பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்‌ சாமந்திகள்‌ 161

கடல் சாமந்திகள் இவை வண்ணப்பூக்கள் போல அமைந்துள்ள குழி யுடல் உயிரிகளாகும். இவை பெரும்பாலும் பவளத் திட்டுகளிலேயே மிகுந்து காணப்படுவதால் இவற்றின் மூலம் விலையுயர்ந்த பவளங்கள் உற்பத்தியாகும் திட்டுகளைக் கண்டுபிடிக்க முடியும். கடல் சாமந்தி களில் (sea anemones) ஆயிரக்கணக்கான இனங்கள் இருப்பினும், மெட்ரிடியம் (metridium) என்னும் இனம், உயிரியல் அடிப்படையில் முக்கியமானதாகும். கடற்கரையோரங்களிலிருந்து 10,000 மீட்டருக்கும் மேல் ஆழமுள்ள உலகக் கடல் பகுதிகள் அனைத்தி லும் சாமந்திகள் காணப்படினும், மெட்ரிடியம் பசிபிக் பெருங்கடலிலிருந்து வட அட்லாண்டிக் கடற்கரை வரையுள்ள பகுதிகளில், குறிப்பாக 200 மீட்டர் வரை ஆழமுள்ள பகுதிகளிலேயே காணப்படும். பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தைக் கொண்டு தனித்து வாழ்கின்ற மெட்ரிடியம், உருளை வடிவ மான மேலோடில்லாத (exoskeleton) உடலைப் பெற்றுள்ளது. பெரும்பாலும் பாறை. கடற்பாசி போன்றவற்றில் உறுதியாக ஒட்டி வாழ்கின்ற இவ் வினம் இருளில் விரிந்தும் பகலில் சுருங்கியும் காட்சி யளிக்கும். பாதத்தட்டு (pedal disc), வாய்த்தட்டு (oral disc) இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட தூண் (column) ஆகியவை மெட்ரிடியத்தின் முக்கிய பகுதிக ளாகும். தூணின் முன்பகுதி தலைப்பு எனவும். பின் பகுதி தோள்பட்டை (scapus) எனவும் வழங்கப்படும். தூணின் இவ்விரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதி கழுத்துப்பட்டை (collar) எனப்படும் மடிப்புப் பகுதியாகும். கழுத்துப் பட்டையில் ஒரு பள்ளமும், தோள்பட்டையில் நுண்ணிய துளைகளும் காணப்படுகின்றன. வாய்த்தட்டின் நடுவே, நீண்ட ஒரு வாய்த் துளையும், அதைச் சுற்றிப் பல வட்ட வரிசைகளில், ஆறாறு உணர்ச்சியிழைகள் (tentacles) கொண்ட பல தொகுதிகளும் ம் காணப்படுகின்றன. உணர்ச்சியிழைகள் உள்ளீடற்று இருப்பினும் மிகுதி யான கொட்டுசெல்களைக் (nematocysts) கொண் டுள்ளன. யடுக்குத் பல உள்ளமைப்பு. மெட்ரிடியத்தின் உடல்சுவர் வெளி (epidermis), தசையாலும் உள்சீரண அடுக்குத்தசையாலும் (endodermis) இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட தாங்கு சவ்வுப்படலத்தாலும் (mesogba) ஆக்கப்பட்டுள்ளது. உள்ளுறுப்புகள், மையத்தி லிருந்து அனைத்துத் திசைகளிலும் சமமாகப் பரவிச் செல்வதால் இது உடலமைப்பில் ஆரச் சமச் சீரமைப்பைக் (radial symmetry) கொண்டுள் ளது. வாய், ஸ்டோமோடியம் (stomaedium) என்னும் குழாய் வழியாகச் செரிமானக் குழியை அடைகிறது. ஸ்டோமோடியத்தின் உட்பக்கத்தில் பக்கத்திற்கொன்றாக, சைப்னோகிளிஃப்புகள் (Sip- அ.