144 கடல் எந்திரங்கள்
144 கடல் எந்திரங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. அமெரிக்க நாட்டின் கிழக்குக் சுடற்கரையில், ஃபுளாரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லண்டோ என்னும் கடலோர நகரில் அமைக்கப்பட்டுள்ள கடல் உலகம் பெருமளவு அந்நியச் செலாவணியை வெளிநாட்டுப் பயணிகள் மூலம் அந்நாட்டுக்கு ஈட்டித் தருகிறது. அந்தக் கடல் உயிரினப் பூங்காவில், நீந்தத் தெரியாதவர்களும் கடலுக்குள் செல்லத்தக்க வகையில் மிகப்பெரிய கண்ணாடிக் குழாய்ப் பாதையைக் கடலினூடேயே அமைத்துள்ளனர். அதன் ஊடே நடந்து செல்லும் போது, கடல் நீரில் நீந்திச் செல்லும் மிகப்பெரிய சுறாமீன்களையும், வியத்தகு கடல் உயிரினங்களையும் கண்ணாடி . மூலம் நேரில் பார்க்கலாம். ஜப்பான், இஸ்ரேல் போன்ற சிறு நாடுகளும் கடல் உயிரினப் பூங்கா அமைத்துப் பெரும் பயனீட்டும் சமயத்தில் மொத்தத்தில் 5,650 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதிகளையும் அழகுமிகு சதுப்புநிலக்காடுகளாகிய சுந்தரவனக்காடுகளையும், பிச்சாவரம் காடுகளையும் இராமேஸ்வரம் கடற்பகுயில் பவளப் பாறைகளையும் பற்பல வளமிக்க ஆற்றுக் கழிமுகப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்தியா இதுவரை கடல் உயிரினப் பூங்கா அமைப்பதில் நாட்டம் செலுத்தாதது பெருங்குறை ஆகும். சீரமைக்கும் சட்ட திட்டம். கடல்வாழ் உயிரியல் துறை வல்லுநர், சுற்றுப்புறச் சூழ்நிலையியல் வல்லுநர் கடலியல் ஆராய்ச்சியாளர் அடங்கிய ஆய்வுக்குழுலின் பரிந்துரைப்படி சிறப்பான கடலோரப்பகுதியைத் தேர்ந்தெடுத்து, கடல் உயிரினப் பூங்காவை அமைப்பதுடன் நில்லாமல், அதைச் செவ்வனே பேணவும், அதில் வாழும் பலவகையான உயிரினங்களைப் பாதுகாக்கவும் முறையான சட்ட திட்டங்களைக் கையாள வேண்டும். முதலில், கடல் உயிரினப் பூங்காவைச் சார்ந்த கடலோரப் பகுதியின் இயற்கைச்சூழலைப் பேணிக் காக்க வேண்டும். சுற்றுப் புறச்சூழ்நிலையைக் கெடுத்து, கடற்பூங்காவை அழகு படுத்தும் உயிரினங்களின் வாழ்க்கைக்குக் கேடுவிளை விக்கக் கூடியவற்றை (குறிப்பாகத் தொழிற்சாலை கள் வெளியிடும். நச்சுப் புகை, வேதிப்பொருள் கலந்த கழிவு நீர்) உடனே தடுக்க வேண்டும். அனு மதியின்றி முறையற்ற வகையில் எவரும் மீன்பிடிக்க வோ, பிற உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கவோ கடல் உயிரினப் பூங்காவில் அனுமதித்தலாகாது. கடல் உயிரினப் பூங்காவைப் பேணிக் காப்பதில் அப்பகுதி மீனவ மக்களின் ஒத்துழைப்பும் உதவியும் மிகவும் தேவைப்படுவதால் அவற்றை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சுடல்வாழ் உயிரினங்கள், சில பகுதிகளில்தான், குறிப்பாக, சதுப்புநில நீரிலும், கழிமுகப் பகுதி களிலும், முட்டையிட்டு, பாதுகாக்கும் தன்மையுடை யனவாதலால், அவற்றின் இனம் வளர அந்தக் குறிப் பிட்ட கடலோரப் பகுதியில் அனுமதியின்றி நுழைய காது. வோ, மீன் குஞ்சுகளைப் பிடிக்கவோ அனுமதிக்கலா மேலும், கடல் உயிரினப் பூங்கா சிறந்து விளங்க, கடல்வாழ் உயிரியல் துறை ஆய்வு வல்லுநர் சுளின் பணி இன்றியமையாததாகும். வெவ்வேறு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கமுறை, இனப்பெருக்கமுறை முதலிய வற்றை நன்கு அறிந்துள்ள இவ்வல்லுநர்களால் மட்டுமே, கடல் உயிரினப் பூங்காவின் உயிரினங்க ளைப் பேணிக் காக்க இயலும். வகை உயிரினப் பூங்கா அதன் சிறப்பியல்புகள், அங்கு கண்டுகளிக்கத்தக்க கடல்வாழ் உயிரினங்கள் ஆகிய வற்றை எளிய மக்களும் அறிந்து கொள்ளும் யிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்படியாகவும் விளம்பரம் செய்ய வேண்டும். மேற்கூறியவற்றைச் சீரிய முறையில் செய்யும்போது, கடல் உயிரினப் பூங்காவின் புகழ்பரவும்; வருவாயும் மிகும். ஆர்.நடராஜன் கடல் எந்திரங்கள் நீரில் செல்லும் அனைத்து எந்திரங்களுக்கும் கடல் எந்திரங்கள் என்னும் பொதுப் பெயர் உண்டு. அளவில் பெரியவையாகவோ. சிறியவையாகவோ இருக்கும் அனைத்து வகைக் கடல் எந்திரங்களும் நம்பகத்தன்மை, குறைந்த எடை, கட்டுறுதி, எரி பொருள் சிக்கனம், நீடித்த உழைப்பு, குறைந்த பராமரிப்பு, இயக்குவதற்கு எளிமை, பின்னோக்கிச் செல்லும் வசதி, சீராக் நீரில் செல்லும் திறன் ஆகிய முக்கிய வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இவ் வெந்திரங்களை நீராவி எந்திரங்கள், வளிமச்சுழலி (gas turbine), உட்கனற் பொறிகள் (internal combus- tion engines), அணு ஆற்றல் எந்திரங்கள் (nuclear engines) என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். யக்கப் நீராவி எந்திரங்கள். தொடக்க காலத்திலிருந்தே நீராவி எந்திரங்கள் கடல் எந்திரங்களை பயன்பட்டு வருகின்றன. டீசல் எந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பின்பும் நீராவி எந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன. நீராவி எந்திரங்களை முன்பி பின் இயக்க வகை (reciprocating type) சுழலி வகை (turbine type) என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முன்பின் இயக்கவகை எந்திரங்களில் உந்து தண்டும் (piston), இயங்கும் உருளைகள் (cylinders) நான்கும் உள்ளன. இவை நான்கிலும் உந்துதண்டு வீச்சு (piston stroke) ஒரே அளவாயிருப்பினும் அடுத்தடுத்த உருளைகளின் விட்டம் மிகுந்து கொண்டே போகும். அடுத்தடுத்த உருளையில் செல்லும்போது நீராவியின் அழுத்தம் படிப்படியாகக் குறைகிறது. அழுத்தம் குறைவதால் நீராவியின் கன அளவு கூடுகிறது. எனவே