கடல் உயிரியல் 137
கடல் உயிரியல் 137 பெரும்பாலும் ஸ்போராசோவா, சக்டோரியா, சிலி யேட்டா, ரைஸோபோடா, ப்ளே ஜல்லேட்டா போன்ற லகுப்புகளைச் சார்ந்தவையாக உள்ளன. கடல் வாழும் புரோட்டாசோவாக்களில் குறிப்பிடத்தக் புரோரோ சென்ட்ரம் மைகான்ஸ் (proro- கவை centrum micans) செரேசியம் ஃபர்க்கா (ceratium furca), செரேசியம் டிரைபோஸ் (ceratiuu tripos ) ரேடியோலேரியா (radiolaria), டைனோ ஃப்ளஜி ல்லேட் (dino flagellate) ஆகியன. புரையுடலி தொகுதியைச் சார்ந்த பல உயிர் கள் கடல் நீரில் காணப்படுகின்றன. இத்தொகுதியில் வரும் உயிரிகளின் உடல் பரப்பில் மிகுதியான துளை கள் காணப்படுகின்றன. ஆகையால் அவை புழை உடலிகள் எனப்படுகின்றன. இவை வேறு பொருள் களின் மீது நிலையாக ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. ஸ்பாஞ்சுகள் விலங்குகளே என்பதை அரிஸ்டாடில் கண்டறிந்தார். அதற்கு முன்னால் ஸ்பாஞ்சுகளைச் செடிகவாகக் கருதி வந்தனர். ஸ்பாஞ்சுகளில் சிறு கால்வாய்கள் உள்ளன. அவற்றில் எப்போதும் நீர் ஓடிக் கொண்டிருக்கும். லூகோசொலினியா கடற்பஞ்சு, கடலோர நீர் மட்டத்திற்கு அடியில் வாழும். கிளாத்ரினாவும் கடல் ஓரத்தில் காணப்படுகின்றது. யூபிலெக்டெல்லா ஸ்டா ரோகாலிப்டஸ், ஹையலோனிமா முதலிய ஸ்பாஞ்சு கள் ஆழ்கடலில் 0.03 கி.மீ.-5 கி. மீ. ஆழம் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன. ஸ்பாஞ்சுகளில் மூன்று முக்கிய கால்வாய் அமைப்புகள் உள்ளன. அவை ஆஸ்கான், சைக்கான், லூக்கான் என்பனவாம். ஸ்பாஞ்சுகளில் பாலிலி முறையிலும் பால் முறையிலும் இனப்பெருக்கம் நிகழ்கிறது. ஸ்பாஞ்சுகளின் லார்வா ஆம்ஃபி பிளாஸ்டுலா லார்வா எனப்படுகிறது. குழியுடலிகளில் மூன்று முக்கிய வகுப்புகள் உள்ளன. அவை ஆந்தோசோவா, ஸ்கைஃபோசோவா, ஹைட்ரோ சோவா ஆகியனவாகும். ஹைட்ரோ சோவாவைத் தவிர அனைத்துக் குழியுடலிகளும் கடலில் வாழ்கின்றன. பல கூட்டு வாழ்க்கை நடத்து கின்றன. குழியுடலிகளின் உணர்நீட்சிகளில் கொட்டும். செல்கள் இருப்பது இத்தொகுதிக்கே உரித்தான சிறப் பாகும். இவை உணவைப் பிடிப்பதற்குப் பயன்படு கின்றன. கடலில் வாழும் ஃபைசாலியாவைப் போர்ச்சு கீசிய போர் வீரன் என்று குறிப்பிடுவதும் உண்டு. இது மனிதனைக் கொட்டினால் நச்சு நீர் உடலுக்குள் சென்று கேடு விளைவிக்கும். கடலில் நீந்திச் செல் வோரை ஜெல்லி மீன் என்னும் குழியுடலி கொட்டி விட்டால் சில மணி நேரம் வேதனை உண்டாகும். ஆந்தோசோவாவைச் சார்ந்த பவளப்படிப் பாறைகளும் (corals), கடல் பூக்களும் (sea anemones ) கடல் நீரில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவற்றின் உணவு