174 கடல்சார் கனிமங்கள
174 கடல்சார் கனிமங்கள் . 10 படம் 6. சிவப்புக் கடலில் மிகுதியான உப்பும், உலோ கமும் கொண்டுள்ள கொதிநீர் ஆழ் பள்ளங்களின் தொடர்பால் உருவான உலோகச் செறிவுற்ற வண்டல் படிவுகளின் இடத்தைக் காட்டும் படம் உப்பும் உலோகமும் நிறைந்த கொதிநீரைக் கொண்டுள்ள ஆழ்பள்ளம் ] வெப்ப நீரினின்று உருவான வண்டல் படிவுகள் கொண்ட ஆழ்பன்னங்கள் வெப்பநீரின் தன்மையால் ஈர்க்கப்பட்டு மாறுதலடைந்த வண்டல் படிவுகள் 1) வவ்டிவியா துளைப்புடிவு B) தெட்டீஸ் J) வாண்டோ ஆழ்பள்ளம் 4) வல்டிவியா ஆழ்பள்ளம் 5) டிஸ்கவரி ஆழ் பள்ளம் 6) எர்பா ஆழ்பள்ளம் 7) சூடான் துறைமுக ஆழ்பள்ளம் 8) முதல் கமிஷன் சமவெளி 9) சூயாகின் ஆழ்பள்ளம் 10) சாகரா ஆழ்பள்ளம் 11) ஆல்பட்ராஸ் ஆழ்பள்ளம் 12) செயின் ஆழ்பள்ளங் கள் 13) இரண்டாம் அட்லாண்டீஸ் ஆழ்பள்ளம் 14) தெராயஸ் ஆழ்பள்ளம் 15) வேமா ஆழ்பள்ளம் 16) ஜிப்சக்கனிம ஆழ் பள்ளம் 17) ஓசனோகிராவ்வர் ஆழ்பள்ளம் 18) கெப்ரிட் ஆழ் பள்ளம் என்பவை அப்பகுதியில் ஆராய்ச்சி நடத்திய கப்பலின் பெயர்களாகும். உள்ள ப்ராயுசாக் நிறுவனத்திடம் கேட்டுக்கொண் டுள்ளன. இவை இப்பகுதியிலிருந்து 15;000 டன் குழை சேற்றை வாரி எடுத்து இன்றியமையா உலோகங்களாகிய துத்தநாகம், செம்பு, ஈயம், வெள்ளி போன்றவற்றைப் பிரித்துப் பார்த்ததில் இவ்வுலோகச் செறிவிலிருந்து 2500 மி. டாலர் பெறுமான உலோகங்களைப் பெறமுடியும் என்று தெரிய வந்ததுள்ளது. இவற்றினின்று கிடைக்கக் கூடிய துணைப் பொருள்களான பிற உலோகங்கள் குறிப்பாக இரும்பு, மாங்கனீஸ், தங்கம், பாதரசம் போன்றவை சேரா. கடல் தளத்திற்கும் கீழே கிடைக்கும் தாதுப்படிவுகள். இவற்றில் 350 ஆண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் செல்லும் துளையிட்ட சுரங்கத்தின் (shaft) மூலம் ஸ்காட்லாந்தில் எடுத்து வரும் நிலக்கரியைக் குறிப் பிடலாம். 1972இல் ஜப்பான் இம்முறையில் நிலக் சரியைத் தோண்டி எடுத்துள்ளது. இங்கிலாந்தில் 550 மி. டன்னுக்கு மேல் இந்நிலக்கரியின் மூல இருப்பு, கடலுக்கடியில் இருப்பதாகக் கண்டுள்ளனர். பின்லாந்தின் எல்பத் தீவிலும், ஆஸ்திரேலியாவின் குக்காட்டூத் தீவிலும், நியூபவுண்ட்லாந்தின் பெல் தீவிலும் மேக்னட்டைட் படிவுகளையும் மணலை யும் கடலுக்கடியில் சுரங்கமிட்டு எடுக்கின்றனர். பின்லாந்து இவ்வகையான பல பில்லியன் டன் படிவு இருப்பு இரும்பைக் கொண்டிருந்தாலும் கடலுக்கடி யில் இருந்து ஆண்டிற்கு 3000,000 மி. மெ.ட. தான் வெளிக் கொணர்கிறது. மெக்ஸிகோ வளைகுடாவி லும் வட கடலிலும் 1000 மீ. கனமுள்ள பொட் டாசியம் உப்புப்படிவு, கடலுக்கடியிலுள்ள உப்பு மலைகளைச் சார்ந்து காணப்படுகிறது. கிராண்ட் தீவிற்கு அருகில் கடலினுள் கிடைக்கும் உப்புப்படிவைத் தோண்டியெடுக்கின்றனர். டாஸ் மேனியாவிலுள்ள கிங் தீவில் சுரங்கமிட்டு 25,500 டன் ஷீலைட் கனிமத்தைக் கரைக்குக் கொண்டு வருகின்றனர். மேலும் கண்ட த்தட்டுப் பிளவுப் பெயர்ச்சி எல்லையில் காணப்படும் ஆழ்குழி அல்லது பிளவுகளின் வழியே ஊற்றிக் கொண்டிருக்கும் எரி குழம்புகள் பாறைகளையும், வண்டல் படிவுகளையும் கரைப்பதால் மிகு அளவான சல்பைடு தாதுப் படிவு கள் உண்டாகின்றன. தொடர்ந்து ஏற்படும் சுண்டப் பெயர்ச்சியின் (continental drift) காரணமாக அவை நாளடைவில் தொடர்ந்து படிந்து வண்டல் படிவு களால் புதையுண்டு காணப்படுகின்றன. இத்தாதுப் படிவுகள் உலகின் பெருங்கடல் பகுதிகளில் பிளவு அச்சிற்கு இணையாக 500 இடங்களில் கிடைக்கும் என்று கருதுகின்றனர். இப்பாறைகள் வண்டல் படிவுகளுக்கு அடியில் இருப்பதாலும், செம்பு, வெள்ளி, நிக்கல் போன்ற உலோகங்களின் செறிவு மிகுந்து (25%) இருப்பதாலும், இவற்றைத் தோண்டி எடுப்பதற்கான முயற்சிகளை அனைத்து முன்னேற்ற நாடுகளும் எடுத்து வருகின்றன.