பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கடல்‌ சட்டம்‌

160 கடல் சட்டம் மீனினங்கள் முற்றிலுமாக அழிந்துபோய் விடாமல் பாதுகாப்பது பற்றி அம்மாநாட்டில்தான் ஆய்வு செய்யப்பட்டது. மாநாட்டில் பெரும்பான்மை யான நாடுகள் 10 கி.மீ. வரை ஆட்சி மண்டலக் கடல் இருப்பது நலமென்றும், கரையோர நாடுகள் அதற்குமேல் 20 கி.மீ. மீன் பிடிக்கும் உரிமை கொண்டிருத்தல் வேண்டுமென்றும், தனித்த காரண மிருப்பின் அதற்கப்பாலும் மீன்பிடிக்க உரிமை வழங்கலாமென்றும், காலம் காலமாக ஒரு நாடு கொண்டிருந்த உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. எனினும் மாநாட்டில் ஆட்சிமண்டல எல்லை பற்றிச் சரியான முடிவு ஏற் படவில்லை. ஆட்சிமண்டலக் கடலில் மீன்பிடிப்பதற் கான எல்லையளவும் அறுதியிடப்படவில்லை. கடல் நீருக்குள் நீண்டிருக்கும் படுகையில் காணப் படும் வளங்களைக் கடற்கரை நாடு எடுத்துக்கொள்ள உரிமை உண்டு என ஜெனிவா கடல்படுகை ஒப்பந்தத் தின் 2(1) பிரிவு கூறுகிறது. படுகை என்பது மீட்டர் ஆழம் வரை சரிந்து செல்லும் பகுதி என்று ஜெனிவா மாநாடு முடிவு செய்தது. 200 அறிவியல் ஆராய்ச்சிக்காக வேற்று நாட்டவர் ஒரு கரையோர நாட்டின் ஆட்சி மண்டலக் கடல் பகுதியுள் வர விரும்பினால் அக்கரை நாட்டின் அனுமதி பெறவேண்டும் என்று ஜெனிவா மாநாட்டு ஆட்சிமண்டலக் கடல் ஒப்பந்தத்தின் 1( 1) பிரிவு கூறுகிறது. கரையோர நாட்டின் தனித்த உரிமை களை ஒப்பந்தத்தின் 6, 7 ஆம் பிரிவுகள் விவரிக் கின்றன. ஜெனிவா மாநாட்டில் முடிவான ஒப்பந்தங்களை அந்தந்த நாடுகள் ஏற்புறுதி (ratification) செய்த பின் ஒப்பந்தங்கள் அனைத்துலக சு ஒப்பந்தங்கள் ஆயின. அடுத்து 1960 இல் அதே ஜெனிவாவில் இரண்டாம் கடல் சட்ட மாநாடு நடைபெற்றது. அதிலும் ஆட்சிமண்டலக் கடல், அடுத்து ஒட்டிய மண்டலம் ஆகியவற்றின் எல்லையளவு செய்யப்படவில்லை. முடிவு 1970 இல் ஆட்சிமண்டலக் கடலின் எல்லை யளவை 21 நாடுகள் 5.கி.மீ என்றும், 67 நாடுகள் 20 கி.மீ. என்றும், 14 நாடுகள் 333 கி.மீ. என்றும் வைத்துக் கொண்டிருந்தன. 27 நாடுகள் 20 கி.மீ.க்கு மேலாகவும், 11 நாடுகள் 5-12 கி.மீக்கு இடைப் பட்ட அளவிலும் எல்லையைக் கொண்டிருந்தன. அடுத்து ஒட்டிய மண்டலம் 20 கி.மீ. வரை உள்ளது என்று ஐக்கிய அமெரிக்காவும் வேறுசில நாடுகளும் கூறின. அந்த மண்டலத்தில் மீன் பிடிக்கும் உரிமை கரையோர நாட்டைச் சேர்ந்தது என்று கூறப் பட்டது. ஆட்சிமண்டலக் கடலுக்கு அப்பாலுள்ள வளங் கள் யாவும் உலகப் பொது என்றும் அந்த வளங் களை எடுப்பதற்கு உரிமங்கள் வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருவாயை வளர்ச்சி குன்றிய நாடுகளுக் குக் கொடுத்து உதவ வேண்டுமென்றும் ஐ.