பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்சார்‌ கனிமங்கள 167

காணப்படுகின்றன. இலங்கை, இந்தோனேசியா, கலிஃபோர்னியா கடற்கண்டத் திட்டுப் பகுதிகளில் 75% பேரியம் சல்ஃபேட் செறிவு கொண்ட பேரைட் கணுத்திரள்கள் (concretions) கிடைக்கின்றன. அலாஸ்கா சுடற்கரையில் தோண்டி எடுக்கப்பட்ட பேரைட் சுரங்கம் தொடர்ந்து கடல் நோக்கித் தோண்டப்பட்டுத் தற்போது கடலில் 20 அடி ஆழம் அடைந்தும், தோண்டுவதை நிறுத்தாமல் ஆண்டிற்கு 0.33மி. மெ.டன் அளவு வீதம் எடுக்கின்றனர். ஃபிலிப்ஸைட் சியோலைட் சியோலைட் 7.5% பொட்டாசியம் ஆக்சைடு அடர்வு கொண்டு, பெரும்பாலும் என்னும் கனிமமாகவே காணப்படும் கனிமக்குழு அனைத்து வகைக் கடல் தள வண்டல் படிவப் பாறைகளிலும் காணப்படுகின்றது. இது கடல்தள எரிமலையாலான காரப்பாறைகளின் சிதை வால் உருவாவதாகும். பொட்டாசியம் எடுப்பதற்கு இதை எதிர்கால மூல இருப்பாகக் கொள்ளலாம். பழுப்பு-சிவப்புக் களிமண். ஆழ்கடலில் காணப்படும் இக்களிமண் செறிவுடைய அலுமினியம், இரும்பு, செம்பு, நிக்கல், கோபால்ட், டைட்டானியம் போன்ற உலோகங்களைக் கொண்டுள்ளது. நிலத்தில் தற்போது இவ்வுலோகங்களின் தாதுவாகப் பயன்படும் களிமத் கடல்சார் கனிமங்கள் 167 தாதுக்களின் செறிவை விட இதன் செறிவு மிகுதி யாகும். இதைத் தோண்டி எடுக்க நினைத்தால்.101 டன் பெறலாம். உலகக் கடற்பரப்பில் ஆண்டிற்கு 5X 10' டன் என்னும் அளவில் இது மீண்டும் படியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடர்பளுக் கனிமங்கள். விலைமதிப்புடைய, அரிய வணிக நோக்குடைய மிகுசுன அடர்த்தியோடு உரு வாகிய பாறைகளிலிருந்து இயற்பியல் வானிலைக் காரணிகளால் சிதைவுற்று, வேதிப் பண்புகளில் மாறு பாடு இல்லாமல் நிலப்பரப்பினின்று கடத்தப்பட்டு, ஆற்றுப்படுகையிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் மணலோடு கலந்து, படிவுற்றுப் பின்னர் அலையாலும். நீரோட்டத்தாலும், காற்றினாலும் அடர் பளுவுக் கேற்றவாறு பகுக்கப்பட்டு ஒரே இடத்தில் காணப்படும் கனிமங்களை அடர்பளுக் கனிமங்கள் (placers) எனலாம். இவற்றின் அடர்த்திக்கும், பளுவிற்கும் ஏற்றவாறு, கடத்திச் செல்லும் கட கடத்திகளின் (trans- porting agents) வேகத்தையும், முறையையும் பொறுத்து, இவை காணப்படும் தொலைவை அறுதி யிடமுடியும். இவை ஏறத்தாழ உலகின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள ஆற்றுக் சுழிமுகத்திலும், கடற் கரையோரப் பகுதிகளிலும், இன்று கண்டத்திட்டுப் 0 காண்ட உலகில் அடர்பளுக் கனிமங்கள் கிடைக்கும் இடங்கள், தற்பொழுது இக்கனிமங்களால் பலனடைந்து வரும் பகுதிகள் சிலிகான், இல்மனைட், மேக்னடைட், பளுக்குறைவான அடர்பளுக் கனிமங்கள் அதாவது அடர்பளு எண் 4.2 இலிருந்து 5.3க்குள் அடர்பளுக் கனிமங்கள் கிடைப்பதற்குரிய வாய்ப்புக்கான முயற்சிகள் எடுக்கப்படும் பகுதிகள் மானொசைட் போன்ற கனிமங்கள் படம் 3