150 கடல் குதிரை
150 கடல் குதிரை ஆகியவை கருமையாகவும், தலையின் பக்கப்பகுதி, கழுத்து, மார்பு, கீழ்ப்பகுதி ஆகியவை வெண்மை யாகவும் காணப்படும். குஞ்சமுடைய கடற்கிளிகளின் வயிற்றடிப்பகுதி கருமையாக இருக்கும். தலையின் பக்க வாட்டில் வெண்மைக்கோடு போன்ற இறகு களும் காணப்படும். அட்லாண்டிக் கடற்கிளிகள், அப்பகுதியின் வடக் கே (துருவத்தில்இருந்து) ஆர்க்டிக்கிலிருந்து தெற்கே இங்கிலாந்து - மெய்னிவரை காணப்படுகின்றன. இவை ஏறத்தாழ 30 செ.மீ. (12") நீளமுடையவை. சாம்பல் கருமையான முதுகு, வெண்மையான வயிறு, நிற இறக்கை, சிவந்த ஆரஞ்சு நிறக்கால்கள், நீலம், சாம்பல், மஞ்சள், சிவப்பு ஆகிய நிறம் கலந்த பல தகடுகளாலான அலகு இவற்றிற்கு அழகு தருகின்றன. கொம்பு உடைய கடற்கிளி பசிபிக் கடற் பகுதி யில் காணப்படும். மேலும் குஞ்சம் உடைய கடற்கிளி பசிபிக் கடலின் தென் பகுதியில் காணப்படும். கருமை நிறமுடைய இவற்றின் முகம் வெண்மையாகவும், கால்கள் அலகு இவை சிவப்பாகவும் இறகுகள் வெளிர் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். கடற்கிளிகளின் தட்டையான, முக்கோணவடிவமுடைய, பல நிறத் தகடுகளாலான அலகை எழுதும் கருப்பொருளாகப் பயன்படுத்தலாம். இதன் முக அமைப்பு, அலகின் நிறம், சர்க்கஸ் கோமாளியை நினைவூட்டுவதாகக் கூறப்படுகிறது. அசைவுக்குத் தக்கவாறு அமைந்திருக்கும் எலும்பு வளையங்களும், செதில்களின் மாறுபாட்டால் விளைந்தனவேயாகும். சில வகை மீன்களில் இவ் வளையங்களிலிருந்து நீண்ட முள்களும், நீட்சிகளும் விரவியிருப்பதுண்டு. முதுகுத் துடுப்பு அ. சங்கரன் அடைகாக்கும் பை கடல் குதிரை கடல் நடுவே காணப்படும் விந்தை மிகு மீன் இனங் களில் குதிரையின் தோற்றத்தை ஒத்திருக்கும் கடல் குதிரையும் (sea horse) ஒரு வகை மீன் இனமேயாகும். உறிப்போகேம்பிடே என்னும் குடும்பத்தைச் சார்ந்த இம்மீள் குழல் மீன்களுக்கு (pipe fishes) நெருங்கிய தொடர்புடைய இனமாகும். பிற மீன்களினின்று வேறுபட்டுத் தட்டையாக நீண்டிருக்கும் இதன் உடலும் உடலுக்கு நேர்கோணத்தில் அமைந்திருக்கும் தலைப்பகுதியும், குறுகிய வளைந்த கழுத்தும், நீண்டு சுருண்டு எதையும் பற்றிக் கொள்ளும் அமைந்திருக்கும் வாலும் இம்மீன்களுக்குத் தனிச் சிறப்பு அளிக்கின்றன. வண்ணம் வெப்பக்கடல்களிலும், மித வெப்பக் கடல்களிலும் பல்வேறு இனங்களாகப் பரந்து காணப்படும் இக் கடல் குதிரை மீனின் உடல் எலும்பு வளையங்களால் போர்வை போல் போர்த்தப்பட்டுள்ளது. அசையாத மார்புப் பகுதியில் சிலுவை வடிவ எலும்புத் தகடு பின்னிப் பிணைக்கப்பட்ட கூடும், வால் பகுதியில் கடல் தாவரங்களின் இடையே ஊர்ந்து, அதை விலக்கி உட்புகுந்து செல்ல இவ்வமைப்புகள் உதவு வதால், இவை தம்மை உணவாக்கிக் கொள்வதற் காகத் தேடிவரும் கறுப்பு வால் மீன்களின் பார்வை யினின்று மறைந்து வாழ ஏதுவாகும். ஆஸ்திரேலியக் கடலில் வாழும் பில்லோப்டெரிக்ஸ் எனும் கடல் வேதாள மீன் (sea dragon) மிகவும் விந்தையான உடல் அமைப்பைப் பெற்றிருக்கிறது. இக்கடல் குதிரைமீன் தன் உடலினின்று பலவாக நீட்டிக் கொண்டிருக்கும் முள்கள், இலைகள் போன்ற நீட்சி களால், நீரில் மிதந்து வரும் ஒரு துண்டு கடற்பாசி போல் தோன்றுமாறு செய்து தன் எதிரிகளை எளிதில் ஏமாற்றித் தப்பித்துக் கொள்கிறது. மந்தமான நீந்தும் திறன் குறைந்த இக்கடல் குதிரை மீன்கள்.