151 கடல் குளிரூட்டல்
பெரும்பாலும் மறைவிடத்தில் தம் வாலைக் கொண்டு கிளைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாழ்கின்றன. நீந்த முனையும் போது, வாலை மெல்ல விலக்கி முதுகுத் துடுப்பு (dorsal fin) தோள் துடுப்புகளின் pectoral fins) உதவியால் ஒரு ) தோணி நீரை அகழ்ந்து செல்வதுபோல் மேல்நோக்கி நீந்தத் தொடங்குகின்றன. மற்ற மீன்கள் கிடைமட்டமாக நீந்தும்; இவை செங்குத்தாக நீந்தும். கடல் குதிரைக்கு வால்துடுப்பும், இடுப்புத் துடுப்பும் இல்லை. பெரும்பாலும் உணவைத் தேடி இம்மீன்கள் அலைவதில்லை. தம்மருகே அல்லது பக்கவாட்டில் மிதந்து வரும் மிதவை உயிரிகளைக் (plank tons) கவனமாக உற்று நோக்கியபடிக் காத்திருக்கும் இம் மீன்கள் அவை நெருங்கியவுடன் தம் குழல் போன்ற வாயால் உறிஞ்சி உட்கொண்டு விடுகின்றன. இதற்குத் தக்கவாறு நன்கு வடிலமைக்கப்பட்ட கண் களைப் பெற்றுள்ள இவை, ஒரே சமயத்தில் ஒரு கண்ணால் முன்னோக்கியும் மறு கண்ணால் பின் னோக்கியும் பார்க்கும் வண்ணம் நாற்புறமும் சுழலும் கொண்டிருப்பதும் தனிச்சிறப் கண் அமைப்பைக் பாகும். வை இம்மீன்களின் செவுள் மிகவும் வளர்ச்சியற்று இருப்பதுடன், செவுள் இழைகளும், அளவில் குறுகி ஒரு பூவின் தோற்றத்தை ஒத்திருக்கும். செவுள் துளைகள் சிறியனவாகவும் வட்ட வடிவமாகவும், செவுள் மூடியின் பின்னால் அமைந்திருக்கும். எல்லாவற்றையும்விட விந்தையான நிகழ்ச்சி இதன் இனப்பெருக்கக் காலத்தில் நிகழ்கிறது. இப்பருவத்தில் பெண் மீனைக் காட்டிலும் ஆண் மீனுக்குத் தான் சிறப்பும், உழைப்பும் மிகுதியாகும். ஆண் மீனும் பெண் மீனும் இணையும் போது, ஒன்றின் வாலை, மற்றொன்று பற்றிக் கொண்டு எதிரெதிர் நிற்கும். பெண் மீனின், முட்டையின் வரவை எதிர்பார்த்துத் தன் உடலடியில் உள்ள அடைகாக்கும் பையை (brood pouch) உருவாக்கிக் கொண்டு காத்திருக்கும் ஆண் மீன், ஒரு தாயின் பணியை மேற்கொள்கிறது. பெண் மீனின் இனப்பெருக்கக் குழாய் நீண்டு, பையினுள் முட்டைகளைச் செலுத்தும் வரை ஆண் மீன் அசையாமல் நின்று பின் விலகுகிறது. இரத்தக் பெற்றுத் குழாய்கள் விரவி ஊட்டம் தடித்துக் காணப்படும். இந்த அடைகாக்கும் பையி லுள்ள ஊட்டச் சத்தை அளித்து முட்டையினின்று வளர் சுருக்களை (developing embryos) ஏறத்தாழ 6-7 வார கால அளவிற்கு இந்த ஆண் மீன்கள் நன்கு பேணிக் காக்கின்ற றன. மீன்கள் நன்கு வளர்ந்து வெளிவரும் தக்க தருணத்தில் ஆண் மீன் தன் வாலால் ஒரு கிளையை இறுகப்பற்றிக் கொண்டு முன்னும் பின்னும், குனிந்தும் நிமிர்ந்தும், வளைந்தும், பையின் சுவரைச் சுருக்கிப் கடல் குளிரூட்டல் 151 பாலூட்டிகளைப் போலவே பேறுகால வேதனையை அடைகிறது. மிகுந்த துன்பத்திற்குப் பின்னர் ஒரே சமயத்தில் ஏறத்தாழ 4-5 இளம் உயிரிகளை நீரினுள் தள்ளிய பின்னர் மீண்டும் குவிந்து வளைந்து நிமிர்ந்து இளம் உயிரிகளாக ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட இளங்குஞ்சுகளை ஈனுகின்றது. புதிதாகப் பிறந்த கடல் குதிரை மீன்கள் மேல் நோக்கி நீந்திச் சென்று கடல் மட்டத்தை அடைந்து, காற்றை மிகுதியாக விழுங்கி, காற்றுப்பையை நன்கு நிரப்பிக்கொள் கின்றன. பின்னர் காற்றுப்பை நன்கு வளர்ந்தவுடன் தம் நிலையை நீருக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்கின்றன. குழல் மீன்களிலும் இவ்வகையான பெற்றோர் ஆதரவு உண்டெனினும், தம் குஞ்சுகளுக்கு இடர் நேரும்போது தம் அடைகாக்கும் பையில் அவற்றிற்குப் புகலிடம் அளிக்கின்றன. ஆனால் அடைகாக்கும் பையைக் கிழித்துக்கொண்டு வெளிவாராமல், அதன் வாய்த் திறப்பின் வழியே வெளிவரும். தன் குஞ்சு களுக்கு இடையூறு நேரும்போது சுடற்குதிரை மீன் தக்க பாதுகாப்போ அளிக்க முன் புகலிடமோ வருவதில்லை. எனவே பாதுகாப்பற்றுக் கட டவில் திரியும் இம்மீன்கள் கடற்றழைகளின் நடுவே புகுந்து, அவற்றின் நிறமும், தோற்றமும், அமைப் பும் பெற்று, அவற்றிடையே தங்கி எதிரிகளிட மிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. பெரும்பாலும் மறைந்து வாழ்ந்தாலும் அவ்வப்போது வெளிவந்து மேலும் கீழுமாக அழகாக நகர்ந்து செல்வதும் உண்டு. ஓய்வுக்காகக் கிளைகளைப் பற்றிக் கொண்டு நிற்கும் தோற்றமும் பாங்கும் மிகவும் விந்தையாக இருக்கும். ஏறத்தாழ 30 செ.மீ. உயரம் வரை வளரும் இக்கடல் குதிரை மீனில் பல இனங்கள் இருந்தா லும் சிறிய மூக்குக் கடல் குதிரை மீன் (shortnosed sea horse) உயிர் மீன் காட்சியகங்களில் (aquaria) மிகச் சிறப்பாக வளர்க்கப்படுகிறது. பரிமளா சம்பந்தம் நூலோதி. ராணி கந்தசாமி, தென்னிந்திய மீன், கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. 1973: இரா. சந்திரன், கஸ்தூரி சந்திரன், மீன்கள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். சென்னை, 1974. கடல் குளிரூட்டல் கடற்பயணத்தின்போது து பொருள்கள் அழுகிக் கெட்டுப் போகாமலும், இயற்கைத் தன்மை மலும், பாதுகாத்து எடுத்துச் செல்வதற்குக் கடல் மாறா