கடல் தரைப்பரவல் 191
நன்றாகப் பொருந்தக்கூடியன என்பது புலனாயிற்று. இதனால் கண்டப்பிரிவுகள் ஏறத்தாழ 150மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு வகையில் ஏற்படத் தொடங்கிவிட்டன என்று நம்பலாம். ஊடுருவிகள் கடல்தரை பரவலுக்குக் காரண ணம் அல்ல. எரிமலை வாயிலிருந்து வெளிப்பட்ட பாறைகளின் விருந்து உருகிய நிலையிலுள்ள பாறை கடல்தரை மட்டத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் தான் உள்ளது என்று தெரிய வந்தது. மலையின் மூலக்கோட்டிற்கு அருகே உள்ள கசிவுகள் மிகவும் குறுகியனவாகக் காணப்படுகின்றன. ஆய்வி ம் மூலக்கோட்டிற்குத் தொலைவில் உள்ள முறிவு களின் அகலம் முடிவாக 30 மீட்டர் வரை அதிக மாகிறது. இந்த அடையாளம் மலை சிறிது சிறி தாகத் தொடர்ந்து இழுக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. கடல் தரையின் பழம்பாறை மலைப் பொருள்களால் புதியதாக மாற்றி அமைக்கப் படுகிறது என்னும் உண்மையை தனால் நன்றாக உணர முடிகிறது. ஏரி கடற்கரை ஒரு பெரிய தொடர் இறுக்கி (belt) போல் இயங்கிப் புதிய சுடல் மேற்பரப்பை நகர்த்துகிறது. அதாவது பள்ளத்தாக்கு, கடல்மலை. கடல் தீவுகள், பீடபூமிகள், கண்டங்கள் இவற்ை றை நோக்கி நகர்த்துகிறது. இதனால் தட்டுகள் ஒன்றை ஒன்று மோத வழி பிறக்கிறது. தட்டுகள் ஒன்றை யொன்று மோதும்போது ஒரு தட்டு மற்றதன் அடி யில் மூழ்கி அழியும். இவ்வாறு நிகழும்போது ஓர் ஆழ்கடல் பள்ளத்தாக்கு உருவாகிறது. கடல்தரை அழிந்து, அழிந்து நிலப்பொருளாகி உருமாறும் இடங்கள் தட்டு எல்லைகளாக வளர் கின்றன. மலைத்தொடர்கள் இவ்வாறு ஏற்பட்ட வளர்ச்சியின், பின் வளர்ச்சியாகவே கருதப்படு கின்றன. இவ்வாறு வளர்ச்சி ஏற்படும் காலங்களில் உந்துவிசைகளாலும் மா றுபாடுகளாலும் மலைத் தொடர்கள் தாக்கம் அடைகின்றன. நில எல்லைக் கோட்டில் ஒரு தட்டு, பல மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறிதுசிறிதாக மூழ்கிக் கொண்டு இருக்க முடியும். எவ்வாறிருந்தாலும் மூழ்கும் தட்டு ஒரு கண்டத்தின் கட்டியைத் தாங்கிக் கொண்டிருந்தால் தடைகள் மிகுதியாகிக் கண்டங்களுக்கிடையே மோதல் ஏற்படும். இவ்வாறு ஏற்படின் மூழ்குவது நிற்க வேண்டும் அல்லது திசை மாறி மூழ்க வேண்டும். ஏனெனில் அடர்த்தி, குறிப்பிட்ட அளவிற்கு மிகுந் துள்ள இடங்களில் கண்டக் கட்டி தொடர்ந்து மூழ்க இயலாது. புவியின் மேல், நில, கடல் வெளிகள் பல முறை பிளவுபட்டும், மோதிக்கொண்டும் மீண்டும் இணைந் தும் விலகிச் சென்றும் உள்ளன. இந்தக் காலத்தை அளக்கப் புவியியல் கால் அளவை ஒன்றர்ல்தான் இயலும். இந்த நிகழ்ச்சிகளால் மலைத்தொடர்கள் கடல் தரைப்பரவல் 