கடல் சிங்கம் 187
கடல் சிங்கம் 187 f உள்ள பகுதிகளிலும், கலபாகஸ் தீவுகள் முடியும் பகுதி வரையிலும் கடல் சிங்கத்தின் ஓரினம் காணப் படுகிறது. சில இனங்கள் ஆண்டுக்கொரு முறை சீரான நீண்ட வலசை போகும் தன்மை கொண்டுள் ளன. வட பசிபிக் பெருங்கடலில் இனப்பெருக்கம் செய்யும் சில இனங்கள் ஒவ்வோர் ஆண்டும் கலிஃபோர்னியா வரையிலும் வலசை போகின்றன. கலிஃபோர்னியா கடல்சிங்கங்கள் பொதுவாகக் சிறைப்பட்ட நிலையிலேயே உள்ளன. இவற்றில் சில சர்க்கஸ்களில் பழக்கப்படுத்தப்பட்டு வேடிக்கை விளை யாட்டுக் காட்ட உதவுகின் றன. அனைத்துக் கடல் சிங்கங்களிலும் மயிர்த்தோலுக்கடியில் ஒரு தடித்த ப்ளப்பர் (blubber) என்னும் கொழுப்பு அடுக்கு உண்டு. எனவே இவை தோலுக்காகவும் கொழுப்பு நெய் எடுப்பதற்காகவும் வேட்டையாடப்படுகின்றன. கடல் சிங்கத்தின் உடல் நீண்டது தலை, கழுத்து. உடல், வால் ஆகிய பகுதிகளைக் கொண்டது. தலை யில் சிறிய புறச்செவிமடல் காணப்படும். முகத்தின் நுனியில் ஓரிணை நாசித்துளைகள் உண்டு. கழுத்து, தெளிவாகத் தெரியும், உடலில் ஈரிணயான கால்கள் இருக்கும்; கால்விரல்களில் நகம் காணப்படும். பின் கால்களில் விரலிடைச் சவ்வும் இருக்கும். . புறச்செவி மடல், நீண்ட தெளிவான கழுத்து, கால்கள் அமைந்திருக்கும் முறை ஆகியவற்றில் கடல் சிங்கங்கள் உண்மையான சீல்களிலிருந்து வேறு படுகின்றன. உண்மையான சீல்களைப் போலவே இவற்றின் ஒவ்வொரு காலின் விரல்களும் இணைக்கப் பட்டுத் துடுப்பாக உள்ளன. ஆனால் பின் கால் விரல்கள் தனித்தனியாகத் தோல்பட்டை போன்று வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. சுடல்சிங்கங் களின் இடப்பெயர்ச்சி உண்மையான சீல்களின் இடப் பெயர்ச்சியினின்றும் வேறுபட்டுக் காணப்படுகிறது. உண்மையான சீல்களைவிட இவற்றின் முன்கால் நீண்டவை. பின்கால்களும், கடல் சிங்கம் தரையி லிருக்கும்போது உடலுக்கடியில் அவற்றை நீட்டிச் சுழற்றுவதற்குப் போதுமான அளவு நீண்டவை. கடல் சிங்கங்கள் குறைவான தொலைவை நாலுகால் பாய்ச்சலில் துள்ளலுடன் ஓடிக் கட க்கும். நீரில் முன்கால் துடுப்புகளின் உதவியால் நீந்தும். பின் கால்கள் நீந்துவதற்குப் பயன்படுவதில்லை. கடல் வயது வந்த ஆணும் பெண்ணும் உருவத்தில் இனங்களில் ஆ வேறுபடுகின்றன. சில ஆண் சிங்கங்கள் பெண் கடல்சிங்கங்களைவிட இருமடங்கு பெரியவையாக இருக்கும். அவை மிகுதியான கழுத் துத் தசைகளுடனும், கழுத்திலும் தலையிலும் பிடரி மயிருடனும் காணப்படும். கடல்சிங்கங்கள், அவற்றின் சொரசொரப்பான வெளிமுடிகளுக்கு அடியில் தடித்த மென்மையான முடிகளைக் கொண்டிருக்கும். இளம் கடல் சிங்கங்கள் மற்றும் பெண் கடல் சிங்கங்களின் பதப்படுத்தப்பட்ட தோல்கள் விலை மிகுந்தவை. கடல் சிங்கங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங் களில் அவற்றின் மந்தைகள் அறிவியல் முறையில் நன்கு பேணப்பட்டு, அந்த இனம் அழிந்து போகாத அளவுக்குப் பாதுகாக்கப்பட்டு, ஆண்டுதோறும் அவற் றின் தோல்கள் உரிக்கப்படுகின்றன. வடதுருவம் மற்றும் தட்பப் பகுதிகளில் உள்ள தெற்கு, வடக்குப் பெருங்கடல்களில் பலவகையான மென்மயிர்த்தோல் சீல்கள் (fur seals) காணப்படுகின்றன. வடக்கு மென் மயிர்தோல் சீல்கள் (northern fur seal callorhinns ursinus) வட அமெரிக்கக் கடற்கரை நீரில் அலாஸ் காவிலிருந்து மெக்ஸிகோ வரை காணப்படுகின்றன. அவை பிரைபைலோப் தீவுகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. தெற்கு மென்மயிர்த்தோல் சீல்கள் (southern fur seal - arctocephalus arctaphoca) துருவம் முதல் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா. ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து வரை பரவியுள்ளன. - கடல் சிங்கத்தின் குரல் உண்மையான சீலின் குரவைவிடக் கரகரப்பானது. அக்குரல் குரைத்தல் போன்றோ, காட்டுவாத்தின் கூச்சல் போன்றோ. உறுமுகின்ற முழக்கம் போன்றோ இருக்கும். இனப் பெருக்கக் காலங்களில் கடல் சிங்கங்கள் அனைத்தும் பெருங்கூட்டமாக வாழும். தொலைவில் உள்ள தீவுகளில் சில சிற்றினங்களில், மந்தைகளாகக் கூடும். அவற்றில் நன்கு வரையறுக் கப்பட்ட அந்தப்புர அமைப்பு காணப்படும். அந்தப் புரங்களை முதிர்ந்த ஆண்கள் விழிப்பாக இருந்து தங்களுடைய எல்லைகளைப் பாதுகாக்கும். ஆண்கள் தனித்தனி மந்தைகளாகக் கூடும். லட்சக்கணக்கில் 'ளம் கடல் சிங்கங்கள் கணவாய் மீன்களையும், மீன் களையும் உண்ணும். கரையில் இருக்கும்போது ஆண் கள் பல மாதங்கள்வரை பட்டினி கிடக்கும். ஆனால்