பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்சார்‌ கனிமங்கள 169

கடல்சார் கனிமங்கள் 169 சிர்கோனியம். சிர்கான் (zircon) என்னும் கனி மத்திலிருந்து கிடைக்கும் இது பெரும்பாலும் இல் மனைட், ரூட்டைல், கார்னெட், மோனசைட் போன்ற கனிமங்களுடன் கலந்தே காணப்படுகிறது. உலகில் இதன் மூல இருப்பு 42,13 மி.மெ.ட. எனக் கண்டுள்ளனர். இந்தியாவின் கேரளக் கடற்கரையில் மட்டும் 1.2 மி.மெ.ட. கனிம இருப்புள்ளது. இல் மனைட், மோனசைட் கனிமங்களை எடுக்கும்போது, அவற்றினின்று துணைப்பொருளாக இதை எடுக்கின் றனர். தமிழ்நாடு, ஒரிசா கடற்கரைகளிலும் இக் கனிம மூலஇருப்புக் கிடைக்கிறது. அடர்பளுக்கனிம வடிவில் பிரித்தெடுக்கப்படும் சிர்கானில், பெரும் பகுதியை ஆஸ்திரேலியாவும், இலங்கையுமே கொடுக் கின்றன. கறுப்புக் கடல், பால்டிக் கடல். மொசாம் பிக், ஆஸ்திரேலியா ஆகிய கண்டத்திட்டுகளில் இக் கனிமச்செறிவு கொண்டுள்ள படிவப் பாறைகள் கிடைப்பதற்கு மிகுவாய்ப்புகள் உள்ளன எனக் கருது கின்றனர். குரோமியம். இது குரோமைட் என்னும் கனிமத் திலிருந்து கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா 10,000 மெ.ட. குரோமைட்டை ஆர்கான் கடற்கரையிலிருந்து எடுத்துப் பயன்படுத்தி யுள்ளது. ஆஸ்திரேலியக் கடற்கரையிலிருந்து குரோ மைட் துணைப் பொருளாக எடுக்கப்படுகிறது. கிரீன் லாந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற்கரை களில் இவை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ள தாக கருதப்படுகிறது. கண்டத்திட்டில் காணப்படும் திணிவுற்ற படிவப் பாறைகளிலும் ஏனைய மணற் பாங்கான பகுதிகளிலுமிருந்தும் உலகில் குரோமியம் 21 மி.மெ.ட. அளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இரும்பு. தென்கிழக்கு ஜப்பானில் 20-30 மீ. கடலாழப் பகுதியில் 3-5" செறிவு கொண்டுள்ள டைட்டனோ மேக்னட்டைட் 16 மி.மெ.ட. இருப்பு உள்ளது. அதிலிருந்து ஆண்டிற்கு 30,000 மெ.ட. மேக்னட்டைட் எடுக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் உள்ள லிங்காயன் வளைகுடாவில் 7மிட. இரும்பு இருப்புக் கண்டுள்ளனர். அமெரிக்கா தமிழ்நாடு, ஆந்திரா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், நியூசிலாந்து கடற்கரைகளில் முதலியவற்றின் கனிம மணல் அடர்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 கண்டத்திட்டுகளில் குறைந்தது மி மெ.ட. மேக்னட்டைட் கிடைக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஏனைய மேக்னட்டைட் தகரம். உலகின் கடல்களிலிருந்து கிடைக்கும் அடர்பளுக் கனிமங்களில் இதுவே மிகுதியாகக் கிடைப்பதாகும். இது ஸ்டேன்னஸ் ஆக்சைடால் (SnO,) அமையப்பெற்ற காசிட்டரைட் என்னும் கனிமத்திலிருந்து கிடைக்கிறது. தென்கிழக்கு ஆசியா வின் தாய்லாந்திலிருந்து மலேசியா வழியாக இந் கரை தோனேசியா வரையுள்ள 2900 கி.