பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கடல்‌ சிலந்தி

188 கடல் சிலந்தி உண குட்டிகளை ஈன்றெடுத்த பின்பு பெண் கடல்சிங் கங்கள் கடற்கரையிலிருந்து பெரும்பாலும் வுண்ணுவதற்காக இடையிடையே கடலுக்குள் செல்லும். இவற்றின் பேறு காலம் 10-11 மாதங்கள் ஆகும். கடல் சிலந்தி கு. வரதராசன் உலகில் இது அவையிடைப்பகுதியிலிருந்து ஆழ்கடல் பகுதி வரை காணப்படும் சிலந்தி போன்ற தோற்றமுடைய விலங்காகும். கணுக்காலித் தொகுதியில் பிக்னோ கோனிடா வகுப்பைச் சேர்ந்த இக்கடல் சிலந்திகளில் ஏறத்தாழ 600 இனங்கள் உள்ளன. இவை அனைத்துக் கடற்பகுதிகளிலும் காணப்பட்டபோதும் குளிர்ந்த கடற்பகுதிகளிலேயே மிகுதியாகக் காணப் படுகின்றன. 12 பேரினங்களையும் 6 குடும்பங்களை யும் சேர்ந்த 23 இனக் கடல் சிலந்திகள் இந்துமாக் கடவில் உள்ளன. கடல்வாழ் செடிகள் அல்லது இடம் பெயரா உயிரிகளின் மேல் ஊர்ந்தும் கடலடிப் பரப்பிலும் இவை வாழ்கின்றன. சில சமயங்களில் இவை தம் கால்களின் சிறகடிப்பது போன்ற இயக் கத்தால் நீந்துகின்றன. அவ்வாறு நீந்தும்போது மிதவையுயிரிகளுடன் இவை தொகுக்கப்படுவதுண்டு. பெரும்பாலும் கடல் சிலந்திகள் 1-10 மி.மீ. நீளமுடையவை. ஏறத்தாழ 2 அடி நீளம் வரை வள ரும் கொலாசெர்டீஸ் ஜைகாஸ் எனப்படும் ஆழ்கடல் இனமே அனைத்துக்கடல் வாழ் சிலந்திகளிலும் பெரி யது. நிறம் கவர்ச்சியற்றதாக இருந்தபோதும் இவற் றில் சில, பச்சை அல்லது சிவப்பு நிறமுடையவை. உடல் தலை மார்புப் பகுதி, கண்டங்களுள்ள இடைப்பகுதி, குறைவுபட்ட வயிற்றுப் பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வாயைச் சூழ்ந்து நீள் உருளை வடிவான உறிஞ்சுகுழல் (probascis) உள்ளது. தலைமார்புப் பகுதியுடன் இடுக்கிக் கால்கள், பேரிடுக்கி (pedipalps), சினை தாங்கிகள், நடக்கும் கால்கள் எனும் நாலு யுறுப்புகள் இணைந்துள்ளன. சினைதாங்கிக் கால்கள் ஆண் பெண் இருபால் வகைகளிலும் காணப்பட்டா லும். பிக்னோகோணம் ஃபோக்சிகிலஸ் போன்ற பேரினங்களில் உள்ள பெண் உயிரிகளில் சினை தாங்கிக் கால்கள் இல்லை. தலைமார்புப் பகுதியில் சிறு கண் மேடுகளின் மேல் நான்கு கண்கள் உள்ளன. ஆழ்கடல் இனங்களில் கண்கள் இல்லை. னை கால்கள் மார்புக் கண்டங்களின் மருங்கு நீட்சி களுடன் இணைந்துள்ளன. கால்கள் எட்டுக் கரணை களால் ஆனவை. ஒவ்வொரு காலின் நுனியிலும் ஒரு கூர் நகம் உள்ளது. சிறியதாகவும் குறைவுபட்டும் காணப்படும் வயிற்றுப் பகுதியில் களில்லை. இணையுறுப்பு பெண் கடல் சிலந்தியில் ஓர் இணை சினையகங் சினை களும் பல சினையணு நாளங்களும் உள்ளன. யணு நாளங்கள் கால்களின் அடிப்பகுதிக்கு அருகில் திறக்கின்றன. ஆண் கடல் சிலந்திகள் முட்டைகளைச் சினைப்படுத்திச் சாந்துச் சுரப்பிகளால் ஒன்றோடு ஒன்று ஒட்ட வைத்து அச்சினையணுக் குவியலைத் தம் சினை தாங்கிக் கால்களில் சுமக்கின்றன. சில சினையணுக் குவியலில் 1000 முட்டை டகள் வரை இருக்கும். ஆண் கடல்சிலந்திகள் பலமுறைக் கலவி யால் ஒரே சமயத்தில் பல சினையணுக்குவியலைத் தம் சினைக் கால்களில் தாங்கிக் கொண்டிருக்கும். ணை ஆண் கடல் சிலந்திகளால் அடைகாக்கப்படும் இம்முட்டைகளிலிருந்து வெளிவரும் இளவுயிரி. நாப்ளியஸ் இளவுயிரி போலுள்ளது. இளவுயிரியின் குட்டையான உடல் பல கண்டங்களாகப் பிரிக்கப் படவில்லை. மூன்று இணையுறுப்புகளும் ஓர் ஒற்றைக் கண்ணும் உள்ளன. முதல் இணைக்கால்கள் கிடுக்கி அமைப்புடையவை. இரண்டு, மூன்றாம் யுறுப்புகள் ஒற்றைக் கிளையுடையவை. இந்த இளவு யிரியில் ஒரு சி று உறிஞ்சு குழல் உண்டு. இது சில காலத்திற்கு ஹைட்ராய்டுகள் (hydroids) பவளங்கள் ஆகியவற்றில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து உருமாற்றமடைகிறது. கடல்சிலந்திகளிடம் தேள் இனப் (அராக்னிடா) பண்புகள் காணப்பட்டாலும் அவை தேளினங்கள் அல்ல. அரக்னிடாப் படி மலர்ச்சி நிலையில் உடற்கண்டங்களும் அவற்றுடன் பின் ணைந்துள்ள இணையுறுப்புகளும் நிலையான தன்மை பெறாத ஒரு நிலையிலிருந்து சில மாற்றங் கள் பெற்று இவ்வுயிரிகள் தோன்றியிருக்கலாமென நம்பப்படுகிறது. பிக்னோகோனிடா வகுப்பு நிம்