172 கடல்சார் கனிமங்கள
172 கடல்சார் கனிமங்கள் படம் 4. உலகப் பெருங்கடல்களில் மாங்கனீஸ் கனிம முடிச்சுகள் பரவிக் கிடக்கும் பகுதிகள் 3 மாங்கனீஸ் கனிம முடிச்சுகள் பரவலாகக் காணப்படும் பகுதி ஃ மாங்கனீஸ் கனிம முடிச்சுகள் அடர்த்தியாகக் காணப்படும் பகுதி 140 யிலும் எளிதாக சிக்கனமாகப் பயன்படுத்தக் கூடிய அளவிற்குப் பரவிக்கிடக்கிறது (படம் 4, 5). பெருங்கடல்களில் மூன்று ட்ரில்லியன் மெ. ட. கனிம முடிச்சுகளின் இருப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இவற்றை அதன் முக்கிய உலோகப் பகுதிகளாகப் பிரித்தால் பசிபிக் பெருங்கடலில் மட்டும் மாங்க னீஸும், கோபால்ட்டும், நிக்கலும், செம்பும் பெரு மளவில் கிடைக்கும் என்று கணித்துள்ளனர். இக் கனிம முடிச்சுகளைப் பெருங்கடல்களிலிருந்து எளிய முறையில் தோண்டி எடுக்க ஏறக்குறைய இடங்கள் உள்ளன என்று கணக்கிட்டுள்ளனர்.கி.பி. முடிச்சுகளைச் 2000க்கு முன்பு இக்கனிம மாக வாரி எடுத்து உலக வணிகப்பரிமாற்றத்தில் கொண்டு வர முடியும் என்றாலும் இவற்றில் அடங்கி யுள்ள உலோகங்களின் விலை மதிப்பு, தேவை, நிலப் பரப்பிலிருந்து அவ்வுலோகங்கள் கிடைக்கும் அளவு, வெளிக்கொணர ஆகும் செலவு முதலியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் விரைவில் உலக நாடுகளின் சட்ட ஒழுங்கு உடன்படிக்கை (United Nations committee on law of the sea) நிறைவேறிவிட்டால் இக்கனிம முடிச்சுகளைத் தோண்டி எடுக்கலாம் என்னும் நம்பிக்கை வளர்ந்து வருகிறது. சிக்கன கப்பல் 1981 ஆம் ஆண்டு இந்திய ஆய்வுக் கவேசனியைப் பயன்படுத்தி தேசியக் கடல் ஆய்வுக் கழகத்தின் குழு (National institute of occeanography) முதன் முதலாக இக்கனிம முடிச்சுகளை எடுத்தது. இந்தியா மத்திய இந்தியப் பெருங்கடலில் மூன்று ஆய்வுக் கப்பல்களைக் கொண்டு தொடர்ந்து நடத்திய ஆய்வின் பயனாக இக்கனிம முடிச்சுகளை வழித்து எடுப்பதற்கு ஏற்ற இடங்களைக் கண்டு பிடித்துள்ளது. இதனால் இந்தியா இத்துறையில் மூலதனமிட்ட முன்னோடி (pioneer investor) என்னும் தகுதியை, உலகில் ஏழாம் நாடாகப் பெற்றுள்ளது. அதன்பொருட்டு, உலக நாடுகளின் சட்ட உடன்படிக்கை நிறைவேறியவுடன் இந்தியா இச் சுரங்கத் தொழிலில் ஈடுபடவும் அதற்குரிய உரிமம் பெறவும் தகுதி பெற்றுள்ளது. கடல் உலோகச் செறிவுற்ற வண்டல் படிவுகள். இப்படிவு கள், கண்டத்தட்டுப் பெயர்ச்சியுற்று ஒன்றையொன்று பிரிந்து அப்பால் செல்லக்கூடிய பகுதிகளில் காணப் படும். பிளவுகளின் வழியிலுண்டான ஆழ்குழிகளி லிருந்து எதிர்பார்க்க முடியாத, முறைக்கு மாறான உப்பு நிறைந்த (25.7%) கொதிநீர் (60°C) தொடர்ந்து கடலினடியில் கொட்டிக் கொண்டுள்ளது