191 இருக்கும் நிலைகளையும். இடங்களையும் அவை ஏற்பட்ட விதங்களையும் பற்றி விளக்க முடியும். நில நீர்க்கண்டங்களுடன் உலகத்தின் தோற்றமும், மறு தோற்றங்களும் பல முறை கடந்த காலத்தில் நடந்தமையால் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பட்டிருக்க வாம். கடல்தரைப்பரவல், தட்டு உள் நிகழ்ச்சி ஆகிய ரண்டு கொள்கைகளும் அறிவியல் வல்லுநர்களால் விளக்கம் தரத்தக்க நிலையில் உள்ளன. பிற காள்கைகளை விட வை மிகவும் சிறந்தவையா இவை புவியியல் உண்மைகளைத் தொடர்பு படுத்துவதோடு உலகக் கட ற்கரைத் துளைத்தல் மூலம் கிடைத்த முடிவுகளுடன் ஒத்துப்போக கூடியன வாகவும் உள்ளன. கும். புவிக்காந்தவியல் சான்று. (paleomagnetic) தட்டு உள் நிகழ்ச்சிக் கருத்திற்குக் தொல் காந்தவியல் ஆராய்ச்சி தக்க சான்றாக விளங்குகிறது. தொல் பாறைகளின் மூலம் பண்டைக் காலத்துப் புவிக்காந்த வியல், திசை இலற்றைப் பற்றி அறிய முடியும். அதாவது கற்கள் உருவாகும்போது கியூரி வெப்பத் திற்கு அப்பால் குளிரும்போது புவிக்காந்தவியல். காந்த ஆற்றலாக சுற்களில் மாறும். கற்கள் எடுக்கப் பட்ட பகுதியின் அகலாங்கு நெட்டாங்குக் கோடு களைக் கொண்டு பண்டைக் காலத்தில் புவிக்காந்த ஆற்றலைப் பற்றிய உண்மைகளை அறியலாம். இவ்வாறு நடத்திய ஆய்வுகளின் மூலம் புவிக்காந்த ஆற்றல் பலமுறை திசைமாறி மாறி இயங்கி வந்திருக் கிறது என அறியலாம். கடவடியிலிருந்து எடுக்கப் பட்ட கற்களிலும் மேற்கூறிய உண்மைகள் புலனா கின்றன. வெப்ப ஓட்டம். புவிப்போர்வையில் உள்ள உருகிய பாறைகள் மலைகள் ஏற்படுத்தும் சலனத்தால் கடல் தரைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இதனால் பாறைகள் அழியும் இடங்களில் (subduction) குளிர்ந்த கடற்பாறைகள் உள் இழுக்கின்றன. வெப்ப மேல் நோக்கு ஓட்டம் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படு கிறது. மலைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும், இடை யே வெப்பம், கடத்தல் மூலமே பரவுகிறது. கடற்கரைப் பகுதிகளிலும், கடல்தரைப் பகுதிகளிலும் நடத்திய ஆய்வுகள் இந்த உண்மையைத் தெளிவாக்கு கின்றன. படிவுகளின் வெப்பநிலையும், அவற்றின் வெப்பக் கடத்து திறனும் கடலியல் வல்லுநருக்குப் பல கணக்குகளைக் கடல் தொடர்பான வகையில் முடிவு செய்ய உதவுகின்றன. பள்ளத்தாக்குகளில் வெப்பம் சராசரி அளவை விடக் குறைவாகவும் மலைகளில் சராசரி அளவை விட மிகுதியாகவும் உள்ளது. வெப்பப் பரவலுக்கும் கடல்தரை அமைப்பிற்கும் தொடர்பு உள்ளதாக அறியலாம். வெப்பம் என்னும் உருவில்லாத பொருள், நிலம், நீர் அமைப்புகளை மாற்றி அமைக்க உதவு