பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கடல்சார்‌ கனிமங்கள

170 கடல்சார் கனிமங்கள் விட்டனர். கிடைப்பன வைரங்கள் கிம்பர்லைட் பாறைகளில் போலவே உள்ளதால். அவையே இவற்றின் தோற்றத்திற்குக் காரணமாயிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ஆண்டிற்கு 6மி. டாலர் அளவிற்கு இங்கு வைரம் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் வண்டலை எடுக்கும் கப்பலின் கண்காணிப்புச் செலவு மிகுதியாவதால் 1972இல் இத்தொழிலை நிறுத்தி ஆனால் மீண்டும் 1980 இலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. அங்கோலா. காங்கோ, காபன், சியார்ரேலியோன, தென்அமெரிக்கா போன்ற வைரம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளுண்டு. இந்தியாவில் மஹாநதி, கோதாவரி ஆற்றுக் கழிமுகத்திலும் அவற்றின் கண்டத்திட்டுப் பகுதியிலும் வைரச் செறிவு கொண்டுள்ள பாறை களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் செய்யப் பட்டுள்ளன. கண்டத்திட்டுகளில் . முத்து. கடலிலிருந்து கிடைக்கும் இரத்தினங் களில் கடல்வாழ் முத்துச்சிப்பி உற்பத்தி செய்யும் கால்சியம் கார்பனேட்டால் ஆன ஒருவகை அர கோனைட் படிகக் கனிமமே முத்தாகும். முத்துச் சிப்பியின் உடலில் மணலோ, பூச்சிகளோ புகுந்து உறுத்தலை ஏற்படுத்தும்போது, அதைச் அதைச் சுற்றிக் கால்சியம் கார்பனேட்டை ஈர்த்துப் படியச் செய்வதே முத்தாக உருவெடுக்கிறது. இவை கோளம் போன்ற வடிவையும், நீல மின்மினுப்பையும் கொடுக்கும். தமிழகத்திலும், ஜப்பானிலும் நீர் மூழ்கு திறன் பெற்றவர்கள் மூலமாக எடுத்துவரப்படுகிறது. 10,000 சிப்பிகள் எடுத்தால் 12 முத்துகள் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முத்துச் சிப்பிகளைத் தற்காலத்தில் செயற்கை முறையில் வளர்த்து முத்து களைத் திரட்டும் முறை, குறிப்பாக ஜப்பானிலும், இந்தியாவிலும் நடைமுறையில் உள்ளது. ஜப்பான் 16,000 ஹெக்டேர் நீர்ப்பரப்பில் 6 மில்லியன் முத்துச்சிப்பிகளை வளர்த்து வருகிறது. பவளம். கால்சியம் கார்பனேட்டைக் கொண்டு கடற்கரையோரங்களில் வாழ்ந்து வரும் பவளப்பூச்சி களின் கூட்டமைப்பின் பகுதியே பவளமாகும். இப் பூச்சிகள் கூட்டமாக வாழ்ந்து பவளப்பாறைகளை உருவாக்குகின்றன. இப்பவளப் பாறைகள் சிதையும் போது இவற்றிலுள்ள கால்சியம் கார்பனேட்டுச் சேர்மங்கள் மணல் துகள்களாக ஒட்டிய பகுதியில் சிதறுகின்றன. இவை சிமெண்ட் தயாரிக்க உதவுகின் றன. இவற்றில் சில, விலை மதிப்புடைய பவளங்க ளாகக் காணப்படும். வை பல வண்ணங்களில் கிடைப்பினும், மத்தியதரைக் கடற்பகுதியில் கிடைக் கும் சிவப்புப் பவளமும், இந்தியப் பெருங்கடல் பகுதியி லுள்ள ஒளிர் கறுப்பு நிறப் பவளமும், ஜப்பானின் மக்காப்பூ தீவில் கிடைக்கும் இளஞ்சிவப்புப் பலள