கடல்சார் கனிமங்கள 177
கடல்சார் கணியங்கள் 171 உள்ள லிட்டருக்கு மேல் குடிநீர், கடல்நீரிலிருந்து உப்பு நீக்கி (desalinator) மூலமாகக் காய்ச்சி வடிக்கப் படுகிறது. இதுபோல் 700க்கும் மேல் நாளொன் றுக்கு 25000 காலன் குடிநீர் கொடுக்கும் உப்பு நீக்கும் தொழிலமைப்புகள் உலகிலுள்ளன. கிரீஸி லுள்ள அர்கோலிஸ் குடாக்கடலில் ஓர் ஊற்று நாளொன்றுக்கு 228 மி : காலன் நீரைக் கொட்டுகிறது. இதிலிருந்து இம்மாதிரி கடலிலுள்ள ஊற்றுகளின் திறனை அறிந்து கொண்டு, குடிநீர்ப் பற்றாக்குறையைக் கடலோரப் பகுதிகளில் இத்தகைய ஊற்றுகளின் மூலமாகக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறார்கள். அணு ஆற்றல் எடுப்பதற்கு ஒரு மூலப்பொருளான கனநீர் (deutrium oxide) கனடா இந்தியா. போன்ற நாடுகளில் கடல் நீரிலிருந்து படுகிறது. 25 ட்ரில்லியன் டன் கனநீர் கடல்நீரிலிருப்ப தாகக் கருதப்படுகிறது. நார்வே எடுக்கப் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் நீரி னின்று ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் உப்பைப் பிரித்தெடுத்து வந்துள்ளனர். இது சூரிய வெப்பத்தில் ஆவியாக்கும் முறைகளின் மூலமாகவே பெரும் பாலும் பல இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது (படம் 7). கடல் நீரில் வாழும் சில உயிரினங்கள் அதிலுள்ள உலோகங்களை ஈர்த்துச்சேர்த்து வைக்கக் கூடிய திறனைப் பெற்றுள்ளன. லேமினேரியா 3300 பொட்டாசியம் கார்பனேட்டைக் கொண்டுள்ளது. மேலும் கடல்பாசி பொட்டாசியம், புரோமின், அயோடின் போன்றவற்றைச் சேர்க்கின்றது. இவற்றி லிருந்து 1811 ஆம் ஆண்டிலேயே புரோமின் பிரித் தெடுக்கப்பட்டது. இருப்பினும், இன்று கடல் நீரி லிருந்து நேரடியாகவே புரோமின் எடுக்கப்படுகிறது (படம் 8). 65 ppm செறிவு விகிதத்தில் காணப்படும் புரோ மின், கடல்நீரில் 104 டன் வரையிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் நிலப்பரப்பில் காணப்படும் கொதிநீர் ஊற்றுகளில் (brines) புரோமின் மிகுதியாக இருப்பதை உணர்ந்து, அதையே இதற்கு மூலத்தாதுவாகப் பயன்படுத்து கின்றனர். ஆனால் ஜப்பான், இங்கிலாந்து மற்றும் சில நாடுகள் கடல்நீரையே பயன்படுத்தி வருகின்றன. ஸ்காட்லாந்தில் கடல்பாசியிலிருந்து அயோடினைப் பிரித்தெடுத்து வந்தனர். ஆனால் அது சிலி நாட்டி லிருந்து உற்பத்தியாகும் அயோடினைப் போன்று சிக்கனமாக இல்லாமையால் நிறுத்தப்பட்டுவிட்டது. B B M B B படம் 9. கடல் நீரிலிருந்து உலகில் புரோமின், மக்னீஷியம் பிரித்தெடுக்கும் தொழிலகங்கள் அமைந்துள்ள இடங்கள் Bn - புரோமின் MA மக்னீசியம் அ. க. 7 - 12