பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல்சார்‌ நில இயல்‌ 181

எரிமலைகள், முகடுகள், ஆழ் பள்ளங்கள் ஆகியன வும் உண்டு. இந்தியாவின் தென்பகுதி, கடலால் முப்புறமும் சூழப்பட்ட ஒரு முந்நீரகமாகும். இராமேஸ்வரம் முற்றிலும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். வங்காள விரிகுடாவும், மன்னார் வளைகுடாவும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ளன. மெரி னா கடற்கரை உலகிலேயே இரண்டாம் அழகிய நீண்ட கடற்கரையாகும். அரபிக் திருவ கடலில் னந்தபுரம் அருகே உள்ள கோவளம் கடற்கரையும், கோவாவிலுள்ள அஞ்சமா கடற்கரையும் மேற்குக் கடற்கரைப் பகுதியாகும். . புளியின் மேற்பரப்பை நிலப்பகுதி, கடற்பகுதி என ஒரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். இவ்விரு பகுதிகளுக்கும், அவற்றின் தன்மைகளில் மிகுதியான மிகுதி வேறுபாடு உண்டு. நிலப்பகுதி அடர்த்தி யாகவும், கடற்பகுதி அடர்த்தி குறைவாகவும் உள்ளன. மேலும் நிலப்பகுதியின் கீழே கிரானைட் டும். கடற்பகுதியின் கீழே பசால்ட்டும் அமைந் துள்ளன. த்திட்டு, கடலின் முக்கிய அமைப்புகள் கண்ட கண்டச்சரிவு கண்ட உயர்ச்சி, ஆழ்கடல் பகுதி களாகும். கடற்கரையை ஒட்டிய பகுதி கண்டத்திட்டு எனப்படும். இப்பகுதி நிலப்பகுதியின் ஒரு தொடர்ச்சி கடல்சார் நிலஇயல் 181 யாகும். இந்தியாவில் அரபிக்கடலில், கண்டத்திட்டு 300 கி.மீ. கடலில், மீட்டர் அகலமுடையது. ஆனால் வங்கக் சில கிலோ சென்னைக்கு அருகே ஒரு தன் அகலமேயுடையது. கண்டத்திட்டுகளை அடுத்து அமைந்திருப்பது கண்டச்சரிவாகும். இப் பகுதி 1.5-2.5 கி. மீ. ஆழமுடையது. ஆனால் அகலம் மிகவும் குறைவு. 15- 80 கி.மீ. அகலமும், 4. சரிவும் உடையது. கண்டச்சரிவை அடுத்துக் காணப்படுவது கண்ட உயர்ச்சியாகும். இது 1.5-4 கி.மீ. ஆழமுடையது. சமதளம், நீரோட்டத்தால் ஏற்படும் படிவுகளால் ஆக்கப்பட்டது.. எரிமலைக் குன்றுகளும் ஆங்காங்கே காணப்படும். இவை தவிர கடலில் காணப்படும் பிற அமைப்புகள் மலை களும், ஆழ்கடல் பள்ளங்களுமாகும். முகடு கடல் படிவுகள் நிலப்படிவுகள். ஆழ்கடல் படிவு கள் என இருவகைப்படும். நிலப்படிவுகள் ஆறு களாலும், கரையோரம் அலைமோதும் அலைகளா லும் அடித்து வரப்பட்டு அலைகளாலும், நீரோட்டத் தாலும், காற்றாலும் கடலடியில் பரப்பப்படுகின்றன. காற்று, எரிமலை, பனிக்கட்டி ஆகியவையும் கடற் படிவுகள் உருவாக உதவுகின்றன. ஆழ்கடல் படிவுகள் ருவகைப்படும். முதல் வகை களிமண், நுண்ணிய உயிரினங்களின் கூடுபடிவுகள்: இரண்டாம் நுண்துகள் வகை பரவு நீரோட்டப் படிவுகளாகும். ஆழ்கடல் படிவுகள் 1 செந்நிறக் நிலப்படிவு குளோபிசெரினா கோக்கோலித் டெரோபாடு களிடண் டயாட்டம் ரேடியோலேரியா நிக்கல் இரும்பு உருண்டைகள் திமிங்கில எலும்பு சுராப்பற்கள் படம் 3. கடல்சார் படிவுகள் மாங்கனீசு உருண்டைகள்