மீ. நீளக்கடற் மணல்களில் இவ்வடர்வு காணப்படுகிறது. எனவே இப்பகுதியைத் தகர மண்டலம் என்பர். உலகில் 1980-இல் 250,000 மெ.ட. தகரத்தை இக் கனிமத்திலிருந்து உற்பத்தி செய்துள்ளனர். இந்தோ னேசியாவில் அதன் தகரத்தீவுகளான பாங்கா பெலிட்டூங், சிங்கெப் பாங்கியாங் முதலிய டங்களே இக்கனிம உற்பத்திக்குக் காரணமாகும். இப்பகுதி, ரு கண்டத்திட்டுகள் ஒன்றோடொன்று மோதி அதன் விளைவாக ஒன்றின் பக்கவரை விளிம்பு மற்றொன்றின் மீது ஏறிவிடுவதாலமையும் நீண்ட ஆழ் பள்ளப்பகுதியிலிருப்பதே (trench} காரணம் கருதப்படுகிறது. இங்கிலாந்தில் கார்ன்வால் கரையிலிருந்தும் சிறிதளவு தசுரம் எடுக்கப்படுகிறது. எனக் டான்ட்டலம்-நியோபியம். தாய்லாந்தைச் சேர்ந்த புக்கட் தீவு. மலேசியா கடற்கரைகளிலிருந்தெடுக்கும் காசிட்டரைட்டைத் தகரமாகப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் சுழிவுக் குழம்பில் 17.5% டான்டல் ஆக்சைடும் (Ta,O;). 0.5% நியோபிய ஆக்சைடும் (Nb,O,) எடுக்கப்படு கின்றன. இந்த ஆக்சைடுகளிலிருந்து அருமண் கதிரி யக்கக் கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. மேலும் கயனைட், சில்லிமனைட், கார்னெட் உல்ஃபரமைட், கோமேதகம்,நீர்மலின், ஸ்பீன். குருந்தக்கல், பெரில், சின்னபார் போன்ற அடர் பளுக்கனிமங்கள் இத்தகைய கடற்கரை மணல்களில் செறிவற்றுப் பல இடங்களில் காணப்படுகின்றன. உலகில் சில்லிமனைட்-கயனைட் கனிமங்களைக் கடலிலிருந்து எடுக்கக்கூடிய மூல இருப்பு உள்ள தென்றும், தற்போது 300,000 மெ.ட உற்பத்தி செய்யப்படுகிறதென்றும் குறித்துள்ளனர். இந்தி யாவில் மட்டும் 3.4 மி. மெ.ட. மூல இருப்பு உள்ளது. இதிலிருந்து தமிழ்நாடு, கேரளக் கடற்கரைகளில் ஆண்டுக்கு 60,000 மெ.ட கிடைக்கிறது. இதே உலகில் 37.4 மி.மெ.ட. மூல போல் இருப்பாக உள்ள கார்னெட்டிலிருந்து, 26,000 மெ.ட.ஐப் பல பகுதிகளும் அதில் 0.9 மி.மெ.ட. மூல இருப்பைக் இந்தியாவும் உற்பத்தி செய்கின்றன. இதற்கப்பால், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற்கரைகளிலிருந்து எடுக்கப்படும் இல்மனைட், மோனசைட் போன்ற அடர்பளுக்கனிமங்களுடன் காணப்படும் கார்னட் துணைப் பொருளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இரத்தினக் கற்கள் வைரம். தென்மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஆரஞ்சு நதியின் கழிமுகத்தில் படிந்துள்ள திணிவற்ற, பிளைஸ்டோசீன் காலத்தைச் சேர்ந்த வண்டல் படிவுகளிலிருந்து வைரம் எடுக்கின்றனர். ஒரு பங்கு வைரம் எடுக்க 50 மில்லியன் பங்கு வண்டல் படிவு களை வெளிக்கொணர வேண்டும். இங்கு கிடைக்கும்