பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் கோளும்‌, மீள்வும்‌ 157

திற்கு மேல் உயர்த்தப்படுகிறது. இது நிலப்பகுதியில் காணப்படும் மலைகளைப்போல் உயரமாகக் காணப் படும். இத்தகைய அமைப்பு, கடல்மலை எனப்படும். சில சமயம் கடல்மலைகள் பவளப் பாறைகளால் உருவாகக்கூடும். இப்பவளப் பாறைகள் நிலப்பகுதி யுடன் இணையாமல் தனித்து இருக்கும். பவளப் பாறைகள் பவள உயிரிகளுடனும் பலவகையான மொவஸ்கஸ் (molluscus) மெல்லுடலிகள், பூஞ்சை போன்றவை சுண்ணாம்புப் பாறைகளுடனும் இணைந்த நிலையில் கடினத் தன்மையுடன் காணப் படும். இவ்வகைப் பவன உயிரிகள் கடல் மட்டத் தில் வாழும் தன்மையுடையவை. வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வை மூன்று விளிம்புப் பாறைகள். கடற்கரைப் பகுதியிலிருந்து விலகித் தனித்து உயர்ந்த மலைகளைப் போல் கடலுள் காணப்படும் இவை செங்குத்தான சரிவைக் காண்டுள்ளன. பெரும் விளிம்புப் பாறையின் ஓரங்களின் சரிவு, சாய்தளச் சரிவைக் கொண்டி ருக்கும். கடற்கரைக்கருகிலுள்ள பவளத்திட்டு (barrier reef). கடற்கரையிலிருந்து தனித்துக் கடலினுள் இருக்கும் இதன் மையப்பகுதி, புவியின் உள்மைய இழுப்பால், புவியீர்ப்பு ஆற்றலால் உள்ளிழுக்கப் பட்டுச் சிறிது சிறிதாக மூழ்கடிக்கப்படுகிறது. இதன் ஓரப்பகுதிக்கும் மையப்பகுதிக்கும் இடையே கடல் நீர் சூழும். ஓரப்பகுதிகள் சிறு சிறு தீவுகளாகத் தனித்து வட்ட வடிவில் காணப்படும். இச்சிறு தீவுக் கூட்டங்கள் கடல் மட்டத்தைவிடச் சற்றே உயரமான நிலையில் தோன்றும். பவளத் தீவு. கடற்கரைக்கருகிலுள்ள பவளத் திட்டின் மையப் பகுதி தொடர்ந்து புவியின் உள் மைய இருப்பால் உள்ளிழுக்கப்படுவதால், து கடல்கோளும்,மீளவும் 157 கடலுள் அமிழ்ந்து விடும். இதன் ஓரப்பகுதிகள் கடல் மட்டத்தில் தொடர்பு அற்று, விட்டுவிட்டுச் சிறுசிறு காணப்படும். து சக்கர வடிவில் தீவுகளாகக் இருக்கும். இப்பவளப் பாறைகளின் வளர்ச்சி, தேவையான தகவமைப்புகளைப் பொறுத்து அமையும். மேலும், பவள உயிர் அணிகள் 68-78°C வெப்ப நிலையில் வளரும். கடலின் 50 - 60மீ ஆழம் வரை கடல்நீர் மிக உப்பான சூழ்நிலையில் இவை நன்கு வளரும். கடல்கோளும், மீள்வும் பற்றிய மதிப்பீடுகளிலிருந்து, கடல்கோள் கடல் மட்டம் உயர்வதால் மூழ்கும் பகுதி, கடல் மீள்வு - கடல்மட்டம் தாழ்வதாலோ, புவியின் உள் ஓடு அல்லது உட்பகுதி மேல்நோக்கி உயர்வதாலோ நிகழலாம் என அறியலாம். சார்பற்ற கரைப்பகுதிகள் என்பவை கடற்கரைப் பகுதியில் இயல்புமீறி நடைபெறும் எரிமலை வாய் மற்றும் கழிமுகத்தால் ஏற்படும் தாக்கங்கள் ஆகும். இந்தியாவில் காணப்படும் நீண்ட கடற்கரைப் பகுதிகள், ஒரே தன்மை உடையனவாக உள்ளன. கரைகளின் பெரும்பாலான பகுதிகள் மண் வண்டல் மண் படிவுகளுடன் காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகள் தென்மேற்குப் பருவ கால மழையால் வேகமாக அரிக்கப்பட்டு, அந்த இடங்கள் லகூன்ஸ் மற்றும் சதுப்பு நிலங்கள் போல் தோற்றமளிக்கின்றன. கடற்புயல், சூறாவளி போன்றவற்றால் உ வாகும் உயர்ந்த அலைகளின் வேகத்தாலும் தாக்க முறாவண்ணம் கடற்கரைப் பகுதிகள் மிக உயரமாக அமைந்துள்ளன. த்தகைய அமைப்பு இந்தியாவில் பல டங்களில் காணப்படுகிறது. ஆரகான் கடற் கரைப் பகுதியில் காணப்படும் பீட், பழுப்பு நிலக்கரிக் கனிமங்களின் படிவுகள் கங்கா நதிக் கழிமுகத்தில் அ கடல் நீர் தீவுகள் கடல் மட்டம் சிறு தீவுக்கூட்டம் தீவு படம் 3. (அ மேற்புறத்தோற்றம் (ஆ) பக்கத்தோற்றம் (46)