க. 7-11 கடல் சாமந்திகள் 161 hono glyphs) என்னும் நீள் பள்ளக் கோடுகள் உள்ளன. இவற்றில் உள்ள குற்றிழைகளின் (cilia) தொடர் துடிப்பால், உயிர்வளி உள்ள உள்ள சுற்றுப்புறக் கடல்நீர் செரிமானக் குழிக்கு எடுத்துச் செல்லப்படு வதால் உள்ளுறுப்புகள் பயனடைகின்றன. ணையாக செரிமானக்குழி னை அமைந் துள்ள உறுப்பிடைத்தடுக்குகளால் (mesenteries) ஆரை அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தடுக்குகள் உடலின் உட்சுவரிலிருந்து ஸ்டோ மோடியம் வரை நீண்டு முழுமையான முதல் நிலைத் தடுக்குகளாகவோ ஸ்டோமோடியத்தைத் தொடாத இரண்டாம் குறை நிலை அல்லது மூன்றாம் குறை நிலைத் தடுக்குகளாகவோ இருக்கலாம். பின்னவை. மெட்ரிடியத்தில் 6 இணை முதல் நிலைத்தடுக்கு களுக்கு இடையிடையே மாறி மாறி அமைந்துள்ளன. ஒவ்வோர் உறுப்பிடைத்தடுக்கிலும் ஓரிரு மூச்சுத் துளைகள் (ostia) இருப்பதால், செரிமானக் குழியுள் நுழையும் கடல் நீர் பல ஆரை அறைகளுக்கும் சுற்றிச் செல்ல ஏதுவாகிறது. ஒவ்வொரு தடுக்கும் அகாண்டியா (acontia) என்னும் கீழ் இழையோடு முடிகிற (mesenterial filament) தடுக்கிழையைக் கொண்டுள்ளது. அகாண்டியா. வாய் வழியாகவோ, உடல் மேலுள்ள துளைகள் வழியாகவோ அவ்வப் போது வெளியே நீண்டு எதிரிகளைத் தாக்கப்பயன் படுகிறது. உணவு உட்கொள்ளல். ஊனுண்ணிகளான மெட் ரிடியம். புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள் போன்றவற்றை உணர் ழைகளால் பற்றி, வளைத் துக்கொட்டணுக்களின் நச்சால் அவற்றை அசைவுறச் செய்கின்றன. பின்னர் இவை, வாய், ஸ்டோமொ டியம் மூலமாகச் செரிமானக் குழிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்குள்ள உறுப்பிடைத் தடுக்கு களால், உணவினங்கள், துண்டுகளாக்கப்பட்டு உறுப் பிடைத் தடுக்கிழைகளில் உற்பத்தியாகும் புரதச் சிதைவு நொதி நிரால் (proteolytic enzyme ) செரிக்கப் பட்டு, செரிமான அடுக்குத் தசை அணுக்களில் உறிஞ்சப்படுகின்றன. செரிக்காத உணவுத் துகள்கள் வாய் வழியாகவே வெளியேற்றப்படுகின்றன. மாவுப் பொருள்களை மெட்ரிடியம் செரிக்கச் செய்ய முடியாதென்பது குறிப்பிடத்தக்கது. புலனுறுப்புகள். மெட்ரிடியத்தில் புலனுறுப்புகள் இல்லாவிடிலும், ஒரு வலைப்பின்னல் நரம்பு மண்டலம் உடலெங்கும் பரவிக் காணப்படுகின்றது. மைய நரம்பு மண்டலம் (CSN) இல்லாததால் மறி வினை (reflex action) அவ்வளவாக இவ்வுயிரியில் ல்லை. மெட்ரிடியங்கள் இனப்பெருக்கம். ஆண் - பெண் தனித்தனியே காணப்படுகின்றன. இனப்பெருக்கச் செல்கள் (gonads) குறைநிலை உறுப்பிடைத் தடுக்கு