கடல் தீவுகள் 193
திற்கு அருகில் உள்ள மடகாஸ்கரும், மொரிசியஸும், ஆஸ்திரேலியக் கண்டமும் கடல் தீவுகளே. புவியில் 16 பெரிய தீவுகளும் ஆயிரக்கணக்கான சிறிய தீவு களும் உள்ளன. . கடல் தீவுகள் பலவகைப்படும்.. அவை நில அண்மைத் தீவுகள், எரிமலைத் தீவுகள், பவளப் பாறைத் தீவுகள், மலை முகட்டுத் தீவுகள், வண்டல் மண் தீவுகள் எனப்படும். நிலப்பகுதிக்கு மிக அருகில் உள்ள கடல்தீவுகள் நில அமைப்புத் தீவுகள் எனப் படும். இங்கிலாந்து, இலங்கைத் தீவுகள் இவ் வகுப்பைச் சார்ந்தவை. இவ்வகைத் தீவுகளின் நில அமைப்பும் படிவுகளும் அண்மையில் உள்ள நிலப் பகுதியை ஒத்திருக்கும். இலங்கையின் நில இயல் தென்னிந்தியாவின் நில இயலோடு ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான், நிக்கோபர், இராமேஸ்வரம் தீவுகளும் இவ்வகையைச் சேர்ந் தனவே. கடலுள் பல்வேறு மலைத்தொடர் முகடுகள் மறைந்துள்ளன. இந்தியக் கடல் முகடு, அட்லாண்டிக் கடல் முகடு போன்ற முகடுகள் உள்ளன. இந்த முகடுகளின் மேற்பகுதி சில இடங்களில் கடல் நீருக்கு வெளியே தோன்றித் தீவுகளாக அமைந்துள்ளன. மத்திய அட்லாண்டிக் கடல் முகட்டில் உள்ள கடல் தீவுகள் 193 அசென்சியான் தீவும், அர்ஜென்டினாவுக்கு. அருகில் உள்ள பாக்லாந்து தீவுகளும் மலைத்தொடர் முகட்டுத் தீவுகளாகும். இவ்வகைத் தீவின் நிலஇயல், அருகே உள்ள நில இயலிருந்து முற்றிலும் வேறு பட்டிருக்கும். எரி கடலுக்கு அடியில் பல எரிமலைகள் உள்ளன. வை அவ்வப்போது வெடித்துச் சிதறுவதுண்டு. அவ்வாறு சிதறும்போது அதிலிருந்து வெளிப்படும் பாறைப் பொருள்களும், பாறைக் குழம்பு உறையும் போது உருவாகும் பாறைகளும் படிந்து தீவாக வளர்வதுண்டு. ஜப்பான், ஐஸ்லாந்து நாடுகள் ஏரி மலைத் தீவு நாடுகளாகும். ஐஸ்லாந்து நாட்டில் வெந்நீர் ஊற்றுகளும், நீராவி ஊற்றுகளும் மிகுதியாக உள்ளன. இத்தீவைச் சுற்றி ஏறத்தாழ 200 மலைகள் உள்ளன. எரிமலைகளின் இயக்கத்தால் புதிய தீவுகள் தோன்றுவதும் பழைய தீவுகள் திடீரென மறைவதும் உண்டு. 1963 ஆம் ஆண்டு சர்ட்செய் என்னும் புதிய தீவு தோன்றியது. 1972 இல் கைபர் பக்கிலாஸ்கர் என்னும் தீவு திடீரென மறைந்து போயிற்று. ஜப்பான் நாட்டில் உள்ள வெந்நீர் ஊற்றுகளிலிருந்தும், எரிமலை வெப்பத் திலிருந்தும் கிடைக்கும் வெப்ப ஆற்றலைப் பயன் படுத்தி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நாட்டில் படம் 1. தொடுபாறைத்தீவு: இங்கிலாந்து சாலமன் தீவு அ.க.7-13