மண்டலத்தில் வாய், வயிற்றறை உள்ளன. உணர் இரு பகுதிகள் மட்டுமே நீட்சிகள் மூலமாக உணவை உட்கொள்கின்றன. இவை கலவா, கலவி இனப்பெருக்கங்கள் மூலமாகத் தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. பவளப் படிப்பாறைகள் கடலின் வெப்பம், ஆழ மில்லாப் பகுதிகளில் உள்ளன. பொதுவாகப் பவளப் படிப் பாறைகள் கரிபியன் கடல், மாலத்தீவுகள், மலேயாத் தீவுகள், பசுபிக் பெருங்கடல் முதலிய பகுதிகளில் பெரிதும் காணப்படுகின்றன. இவை 22°C க்கு மேலே உள்ள வெப்பநிலையிலும் 450 மீட்டர் ஆழத்திற்குள்ளேயும் நன்கு செழித்து வாழ்கின்றன. ஜெல்லி மீன்களில் மிகுதியாகக் காணப்படுவது அரிவியா ஆகும். வளை தசைப் புழுக்களில் annelida) குறிப்பிடத்தக்கவை காலிஸோனா. பியா, பெலாகோபியா, டோமோப்ட்டீரிஸ் ஆகியவை யாகும். கடலில் பெரும்பான்மையாகக் காணப்படுபவை மெல்லுடலிகளாகும். இவ்விலங்குகளின் ஓடுகள் மூலமாக ஆபரணங்கள். விளக்குகள், பூ ஜாடிகள், சிகரெட் சாம்பல் தட்டுகள் தயாரிக்கப்படுகின் றன. சுண்ணாம்பும், மெல்லுடலிகளின் ஓடுகளிலிருந்தே கிடைக்கின்றது. கடலில் வாழும் மெல்லுடலிகளில் மிக முக்கியமானவை ஆம்பிநியூராவைச் சார்ந்த கைட்டான்கள், கேஸ்ட்ரோபோடாவைச் சார்ந்த நத்தைகள், பெலிசிபோடாளில் வரும் மட்டிகள், செஃபலோபோடாவில் உள்ள ஸ்குவிட் ஆக்டோபஸ் களாகும். மெல்லுடலிகள் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவையாகக் கருதப்படுபவை கைட்டான்களாகும். இவற்றின் முதுகுப்புறத்தில் எட்டு தட்டுகள் போன்ற எட்டு அமைப்புள்ளது. இவை இரவில் மட்டும் இரை தேடுவதற்காக ஊர்ந்து செல்கின்றன. சில கைட் டான்கள் 23 × 12 செ.மீ, என்னும் நீள அகலங் களைப் பெற்றுள்ளன. வயிற்றுக்காலி வரிசையில் மிகுதியாகக் கடலில் காணப்படுபவை கடல் நத்தைகள்; லிம்பெட்ஸ். அபலோன்ஸ், சங்குகள். வெல்க்ஸ். இவற்றின் ஓடு கள் விலங்குகளைப் பாதுகாக்கப் பயன்படுகின்றன. லிம்பெட்டுகளும், அபலோன்களும் பாறைகளின் இடுக்குகளில் காணப்படுகின்றன. ஓடுகளின் துளை, மூடியால் (operculam) சூழப்பட்டுள்ளது. இம்மூடி காலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓடுகளிலும், அவற்றின் மூடிகளிலும் வளர்ச்சிக் கோடுகள் தென்படுகின்றன. இவற்றின் மூலமாக அவற்றின் வயதை அறியலாம். கோனஸ் எனப்படும் வயிற்றுக்காலியில் 600 க்கும் மேலான இனங்கள் உள்ளன. கோனஸின் ரேடுலா கூர்மையான பற்களாக மாற்றப்பட்டு நச்சுச் சுரப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விலங்குகள் பெரும்பாலும் பசுபிக் பெருங்கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும் காணப்படுகின்றன. இவை கொட்டி