பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கடல்‌ குளிரூட்டல்‌

152 கடல் குளிருட்டல் சுவை குளிரூட்டல் (marine refrigeration) தேவையாகும். மேலும் கப்பலில் பயணம் செய்யக்கூடிய மாலுமி களுக்கும், கப்பற் பயணிகளுக்கும் தேவையான உணவு வகைகளைக் கெட்டுப் போகாமல், குன்றாமல் பாதுகாக்கவும் இது மிகத் தேவையானது. ஒருசில நீர்மச் சரக்குப் பொருள்கள். சாதாரண சுற்றுப்புறத் தட்பவெப்ப நிலைக்கே ஆவியாகும் தன்மையுடையவை. அவற்றை நீர்ம நிலையிலேயே கடற்பயணத்தில் பாதுகாக்கக் கடல் குளிரூட்டல் உதவுகிறது. மேலும் இது தட்ப வெப்ப நிலையில் கடற் பயணிகளும், கப்பல் மாலுமிகளும் தங்கி இருக்கும் அறைகளில் பயன்படுகிறது. சமயங்களில் கடல் குளிரூட்டல் கருவியில் சாதாரணமாக F 11, F 12, F 22 குளிரூட்டியாகப் (refrigerant) கப்பலில் பயன்படுத்தப்படும். சில எடுத்துச் செல்லப்படும் பொருள்களே குளிரூட்டி யாகப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டு அம்மோ னியா, பெட்ரோலியப் பொருள்கள், புரோப்பேன், பியூட்டேன். விரைவில் அழுகிக் கெட்டுப்போகும் பொருள்கள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் எந்தத் தட்ப வெப்ப நிலையில் இருக்க வேண்டுமோ அதே நிலை யில் அவை கடல் குளிரூட்டல் மூலமாகப் பாதுகாக் காப்படுகின்றன. இந்த அறைகள் முழுதும் நன்கு வெப்பக் காப்பிடப்பட்டு (insulated) இருக்க வேண்டும். இல்லையெனில் வெளிப்புறம் நிலவக்கூடிய கடலின் தட்பவெப்பம் அறைக்குள் புகுந்து அறை யின் தட்பவெப்ப நிலையை மாற்றுவதோடு பொருள் களையும் அழுகச் செய்துவிடும். கடல் பாதுகாப்பு அறைகளில் தேவையான தட்ப வெப்ப நிலையை ஏற்படுத்த நேரிடையாக ஆவியா கக்கூடிய முறையே பரவலாக அனைத்துக் குளிரூட்டல்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறையில் நீர்மக் குளிரூட்டி, குளிர் சுருளுக்குள் (cooling coil) செலுத்தப்படுகிறது. சுருள். சரக்குகள் வைக்கப்பட்டுள்ள குளிரூட்டச் அறைகளில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த குளிர் குளிர் சுருளுக்குள் உள்ள நீர்மக் குளிரூட்டி அந்த அறையில் நிலவக் கூடிய வெப்பத்தை எடுத்துக் கொண்டு அந்தச் சுருளுக்குள் ஆவியாகின்றது. இவ்விதம் ஆவியான குளிரூட்டி, காற்றமுக்கியை (aircompressor) அடை கிறது. அங்கு ஆவிநிலையில் உள்ள குளிரூட்டி மிகு அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகிறது. உடன் இந்த மிகு அழுத்தம் கொண்ட ஆவிநிலையில் குளிரூட்டி குளிர் நீர்மமாக்கியை (condenser) அடைந்து, அங்கு நீர்ம நிலை அடைகிறது. உள்ள நீர்ம நிலையில் மிகுந்த அழுத்தம் கொண்ட குளிரூட்டி ஓர் அழுத்தக் கலனில் (pressure vessel ) தொகுக்கப்படுகிறது. இங்கிருந்து இந்த மிகு அழுத்த நீர்மக்குளிரூட்டி அடைப்பிதழில் (throttle valve) மிகு அழுத்தத்திலிருந்து குறை அழுத்தத்திற்கு நெருக்கம் (throttle) செய்யப்படுகிறது. இக்குறை அழுத்தக் குளிரூட்டி, அந்தக் குளிர் சுருளை மீண்டும் அடைந்து எடுத்துக் அந்த அறையில் நிலவும் வெப்பத்தை கொண்டு, ஆவியாகிக் காற்றழுத்தியை அடைகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக அந்த அறையில் உள்ள வெப்பத்தை எடுத்துக் கொண்டு மீண்டும், மீண்டும் ஆவியாவதால், அந்த அறையில் தேவையான, ஏற்ற தட்ப வெப்பநிலை ஏற்படுத்தப்படுவதால் அங்குள்ள தன்மையும் மாறாமல் பொருள்களும் அவற்றின் பாதுகாக்கப்படுகின்றன. நீர்மச் சரக்குகள் பாதுகாக்கும் முறை. நீர்ம நிலை யில் உள்ள வளிமங்களை நீர்ம நிலையிலேயே கடற் பயணத்தின்போது கொண்டு செல்லக் கடல் குளிரூட் டல் மிகவும் தேவைப்படுகிறது. நீர்ம நிலையில் உள்ள வளிமங்கள் அம்மோனியா, குறைந்த அழுத்த நிலையில் உள்ள பெட்ரோலிய வளிமங்கள், புரோப் பேன், பியூட்டேன் ஆகியவை சாதாரண தட்பவெப்ப நிலைக்கே ஆவியாகும் தன்மையுடையவை. ஆகவே, இந்த நீர்மநிலையில் உள்ள வளிமங்கள் நிரப்பப்பட்ட கலன்களை மிகக்குறைந்த வெப்பநிலையிலேயே கடற் பயணத்தின்போது பாதுகாக்க வேண்டும். எந்த வளிமமும் அதன் நீர்ம நிலையில் இருந்து, ஆவி நிலைக்கு மாறும்போது சிறிது உள்ளுறை வெப்பத்தை (latent heat) அதன் நீர்மத்தில் இருந்து கவர்ந்து கொள்ளும். ஆதலால் அந்த நீர்மத்தின் வெப்பநிலை சிறிது குறையும். இவ்வாறு தொடர்ச்சி யாக ஆவியாகும் போது து அந்த நீர்மத்தின் வெப்பநிலை மிகமிகக் குறைந்துவிடும். இந்த அடிப் படையே கடல் குளிரூட்டலில் நீர்ம நிலையில் உள்ள வளிமங்களை நீர்ம நிலையில் நிலைத்திருக்கச் செய் கிறது. உருவாகக்கூடிய கலன்களில் காப்பிடப்பட்ட முழுமையாகக் நிரப்பப்பட்டுள்ள நீர்ம வளிமங்களில் ஏற்படக்கூடிய வளிமங்களை அகற்றி, அந்த வளிமங்களை மிகு அழுத்தத்திற்கு அழுத்தி மீண்டும் குளிர் நீர்மமாக்கி அந்தக்கலத்திற்கே அனுப்ப வேண்டும். இவ்விதம் அந்தக் கலனில் வளிமங்கள் தொடர்ச்சியாக வெளியேறி நீர்மமாகி அந்தக் கலத் திற்கே மீண்டும் அனுப்பி வைக்கப்படும். தொடர்ச்சி யாக அந்த வளிமங்கள் அதன் கலனிலிருந்து வெளி யேறுவதால் அந்தக் கலனில் வளிமங்கள் மீண்டும் மீண்டும் உருவாக இயலும். ஆதலால் அந்த நீர்ம நிலை வளிமங்களின் வெப்பநிலையை, எந்த வெப்ப நிலையில் அலை நீர்மமாக நிலைத்திருக்குமோ அதே வெப்பநிலையில் கடற் பயணத்தின் போது பாது காக்கவும் முடியும். மேலும் இயற்கை வளிமங்களை நீர்ம நிலையில் கொண்டு செல்லும்போது, அந்த நீர்மத்தில் உருவாகக்கூடிய வளிமங்கள் சுடல் கொதி கலனை இயக்கவும் பயன்படுகின்றன. இவ்விதமாக