மும் குறிப்பிடத்தக்கவையாகும். இக்கற்கள் 20-1000 அடி ஆழமுள்ள அனைத்து நீர்ப்பகுதியிலும் கிடைக் கலாம். பவளப்பூச்சிக்கு ஒரு பவளத்தை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும் எனக் கருதுகின்றனர். ஹவாய் தீவிலிருந்து மட்டும் ஆண்டிற்கு 7.5 மில்லியன் டாலர் மதிப்புடைய பவளங்கள் கிடைக்கின்றன. இல்லாவிடினும் அம்பர், து ஒரு கனிமமாக ஓர் இரத்தினமாகக் கருதப்படுகிறது. இது கோர்னிஃ பரஸ் மரங்களிலிருந்து உற்பத்தியாகும் ஒருவகை மஞ்சள் நிறப் பிசினாகும். இது நிலத்தில் விழும் போது சிதைவுற்று வீணாகின்றது. ஆனால் நீரிலடித் துச் செல்லப்பட்டுக் கடலில் சேர்ந்த பின், சிதை வுறாமல் காணப்படுகிறது. இப்பிசின், சக்சினைட் என்னும் பொருளாலானதாகும். 3000 ஆண்டு களுக்கு முன்னால் புருஷ்யா நாட்டில் பல பணியா ளர்களைக் கொண்டு இதை எடுத்து வந்ததாகத் தெரிகிறது. இன்றும் பால்டிக் கடலில் கலக்கும் ஆற் றுக் கழிமுகங்களின் வண்டல் படுகைகளிலும், 7-11மீ. ஆழமுள்ள கடலோர நீர்ப்பகுதிகளிலும் மிகுதியாக எடுக்கப்படுகிறது. ஆழ்கடல் உலோகங்கள் மாங்கனீஸ் கனிம முடிச்சுகள். 1987ஆம் ஆண்டு சேலஞ்சர் ஆராய்ச்சிக் கப்பல் முதன்முதலாக ஆழ் கடலிலிருந்து இம்முடிச்சுகளைக் கண்டெடுத்தது. அது முதற்கொண்டு பல ஆராய்ச்சிக் குழுக்களின் முயற்சியால் உலகின் அனைத்துப் பெருங்கடல் பகுதி களிலும் இவற்றைக் கண்டெடுத்துள்ளனர். இக்கனிம முடிச்சுகள் மாங்கனீஸ், இரும்பு ஆக்சைடுகளாக மட்டுமன்றிச் செம்பு, கோபால்ட், மாலிப்டினம், நுத்தநாகம், தங்கம், பிளாட்டினம் போன்ற பல உலோகங்களாகக் குறைந்த அளவில் ஆனால் சிக்கன மாக எடுக்கக்கூடிய செறிவு அளவில் உள்ளன. இவை 3500-6000 மீ ஆழத்திற்குள்ளான ஆழ்கடல் பகுதியிலும், பெருங்கடல் மத்திய நீள்குன்றுப் பகுதி யிலும் கனிம முடிச்சுகளாகவோ, மெல்லிய படிவுப் பாறைகளாகவோ, தகடு போன்ற மெல்லிய கருவைச் சுற்றிப் போர்த்தப்பட்ட போர்த்தப்பட்ட படிவங்களா கவோ, செம்பழுப்பிலிருந்து கறுப்பு நிறம் வரை கிடைக்கக்கூடிய எல்லாவித இடைப்பட்ட நிறங்களி லும், கூழாங்கல் போன்று பல வடிவிலும் கடல் தளத்தின் மேற்பகுதியில் பரவலாகப் பரவிக் கிடக் கின்றன. இவை வரை அடர்வு எண் கொண்டு எளிதில் நொறுங்கும் மென்மையான அமைப்பைப் பெற்றவையாகும். . 2.1-3.1 ஒரு நிலத்திலிருந்து வரும் வண்டல்கள் கலக்காத இடங்களிலும், கரையினின்று தொலைவிலுள்ள ஆழ்வடிப் பள்ளப் பகுதிகளிலும், நல்ல நீரோட்டத் தையும், மிகுதியான ஆக்சிஜனையும், ஆழ்கடல் தளத்தில் மண்ணைத் துளைத்து வாழும் உயிரினங் களை மிகுதியாகக் கொண்ட பகுதிகளிலும், ஆழ் கடல் எரிமலைகளுக்கு அருகிலும், மாங்கனீஸ் ஆக் சைடு ஒட்டி வளர்வதற்கான நியூக்ளியஸ்கள் (பிலிப் ஸைட் கனிமம்,சுறாப்பல், பஸால்ட் பாறையின்