்கொள்ளும் பழக்கத்தைச் சில இனக் கடல் ஆமைகள் கொண்டுள்ளன. நீரை மிகுதியாகக் குடித் துத் தேக்கி வைக்கும் தன்மையை ஆமைகள் கடைப் பிடிக்கின்றன. வறண்ட காலங்களில் தேக்கிய நீரைப் பயன்படுத்துகின்றன. பல் இனப்பெருக்க முறை. கடல் ஆமைகள் ஏறத் தாழப் பத்து ஆண்டுக்காலத்தில் இன முதிர்ச்சி அடைகின்றன. ஆண், பெண் ஆமைகள் ஒரு முறை இனச்சேர்க்கையில் ஈடுபட்ட பின்பு, பெண் ஆமைகள் ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக முட்டை யிடுகின்ற வியத்தகு பழக்கத்தைக் கொண்டுள்ளன. முட்டையிடுவதற்குக் கடல் ஆமைகளும் தரைப் பகுதிக்கே வருகின்றன. பெண் ஆமைகள் முட்டை யிடுவதற்கு முன் சூரிய ஒளிபடுகின்ற மணற்பாங்கான கடற்கரையைத் தேர்ந்தெடுத்துக் கால்களின் உதவி யால் குழிதோண்டி முட்டைகளை இடுகின்றன. ஒவ்வொரு குழியிலும் ஏறத்தாழ 100 முட்டைகள் இருக்கக்கூடும். பச்சை ஆமைகள் 15 நாளுக்கொரு முறை 200 முட்டைகள் வீதமாக நான்கு முறைகளில் முட்டையிடும். ஒவ்வொரு முட்டையும் 5 செ.மீ பருமன் உடையது. முட்டைகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டுப் பெண் ஆமை இரவிலேயே முட்டைகளை இடும். சூரிய ஒளியின் துணையால் 6-13 வார இடைவெளியில் குட்டிகள் வெளிவரும். குட்டி ஆமைகள் கடலை நோக்கிச் செல்லும்போது இடையூறு ஏற்பட்டால் மண்ணுக்குள் பதுங்கிப்பாது காத்துக் கொள்ளும். கடலுக்குள் சென்றவுடன் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஓராண்டு வரை கடலின் அடிமட்டத்தில் வாழும் இயல்புடை பின்பு பவளப்பாறை, கடல் தாவரங்கள் போன்ற இடங்களில் மேல்மட்டத்திற்கு வருகின்றன. யன். கடல் ஆமைகளின் மூச்சு. மூச்சுவிடுவதற்காக, நுரையீரல் மட்டுமன்றி இரத்தம் பெறுகின்ற சிறப் பான தோலுடன் கூடிய கழிவுப்பகுதியையும், தொண்டைப் பகுதியையும் கடல் ஆமைகள் பெற் றுள்ளன. இதன் காரணமாக இவை நாட்கணக்கில் வெளிக்காற்றைச் சுவாசிக்காமல் கடலின் அடிமட்டத் தில் வாழும் திறனைப் பெற்றுள்ளன. மிகு வெப்பக் காலங்களில் கண்களில் நீரை வெளியேற்றுவதோடு, மிகுந்த உமிழ்நீரை, கழுத்து முன்கால் பகுதிகளில் தெளித்து உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும் ஆற்றலையும் கடல் ஆமைகள் பெற்றுள்ளன. சில இன ஆமைகள் உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளத் தம் சிறுநீரைப் பின்கால்களில் அவ்வப் போது தெளித்துக்கொள்வதும் உண்டு. மீன்வளத்தில் கடல் ஆமைகளின் பங்கு. இந்தியக் கடற்கரைப் பகுதிகளில், பச்சை ஆமைகள் மட்டுமே தூத்துக்குடி, இராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் மிகுந்த அளவில் காணப்படுகின்றன. கடல் ஆமை படம் 5. டெர்மோகெலிஸ் கோரிகேசியா