கடல் உயிரினப் பூங்கா 143
அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் கடல் உயிரி னங்களைப்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மேலும் பல் பல்கலைக்கழகங்களில் கடலியல், கடல் உயிரியல் ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் கடலியல், கடல் உயிரியல் ஆய்வுகள் முதன்முதலாக ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் மெரிக்க வல்லுநர் லாஃபாண்ட் துணையுடன் 1952-53இல் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் முதல் கடல் உயிரியல் நிலையம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பரங்கிப்பேட்டையில் தொடங் கப்பட்டது. அது மேலும் விரிவடைந்து நாட்டின் முக்கிய நிலையமாகவும் உலகில் ஒரு சிறந்த ஆய்வு நிலையமாகவும் கருதப்படுமளவுக்கு மதிப்படைந் துள்ளது. மத்திய அரசின் தேசிய கடலியல் நிறுவனம் கோவாவில் உள்ள பனாஜியில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய ஆய்வு நிறுவனமாகும். இந்நிறுவனம் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய பெரிய வல்லரசுகளைப் போன்று அன்டார்க்டிக்காவில் தட்சிணகங்கோத்ரி என்னும் ஆய்வுக்கூடத்தை அமைத்துப் பல ஆய்வுகளை நடத்தி பெருமைப்படுத்தியுள்ளது. கடல் உயிரினப் பூங்கா ந்தியாவைப் சு.பாலசுப்ரமண்யன் ஆழ்கடலின் நீர்ப்பரப்புக்குள் நுண்கிருமிகள் முதல் விலங்கினங்களிலேயே மிகப்பெரியதான திமிங்கலம் வரை எண்ணற்ற வகை உயிரினங்கள் வாழ்ந்து வரு கின்றன. கண்ணைக் கவரும் பல் வண்ண மீன் இனங்கள்.பல அடுக்குப் பற்களுடன் அச்சுறுத்தும் சுறா இனங்கள். வியத்தகு கடற்குதிரை இனங்கள், அரக்கன் எனப்படும் எட்டுக்கை காண்ட ஆக்டோபஸ் இனங்கள், அறிவுக் கூர்மையான டால் ஃபின்கள் போன்ற எண்ணற்ற வியப்பூட்டும் உயிரினங் கள் ஆழ்கடலில் உண்டு. குறிப்பிட்ட கடலோரப் பகுதிகளில் அவற்றின் இயற்கைச் சூழலில் உயிரினங் வாழ வழி செய்து து கொடுப்பதே கடல் கடல் களை உயிரினப் பூங்கா ஆகும். கடல் உயிரினப் பூங்காவின் நோக்கம் கடல் உயிரினப் புகலிடம். முறையற்ற மீன் பிடி முறையாலும் பிற காரணங்களாலும் எண்ணற்ற கடல் வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. குறிப்பாகக் கடல் ஆமைகள் முட்டையிடக் கடற்கரை மணலுக்கு வரும்போது அறியாமையால் அவை சிலரால் கொல்லப் படுகின்றன. மேலும், அந்த ஆமைகள் மண்ணில் போட்டு மூடி வைத்துள்ள முட்டைகளை எண்ணற்ற கடற்பறவைகள் கவர்ந்து விடுகின்றன. நாளடைவில் கடல் உயிரினப் பூங்கா 143 கடல் ஆமை னமே அழிந்துவிடும் என்னும் அஞ்சத் தக்க நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டுத் தன்மையும் அறிவுக் கூர்மையும் கொண்ட டால்ஃபின்கள் பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் வலைகளால் பிடிக்கப்பட்டு இறைச்சிக் காகக் கொல்லப்படுகின்றன. முன்பு இராமேஸ்வரம் பகுதிகளில், பாக் நீர்ச்சந்தியில் மிகுதியாகக் காணைப் பட்ட கடற்பசுக்கள் இன்று மிக அரிதாகக் காணப் படுகின்றன. அவை எளிதில் பிடிபடக் கூடிய கடல் வாழ் பாலூட்டிகளாகையால், அவற்றின் இறைச்சிக் காக அவை பெருமளவில் வேட்டையாடப்பட்டன. மேலும் வியத்தகு உருவத்தையும், அழகு வண்ணங் களையும் கொண்டுள்ள சிங்கிறால் (lobster) இனங் களின் இறைச்சி அதிகவருவாயை ஈட்டிக் கொடுப் பதால் (1 கிலோ இறைச்சி ரூ.120/-க்கு மேல்) அவை பெருமளவில் பிடிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. எதிர்காலத்தினரும் காணத்தக்க வகையில் ஆழ் கடலில் இத்தகைய அரிய உயிரினங்கள் வாழ்வதற் காகவே கடல் உயிரினப் பூங்கா போன்ற இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உள்ள கல்வி விளக்க மையம். வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதற் கொண்டு தொட்டுப்பார்த்து அறிந்துகொள்ளல் (tou- ch and study) என்ற முறையில் பயிற்றுவிக்கப்படு கின்றனர். எடுத்துக்காட்டாக. கடலில் நட்சத்திர மீன், இறால் மீன் முதலியவை பற்றிப் பள்ளி மாணவருக்குக் கற்றுத்தர வேண்டியிருந்தால், மீன்காட்சியகத்துக்கோ (acquarium) கடல் உயிரினப் பூங்காக்களுக்கோ அவர்களை அழைத்துச் சென்று நட்சத்திர மீன்களையும், இறால் மீன்களையும், கடல் ஆமைகளையும். பிறவற்றையும் நேரில் காட்டி, அவற்றின் உடல் அமைப்பையும், வாழ்க்கை முறை களையும் பற்றி விளக்கிக் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவில் தொடக்கப்பள்ளி மாணவர் மட்டுமல்லர் கல்லூரிகளில் பயிலும் மேற்பட்டப்படிப்பு மாணவர் கூட, கடல்வாழ் உயிரினங்கள்பற்றி நூல்களில் உள்ள பாடங்களில் படிக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றுள் ளனர். ஆனால், கடல் உயிரினப் பூங்காக்கள் அமைத்துப்பேணிக் காப்பதன் மூலம், வியத்தகு கடல் உயிரினங்கள் பலவற்றையும் பள்ளி மற்றும் கல் மாணவ மாணவியர் நேரில் அறிந்து கொள்ளக்கூடிய அரிய வாய்ப்புக் கிட்டும். அன்றியும், கடல் உயிரினங் கள் பற்றிய உயர் ஆய்வுகளையும் எளிதில் மேற் கொள்ள முடியும். லூ ரி சுற்றுலா மையம். முறையாக அமைக்கப்பட்டுச் சிறப்பாகப் பேணிக்காக்கப்படும் கடல் உயிரினப் பூங்கா மிகச்சிறந்த சுற்றுலா மையமாகத் திகழும். அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகள் கடல் உயிரினப் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான