பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கடல்‌ தெங்கு

194 கடல் தெங்கு படம் 2. பவளத்திட்டுத் தீவு கிடைக்கும் கந்தகப் படிவுகள் எரிமலைப் படிவு களாகும். கடல் வாழ் உயிரினங்களுள் பவளப்பூச்சிகள் கோடிக்கணக்கில் கூடி வாழும் தன்மையுடையவை. கடலில் இப்பூச்சிகள் பெருகி வாழ்ந்து மடியும்போது இவற்றின் கூடுகள் சுண்ணாம்புக்கல் பாறைகளாகிப் பின்னர் தீவுகளாகின்றன. இத்தீவுகள் நிலத்தை ஒட்டி வளர்ந்திருக்கும் தொடு பாறைத்தீவுகள், தடைப்பாறைத் தீவுகள், பவளத்திட்டுப் பாறைத் தீவுகள் என மூவகைப்படும், ஆஸ்திரேலியக் கண்டத் தில் உள்ள பெரும் தடைப் பவளப் பாறை சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தீவு ஏறத்தாழ 1500 கி.மீ. சுற்றளவுடையது. இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத் தீவு 12 பவளத்திட்டுப் பாறைத் தீவுகளையும், 2000 சிறிய தீவுகளையும் கொண்டது. அரபிக் கடலில் உள்ள லட்சத் தீவு பாறைத் தீவுகளைக் கொண்டது. 27 பவளப் a உ மேலும் ஆற்றால் அடித்து வரப்படும் வண்டல் கடல் படிவுகளால் மண்மேடாகி உருவாகும் தீவு களும் உண்டு. இவ்வகைத் தீவுகள் மேற்கு வங்கக் கடற் பகுதியில் காணப்படும். கடல் தெங்கு இராம. இராமநாதன் இது ஒருவித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாகும். இதன் குடும்பம் அரிகேஸ்; தாவரவியல் பெயர் லொடாய்சியா மால்டிவிகா (lodoicea malde தெங்கு,மால்டைவ் vica). இதற்கு இரட்டைத் கொட்டை, பெரும் தேங்காய் எனப் பல பெயர்கள் உண்டு. தோற்றம். இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கர்