கடல்சார் கனிமங்கள 165
கடல்சார் கனிமங்கள் 165 10 டன் கால்சியம் கார்பனேட் எடுக்கலாம் என்றும் கணித்துள்ளனர். சல்ஃபர், நில உரத்திற்கும், பல வேதித்தொழிற் சாலைகளுக்கும் பயன்படக்கூடிய சல்ஃபர் கண்டத் திட்டுப் பகுதிகளில் கடல்தளத்திற்கு அடியில் காணப் படும் உப்புக்குன்றுகளோடு (salt domes) தொடர் புற்று மெக்சிகோ வளைகுடா மத்திய தரைக் கடல் பகுதிகளில் காணப்படுகிறது. 87 மி.டன் சல்ஃபர் தாது இருப்பு, சுடல் சார்ந்த பகுதிகளில் இருப்பதாக வரையறுத்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடாவி லுள்ள வட்டச் செங்குத்தான உப்பு நுழைவுப் பாறையுடன் (salt plug intrusion) தொடர்புற்ற நிலவளிமத்திலிருந்து ஆண்டுதோறும் இது உற்பத்தி செய்யப்படுகிறது. க பாஸ்ஃபோரைட், 1876 இல் ஆழ்கடலில் முதன் முதலாசுக் கண்டெடுக்கப்பட்ட பாஸ்ஃபோரைட், 1937 இல் சுலிபோர்னியா கடற்கரையிலும் எடுக்கப் பட்டது. பாஸ்ஃபரஸ் குவானோ பள்ளெச்சப் படிவு களின் மூலமாகத் தீவுகளில் கிடைத்து வந்தது. வேளாண் நிலப்பரப்பு இச்சுரங்கத் தொழிலால் பெரி தும் தாக்கம் அடையத் தீவே அழிந்துவிடும் நிலை ஏற்பட்டதால், அதை நிறுத்திவிட்டு வேறு பல குறை செறிவு கொண்ட தாதுப் பொருள்களிலிருந்து இப் பாஸ்ஃபரஸை எடுக்கும் தொழில் நுணுக்கம் முன் னேற்றம் அடைந்ததால் கடலினின்று பாஸ்ஃபரஸ் எடுக்கும் தேவை இன்னும் ஏற்படவில்லை. பாஸ்ஃபரஸ் கடற்பகுதியில் கனிம முடிச்சுக ளாகவும் (nodules), மணலாகவும், சேறாகவும், இறுகிய படிவப் பாறையாகவும் காணப்படுகின்றது. உலகில் எங்கெங்கு ஆழ்கடல் குளிர் நீர்க் கரையேற் றம் (upwelled water) காணப்படுகிறதோ அங்கெல் லாம் இக்கனிமச்செறிவு தோன்றுகின்றது. (படம் 2). ஆழம் குறைவான கடல் பகுதிகளில் எங்கெங்கு க ல்நீரோட்ட அரிப்பு மிகுதியாகக் காணப் படுகிறதோ (எ.கா: பிளாக் பீடபூமி, சாத்தம் திட்டு) அங்கெல்லாம் பாஸ்ஃபரஸ் செறிவு கிடைக்கிறது. A 4 A BP Δ A A CR A படம் 2, உலகில் பாஸ்ஃபோரைட் கனிமங்கள் காணப்படும் இடங்கள் கண்டத்திட்டுப் பகுதிகளில் பாஸ்போரைட் கிடைக்கும் இடங்கள் U-ஆழ்கடல் குளிர் நீரைக் கரையேற்றும் நீரோட்டம் கொண்ட பகுதிகள் CR - சேத்தம் திட்டு BP -பிளாக் பீடபூமி - கடலினுள் மூழ்கியுள்ள, பாஸ்ஃபோரைட்டைக் கொண்டுள்ள மலைப் பகுதிகள்