நா.அவை கூறிய கருத்து நீண்ட காலம் விவாதத்தில் இருந்தது. இறுதியாக 1973 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் மூன் றாம் கடல் சட்ட மாநாடு கூட்டப்பட்டது. அதில் 150 நாடுகள் பங்குபெற்றன. முந்தைய மாநாடுகளில் வளர்ச்சி மிக்க நாடுகளின் கை ஓங்கியிருந்தது. புதி தாக உரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை இப் போது மிகுதியாகஇருந்ததால் அந்நாடுகளின் பொரு ளியல் முன்னேற்றம் முக்கியமாகக் கருதப்பட்டது. ஆதலால் முந்தைய மாநாடுகளின் முடிவுகள் பெரும் மாற்றமடைந்தன. மூன்றாம் மாநாட்டில் ஆட்சிமண்டலக் கடலின் எல்லை 20 கி.மீ. என்று முடிவாயிற்று. ஆட்சி மண் டலக் கடவை அடுத்து 333 கி.மீ. வரை கரையோர நாட்டிற்குத் தனித்த உரிமை இருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த மண்டலத்துக் குத் தனித்த பொருளியல் மண்டலம் (exclusive eco- nomic zone) என்று பெயரிடப்பட்டது. அப்பொரு ரு ளியல் மண்டலத்தில் கரையோர நாடு முழு உரிமை யுடன் மீன் பிடிப்பது மட்டுமன்றி அங்கு கிடைக்கும் அனைத்து வளங்களையும் நுகரும் உரிமையும் கொண்டிருக்குமென்று கூறப்பட்டது. அந்த மண்ட லத்தில் மாசடைவு நிகழாமல் பாதுகாக்கும் பொறுப்பு கரையோர நாட்டைச் சேர்ந்தது. அறிவி யல் ஆராய்ச்சிக்காக வெளிநாட்டுக் கப்பல்கள் ஆட்சிமண்டலக் கடலுக்கோ பொருளியல் மண்ட லத்துக்கோ வர விரும்பினால் கரையோர நாட்டின் சைவு பெறுதல் வேண்டும். மூன்றாம் மாநாட்டில் எடுக்கப்பட்ட மற்றொரு முடிவு அனைத்துலக நீர்ச் சந்திகளின் வழியாகப் பிறநாட்டுக் கப்பல்கள் போய் வருவதை நீர்ச்சந்தியின் கரையோர நாடுகள் தடுக்கக் கூடாது என்பதாகும். கடல் தொடர்புடைய சிக்கல் கள் எழுந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கான வழி முறைகளையும் மூன்றாம் மாநாடு வகுத்தது. . ஆழ்கடலின் தரையில் கிடக்கும் உலோகக் கட்டிகளை எடுத்துப் பயன் பெறுவதில் உலக நாடு கள் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் பற்றி மா நாடு முடிவு எதுவும் செய்யவில்லை. ஆழ்கடல் தரை வளங்களான செம்பு, கோபால்ட், நிக்கல், மாங்க னீஸ் ஆகியவற்றை எடுப்பது தொடர்பான கட்டுப் பாட்டையும் ஆணையையும் ஓர் அதிகாரக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், வளங்களை எடுப்போர் செலுத்தவேண்டிய தொகையை அனைத்துலக நிதி யொன்றில் சேர்க்க வேண்டு மென்றும், அந்த நிதியை வளரும் நாடுகளுக்குக் கொடுத்து உதவ வேண்டு மென்றும் வளர்ச்சிபெற்ற நாடுகள் கூறுகின்றன. ஆனால் ஆழ்கடல் வளங்களைக் குறித்து ஓர் ஒரு மித்த கருத்து இதுவரை உருவாகவில்லை. கு. இராஜாராம்