142 கடல் உயிரியல் நிலையம்
142 கடல் உயிரியல் நிலையம் வாழும் பிற உயிரினங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தால் மேலைநாடு களில் கடல் உயிரியல் நிலையங்கள் பலவற்றைத் தோற்றுவித்துள்ளனர். சுற்றுப்புறச் சூழலுக்குத் தக்கவாறு கடலில் வாழும் உயிரினங்கள் எவ்வாறு வாழ்கின்றன என அறிந்து கொள்வதற்காக வேதி யியல், இயற்பியல், புவியியல், பொறியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த ஆய்வுகளையும் மேற்கொண் டுள்ளனர். இவ்வாறான பல ஆய்வுகளால் கடலின் தன்மையைப் பற்றியும், கடலில் வாழும் உயிரினங் களைப் பற்றியும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்; அவற்றின் மூலம் பல முன்னேற்றங்களையும் அடையக் கூடும். பெரிய தொழில் நிறுவனங்களின் பொருளுதவி யாலும், அரசு அளிக்கும் உதவித்தொகையாலும் தற்போது பல கடலியல் ஆய்வுக் கூடங்களும், கடல் உயிரியல் நிலையங்களும்(marine biological station) உலகெங்கும் இயங்கிவருகின்றன. உலகில் 2500 ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நிலை யங்கள் அவ்வப்பகுதிகளில் நிலவும் கடலின் தன்மை யைப் பற்றியும் அங்கு பெருமளவு காணப்படும் உயிரினங்களைப் பற்றியும் மனித சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் ஆய்வுகளை மேற்கொண் டுள்ளன. உலகெங்கும் பல நிலையங்கள் இருந்தும் அவற்றுள் முன்னோடிகளாகத் திகழும் ஒரு சில நிலையங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். 1872 இல் இத்தாலி நாட்டில் நேபிள்ஸ் நகரில் ஜெர்மானிய விலங்கியல் வல்லுநர் ஆண்ட்டன் டார்ன் என்பாரால் நிறுவப்பட்ட விலங்கியல் நிலை யம் உலகிலேயே பழமையானதும் புகழ் வாய்ந்ததும் ஆகும். பலவகையான கருவிகளையும், வசதிகளையும் கொண்டு நேபிள்ஸ் வளைகுடாவில் அமைந்துள்ள இந்நிலையத்தில் பலநாட்டு நிறுவனங்கள் உதவித் தொகையளித்து, ஆய்வுக்காக இட ஒதுக்கீடும் பெற்று அங்கு ஆய்வாளர்களை அனுப்பிச் சிறப்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. உலகில் முதன்முதலாக நிறுவப்பட்டு, மிகச்சீரிய முறையில் இயங்கிவரும் கடல்வாழ் மீன்கள், விலங்குகள் ஆகிய வற்றின் காட்சி நிலையம் ஒன்றும் (aquarium) துடன் இணைந்துள்ளது. பல இங்கிலாந்தில் 1884 இல்தொடங்கப்பட்ட பிளை மவுத் ஆய்வுக்கூடமே உலகத்தில் இரண்டாவதாகக் கருதப்படுவதாகும். இந்நிறுவனத்தில் நிலையாகப் பலர் பணியில் அமர்த்தப்பட்டு அவ்வப்போது வகையான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். மேலும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களின் ஆய்வுகளை நூலாக்கி ஆண்டு தோறும் இந்நிறுவனம் வெளியிடு கிறது. இவ்வாறே ஸ்காட்லண்டில் மில்போர்ட்டில் 1885 இல் ஒரு நிலையம் தொடங்கப்பட்டது. பின்னர் அது டன்ஸ்டாஃப்னேஜ் என்னுமிடத்திற்கு மாற்றப்பட் டது. மேலும் எடின்பர்க், போர்ட் எரின், குல்லர் கோட்ஸ் மினாய் பிரிட்ஜ் முதலான இடங்களில் பல் கலைக்கழகங்களைச் சார்ந்த கடல் உயிரியல் நிலை யங்கள் உள்ளன. இங்கிலாந்தில் மேலும் பல கடல் மீன் ஆய்வு நிலையங்களை அரசு நடத்தி வருகிறது. ஃபிரான்சில் 1859இல் கன்கார்னோ என்னு மிடத்திலும், 1863இல் ஆர்க்கேக்கன் என்னும் இடத் திலும் கடல் உயிரியல் நிலையங்கள் தோன்றின. பிரான்ஸ் நாட்டில் புகழ்வாய்ந்த நிலையம் ராஸ்காஃப் என்னுமிடத்தில் உள்ளது. சோவியத் ஒன்றியக் குடி யரசு, ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, டென்மார்க் போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் கடலியல் ஆய்வுக் கூடங்களும், கடல் உயிரியல் நிலையங்களும் உள்ளன. சிறிய தீவான மொனாகோவில் கூட ஒரு பெரிய ஆய்வு நிலையமும், உயிர் மீன் காட்சி நிலை யமும் உள்ளன. பல அமெரிக்காவில் கடற்கரையோரமாகப் இடங்களில் அரசும், கடற்படையும், பல்கலைக் கழ கங்களும் கடலியல் ஆய்வுக்கூடங்களையும், கடலியல் உயிரியல் நிலையங்களையும் அமைத்து ஆழ்கடல் ஆய்வு போன்ற பல சிறந்த ஆய்வுகளை நடத்தி வரு கின்றன. உலகிலேயே மிகப்பெரிய நிலையமாகக் கருதப்படுவது வுட்ஸ்ஹோல் என்னுமிடத்தில் உள்ள கடல் உயிரியல் ஆய்வுக்கூடம் ஆகும். பல ஆய்வுக் கலன்களைக் கொண்ட இந்நிறுவனம் பெரிய அள வில் பயிற்சியையும் ஆய்வுகளையும் நடத்தி வரு கிறது. லா ஜோலாவில் கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் நடத்தும் ஸ்கிரிப்ஸ் கடலியல் ஆய்வுக்கூடம் குறிப்பிடத்தக்கது. கனடா, தென் அமெரிக்க நாடு கள் பலவற்றில் கடலியல் ஆய்வுக்கூடங்களும், கடல் உயிரியல் நிலையங்களும் இயங்கி வருகின்றன. கடலி லிருந்து பெருமளவு உயிர்ப் பொருள்களை எடுத்துப் பயன்படுத்தும் வகையில் ஜப்பானில் பல இடங்களில் கடல் உயிரியல் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்தியாவில் மீன்வளத்துறையினரால் முதன்முத லாகத் தமிழ்நாட்டில் பாம்பன் நகரை அடுத்துள்ள குருசேடைத் தீவில் கடல் உயிரியல் நிலையம் தொடங் கப்பட்டது. அன்னிய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுத்லை அடைந்த பிறகு மத்திய கடல்மீன் ஆராய்ச்சிநிறுவனம் தொடங்கப்பட்டது.இந்தியாவில் பல இடங்களில் அதன் கிளைகள் ஏற்படுத்தப் பட்டு அவற்றின் மூலம் கடலில் மீன்வளம், பிற கடல் வாழ்உயிரினங்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் தலைமையகம் முதலில் மண்டபம் முகாமில் இருந்தது. இப்பொழுது அது கேரளத்தின் எர்ணாகுளத்திலுள்ளது. சென்னை பம்பாய், கல்கத்தா, கொச்சி, கேரளா, ஆந்திரா,