பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ உயிரியல்‌ நிலையம்‌ 141

எலும்பாலானதால் மானவை. மீன்களை முன் ஆஸ்ட்டெய்கதிஸ் வகுப்பைச் சார்ந்த எலும்பு மீன்கள் என்பர். இவற்றில் வஞ்ஜிரம் (seer), காரப்பொடி (aranx) கெளுத்தி (cat fish), வாளை (trichurus). சங்கரா (synagris), துமலி (sarida thumtil), பறக்கும் மீன் (exocoetus), வௌவால் (pomfrot). பாஸ் (bass), காட் (cod), பெர்ச் (perch), டுனா (tuna), ஹேலிபட் (halibut), சார்டின் (sardine) ஆகியன முக்கிய இவற்றில் வாய் உடலின் முனையில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் குடல் நீண்டு, சுருண்டு மனிதருக்கு இருப்பதுபோல் உள்ளது. இம்மீன்களின் கருவுறுதல் உடலுக்கு வெளியே நிகழ் கிறது. இனப்பெருக்கத்திற்காகப் பல முறைகளைக் கையாளுகின்றன. ப்ளேயிஸ் என்னும் மீன் ஒரே சமயத்தில் 2,50,000-5,00,000 முட்டைகளை இடும். சால்மன் என்னும் கடல்மீன் முட்டையிடும் காலங்களில் மட்டும் நன்னீருக்கு வலசை போகும். தட்டை மீன்களில் இரு கண்களும் ஒரே பக்கத்தில் உள்ளன. கடல்குதிரை, குழல்மீன் (pipe fish) இவற்றில் ஆண் இனத்தில் ஒரு பை (breed pouch) உள்ளது. பெண் மீன்கள் இப்பையில் முட்டையிடுகின்றன. ஆண் மீன்கள் குஞ்சு பொரிக்கும் வரை முட்டை களைத் தாங்கி வாழ்கின் றன. மோலா மோலா என்னும் கட ற்சூரிய மீன் மிகமிக மெதுவாக நீந்தும், ஆகஸ்ட் மணவை . தன் எடை 900 கி.கி. ஆகும். இம்மீனை எவரும் உணவாகக் கொள்வதில்லை. வட கலிபோர்னியாவின் கடற்கரையோரங்களில் குருணியான் என்னும் மீன் பெருமளவில் உள்ளது. இவை ஏப்ரல். மாதங்களில் கரையோரங்களில் மள்ள தோண்டி அக்குழியில் முட்டைகளை இடுகின்றன. ஆண்மீன், பெண் மீனின் உடலில் ஒட்டிக் கொண்டு விந்தைக் கொட்டுகின்றது. பிறகு இம் மீன்கள் கடல் நீருக்குள் சென்று விடுகின்றன. குழியில் வளர்கின்ற கரு முட்டையிலிரு ருந்து வெளிவந்தவுடன் நீரால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றது. ஒளியில்லா ஆழ்கடல்களில் மீன்கள் வாழ்கின்றன. ஆழ்கடல் மீன்கள், பாக்டீரியாக்களின் மூலமாகவோ நொதிப் பொருளைப் பயன்படுத்தியோ ஒருவித மான குளிர்ச்சியான ஒளியை ஏற்படுத்துகின்றன. மீன்களின் உடலின் முதுகெலும்பற்ற விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஊர்வன வகுப்பைச் சார்ந்த கடல் ஆமைகளுர் உள்ளன. பச்சை ஆமை ஏறத்தாழ 90 கி.கி எடை வரை வளர்ச்சியுறுகிறது. ஆமைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால் அவற்றைக் காப்பாற்று வதற்காகப் பல நாடுகள் பல புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆமைகள் குறிப்பாகக் கரீபியன் சுடல், மெக்சிகோ கடல். இந்து பசிபிக் கடல், கலிபோர்னியக் கடலோரங்கள் முதலிய பல கடல் உயிரியல் நிலையம் 141 கடற்பரப்புகளில் காணப்படுகின்றன. மிகவும் அஞ்சத் தக்க, நஞ்சைக் கக்கும் பாம்புகள் கலிபோர்னியா, பசிபிக் கடல் போன்ற பல இடங்களில் உள்ளன. கடல் வாழும் பறவைகளில் குறிப்பிடத்தக்கவை பெங்குவின்பறவைகளாகும். இவற்றின் இறக்கைகள் துடுப்பு போல் அமைந்து நீந்துவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. அண்டார்டிக் கடலில் இவை மிகுதி யாகக் காணப்படுகின்றன. கட ல்புறா மற்றொரு கடல் வாழ் பறவையாகும். இது கடற்கரை ஓரங்களில் உள்ள இறந்த மீன்கள் அடிபட்ட மீன்கள் போன்ற க வற்றை உண்டு கடற்கரை ஓரங்களைத் தூய்மைசெய் கின்றது. பெலிகான் மற்றொரு பெரிய கடல் வாழ் பறவையாகும். இதன் நீண்ட பெரிய அலகிலிருந்து இதை எளிதில் கண்டறியலாம். கடலில் காணப் படும் மிகச் சிறிய பறவைகள் பெட்ரல் ஆகும். அவை படிமலர்ச்சியின் உச்சநிலையை அடைந்த பாலூட் டிகள் கூடக் கடலில் காணப்படுகின் றன. திமிங்கலம், டால்பின், சீல், கடல் பசு, டூகாங் ஆகியவை ஆகும். பாலூட்டிகள் மிக ஆழத்திலும் மூழ்கிச் செல்வது அறிவியலாருக்குப் பெரும் வியப் பை அளிக்கிறது. கடல் உயிரியல் நிலையம் கிருஷ்ணன் நிலத்தைவிட நீரில் மிகுதியான உயிரினங்கள் வாழ் கின்றன. மனித சமுதாயத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யக் கடல் பெரிதும் உதவு கிறது. கடலின் அடியிலிருந்து நிலக்கரி, எரிவளி. மண்ணெண்ணெய் போன்ற பொருள்கள் எடுக்கப்படு கின்றன. கடல் நீரிலிருந்து மின் உற்பத்தி செய்தல், கடல்நீரை நன்னீராக மாற்றல், கடல் உயிரிகளி லிருந்து மருந்துப்பொருள்கள் தயாரித்தல், கடற் கரைகளில் பொழுதுபோக்கு விடுதிகள் அமைத்தல். கடலின் அடியிலுள்ள கனிமங்களைத் தொகுத்து எடுத்தல், கடல்வாழ் உயிரினங்களின் பண்ணை அமைத்தல் போன்ற பல தொழில் முன்னேற்றங் கண்டுள்ளனர். இவை யாவும் கடவியல், கடல் உயிரியல் போன்ற ஆய்வுகளின் பயனால் விளைந்துள்ள நன்மைகளாகும். களைக் தொடக்ககாலக் கடலியல் ஆய்வுகள் உயிரினங் களைப் பற்றியவையாக இருந்தன. மீன்பிடி தொழிலும், கடல் வணிகமும் தொன்றுதொட்டு நடைபெற்று வந்திருப்பினும் பத்தொன்பதாம் நூற் றாண்டில்தான் கடலியல் ஆய்வுகள் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டன. மனிதனின் உணவாகப் பயன் படும் மீன், இரால், நண்டு, ஆளி, பாசி போன்ற நடல்வாழ் உயிரினங்களைப் பற்றியும், சுடலில்